இந்த வாரம் France24.com வெளியிட்ட ஒரு அறிக்கை ஈரானின் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் சீனா விவேகமாக ஆனால் முக்கியமான பங்கை வகிக்கின்றது என்று குறிப்பிட்டது.
சீனா ஈரானில் மாத்திரமல்லாமல் மத்திய கிழக்கு முழுவதும் தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. முன்னாள் ஈரானிய அமைச்சர் ஜவாத் ஐரீப்பின் புத்தகக்குறிப்புகளை மேற்கோள்காட்டி இந்த அறிக்கை வளர்ந்து வரும் சீனா – ஈரானிய உறவை தெளிவுபடுத்துகிறது.
2015 ஒப்பந்ததிற்கு வழிவகுத்த பேச்சுக்களில் இருதரப்புகளுக்கு இடையில் எப்போதெல்லாம் பேச்சுக்களுக்கு முட்டுக்கட்டைகள் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் சீன அணி ஒரு புதிய முயற்சியை முன்வைத்து அந்த பேச்சுக்களுக்கு எப்படியாவது புத்துயிர் கொடுப்பதற்கு முயற்சித்து வந்தார்கள் என இரு வருடமாக திரைமறைவில் இடம் பெற்ற பேச்சுக்களில் கலந்து கொண்ட தனது அவதானிப்பை அவர் விபரிக்கிறார்.
ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆற்றல், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொடர்பு போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய 25 ஆண்டு கால இருதரப்பு உடன்படிக்கையை கையெழுத்திட்டதன் மூலம் சமீபத்திய மாதங்களில் பெய்ஜிங்கிற்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான உறவுகள் ஒரு புதிய படியை அடைந்துள்ளன.
தள்ளுபடி விலையில் எண்ணெய் விநியோகம் தவிர, ஜனவரி 15 முதல் நடைமுறைக்கு வந்த இந்த மூலோபாய ஒப்பந்தம், ஈரானுக்கு இராணுவ உபகரணங்களை வழங்குவது உட்பட, சீன பாதுகாப்பு உதவியையும் வழங்குகிறது. “சீனா இவ்வகையான உடன்படிக்கைகளில் மிகக் குறைவாகவே கைச்சாத்திட்டுள்ளது. இது ஒரு தீர்க்கமான இராஜதந்திர கூட்டணியாகும்” என்று டி மெக்லியோ கூறினார்.
சீனா ஈரானுடன் மட்டுமல்ல, மற்றைய மத்திய கிழக்கு நாடுகளுடன் கூட ஈடுபாட்டை காட்டி வருகிறது. மேலும் சீனா தொடர்பான நிபுணர் ஜான்-பிரான்கோயிஸ் டி மெக்லியோவை மேற்கோள் காட்டி, இவ்வறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“மத்திய கிழக்கு சீன இராஜதந்திரத்தின் முக்கிய அங்கம் அல்ல. ஆனால் ஈராக் ஓர் திருப்புமுனையாக அமைந்து இந்நிலை கடந்த ஐந்து ஆண்டுகளில் மாறிவிட்டது.” என்று டி மெக்லியோ கூறுகிறார். “போருக்குப் பிறகு, சீனா ஈராக் எண்ணெய் வயல்களை சுரண்டுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது, தற்போது அவற்றை புனரமைத்து வருகிறது.”
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அப்பிராந்தியம் தொடர்பான முடிவுகளில் சீனா தனது வாக்கு பலத்தை முழு பலத்தடன் பாவித்தும் வருகிறது
ஈரான் மற்றும் சிரியா தொடர்பான பஷர் அல்அசாத்துக்கு சாதகமான ரஷ்ய நிலைப்பாடுகளுடன் சீனாவும் கிட்டத்தட்ட தன்னையும் அதேவிதத்தில் இணைத்துக் கொள்வதும் இதில் அடங்கும்.
பெய்ஜிங்கிலும் கடந்த சில வாரங்களாக, சீன ராஜதந்திரம் முழு வேகத்தில் வேலை செய்தது. ஜனவரி 10 மற்றும் 14 க்கு இடையில், வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ அப்பிராந்தியத்தின் தனது வெளிநாட்டு சகாக்களில் ஐந்து பேருக்குக் குறையாமல் பெய்ஜிங்கில் சந்தித்தார்.
சவுதி அரேபியாவின் இராஜதந்திர தலைவர்கள், குவைத், ஓமன், பஹ்ரைன், ஈரான், துருக்கிய வெளியுறவு அமைச்சர் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் பொதுச் செயலாளர் என பலர் (GCC) சீன தலைநகருக்கு மாறி மாறி வருகை தந்தனர்.
இருதரப்பு பிரச்சினைகளுக்கு மேலதிகமாக இந்த விஜயங்கள் ஈரானிய அணுசக்தி பிரச்சினையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அவை குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் வாய்ப்பாக இருந்தது. அமெரிக்கா செல்வாக்கை இழக்கும் பிராந்தியத்தில் சீனா இப்போது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை வாஷிங்டனுக்கு காட்ட இது ஒரு வாய்ப்பாகும்.
அதிகரித்த சீன நடவடிக்கை சீனத்தின் விளைவு மட்டுமல்ல; மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதின் விளைவுமாகும். அமெரிக்கா தனது ‘தொடர் போர்களை’ முடித்துக்கொண்டும், தனது ஒட்டுமொத்த இருப்பைக் குறைத்தும் கொள்ளும் சந்தர்ப்பத்தில்
அந்த இடைவெளியை நிரப்ப மற்ற சக்திகள் விரைவது இயற்கையே. இருப்பினும் மத்திய கிழக்கிற்குள் சீனாவின் அத்துமீறலை அமெரிக்கா அச்சுறுத்தலாக பார்க்கிறது என்று நினைப்பது தவறாகும். சில சந்தர்ப்பங்களில், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சீனாவின் தலையீட்டை அமெரிக்காவே அழைத்தது என நாம் அறிகிறோம். உலக விவகாரங்களில் இருந்து பல நூற்றாண்டுகளாக விலகியதன் காரணமாக, சர்வதேச விவகாரங்களின் நவீன அரசியல் புரிதல் சீனர்களுக்கு குறைவாக உள்ளது. ஆதலால் சீன ஈடுபாட்டால் அமெரிக்கா அச்சுறுத்தப்படவில்லை என்பதே உண்மை. சீனா, சாராம்சத்தில் ஒரு பிராந்திய சக்தி மட்டுமே. எனவே சீனாவிடம் இருந்து அமெரிக்கா எதிர்கொள்ளும் உண்மையான அச்சுறுத்தல் எதுவென்றால், அதன் பிராந்தியத்திற்குள்ளும், தென் சீனக் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு அப்பால் சீனாவின் அதிகரித்து வரும் இராணுவப் பிரசன்னமாகும். அமெரிக்கா, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களை தனது தனிப்பட்ட கடல்களாகக் கருதுகிறது. இந்த இரண்டு கடல்களிலும் வெளியாரின் செயல்பாடுகள் குறித்து அஞ்சுகிறது. உண்மையில், மேற்கு நோக்கிய சீன நடவடிக்கைகளை அமெரிக்கா ஊக்குவித்ததற்கு ஒரு காரணம், அமெரிக்க கண்டத்தில் இருந்து சீனாவின் கவனத்தைக் குறைப்பதற்குமாகும்.
அல்லாஹ்வின் அனுமதியுடன், அனைத்து முஸ்லிம் நிலங்களையும் ஒருங்கிணைக்கும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விடுவித்து, இஸ்லாமிய ஷரியாவை அமல்படுத்தும் நபி (ஸல்) அவர்களின் முறைப்படி அமையும் இஸ்லாமிய கிலாஃபத் அரசை மீண்டும் நிறுவுவதன் மூலம் முஸ்லிம் உம்மத் அனைத்து வெளிநாட்டு தலையீடுகளையும் விரைவில் வெளியேற்றும். அதன் மூலம் இஸ்லாமிய வாழ்க்கை முறையை மீட்டெடுத்து இஸ்லாத்திற்கான அழைப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நிலை உருவாகும். சீனாவைப் போல் அல்லாமல், கிலாஃபத் அரசு சர்வதேச அரசியல் விவகாரங்களில் அதிக விழிப்புணர்வைக் கொண்டிருக்கும். முஸ்லிம் உம்மத்தில் பரந்த அரசியல் விழிப்புணர்வு கொண்ட திறமையான அரசியல் சிந்தனையாளர்கள் உள்ளனர்.
கிலஃபத்தின் விவகாரங்களை மாத்திரம், அதன் பிராந்தியத்தின் நிலைமைகளை மாத்திரம் நெருக்கமாகப் பின்பற்றுவற்கு மேலதிகமாக, சம அளவில் உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் தார்கமீத் தலைமை என்ற அடிப்படையில் அவர்களின் நிலைமைகளை புரிந்து கொண்டும், உலக வல்லாதிக்க சக்திகளின் சூழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை துல்லியமாக உற்றுநோக்கிய நிலையிலும் அது இயக்கும் இன்ஷா அல்லாஹ்.