1994 இல் ருவாண்டாவில் இனப்படுகொலை நடைபெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அதனை முன்கூட்டியே கணித்திருந்த Genocide Watch இன் நிறுவனர் Dr Gregory Stanton, நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் நிலைமையை மியன்மார் மற்றும் ருவாண்டா நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு, இந்தியாவில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை ஒன்று வர இருப்பதாக எச்சரித்துள்ளார்.
“இந்தியாவில் இனப்படுகொலை நடக்கக்கூடும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம்,” என்று Dr Gregory Stanton, அவர் நிறுவிய அரசு சாரா அமைப்பு சார்பாக அறிவித்துள்ளார். இவ்வமைப்பு இனப்படுகொலை எனும் பாரிய குற்றத்தை முன்னறிவிக்கவும், தடுக்கவும், நிறுத்தவும் மற்றும் பொறுப்புக்கூறலைத் உத்தரவாதப்படுத்தவும் 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும்.
இந்து மதத் தலைவர்கள் படுகொலைகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அழைப்பு விடுக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் கடந்த மாதம் வைரலாக பரவியது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடும் அளவுக்கு அவை தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 14% முஸ்லிம்களும், 80% இந்துக்களும் வாழ்கின்றனர்.
மோடியின் பிஜேபி மற்றும் அதன் சித்தாந்த தோற்றுவாயான தீவிர வலதுசாரி ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்), இந்துக்கள் இஸ்லாம் மற்றும் கிறித்தவ சமயங்களுக்கு மத மாற்றம் செய்யப்படுவது குறித்து, இந்துக்களை எச்சரித்துள்ளதுடன் உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் ‘மக்கள்தொகை சமநிலையின்மையை” தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சூழுரை விடுத்துள்ளது.
குறிப்பு:
பிரித்தானிய காலனியாக இந்தியா மாறுவதற்கு முன்னர் வரை பல நூற்றாண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம்களின் இன்றைய நிலையே இது. ஏன் பிரித்தானியர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கும் போராட்டத்துக்கு கூட முஸ்லிம்கள் தான் முதலில் முன்நின்று தலைமை தாங்கினர். இன்று இந்துத்துவா கிருமிகள் முஸ்லிம்களைப் பார்த்து இவ்வாறு சூழுரைக்கின்றனர் என்றால் அதற்கு காரணம் நாம் தற்போது குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றோம் என்பதோ, வளங்கள் இன்றித் தவிக்கின்றோம் என்பதோ அல்ல. மாறாக எம்மை உண்மையாகப் பாதுகாக்கக்கூடிய முதுகெலுப்புள்ள ஓர் தலைமை எம் மத்தியில் இல்லை என்பதே அதற்கான அடிப்படைக் காரணமாகும். அத்தகையதோர் தலைமை கிலாஃபத்தின் மீள் வருகையால் மாத்திரமே உருவாகும். அதன் உருவாக்கத்தை இனிமேலும் பிற்போடாது அதற்காக இரவு பகலாக போராட வேண்டிய கால கட்டத்தில் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.