இந்து மதத் தலைவர்கள் எனும் மத வெறியர்கள் நடத்திய கூட்டமொன்றில் முஸ்லிம்களை கூட்டம் கூட்டமாக படுகொலை செய்ய முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த தீவிரவாத நிகழ்வின் வீடியோக்கள் ஓரிரு தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
வட உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வு இன்றைய இந்துத்துவா இந்தியாவின் அரசியல் இலட்சணத்தை அப்படியே வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
கூட்டத்தில் பேசிய பெண் பேச்சாளர், முஸ்லிம்களைக் கொன்றதற்காக சிறைக்குச் செல்வதைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறியது படி…
“நம்மில் நூறு பேர் ராணுவ வீரர்களாகி, அவர்களில் 20 லட்சம் பேரைக் கொன்றாவது நாங்கள் வெற்றி பெறுவோம்… நீங்கள் இந்த மனப்பான்மையுடன் நின்றால்தான், ‘சனாதன தர்மத்தை’ (இந்து மதத்தின் முழுமையான வடிவம்) பாதுகாக்க முடியும்,” என்று சூழுரைத்தாள்.
மகாத்மா காந்தியை படுகொலை செய்த இந்து கடும்போக்காளரான நாதுராம் கோட்சேவை இந்தியர்கள் அனைவரும் “வணங்கி பிரார்த்திக்க வேண்டும்” என்றும் அவள் மேலும் தெரிவித்தாள்.
அடிக்கடி மூத்த பிஜேபி உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஒரு கடுமையான இந்து குழுவின் தலைவரான பிரபோதானந்த் கிரியும் இந்த நிகழ்வில் பேசினான். அவன்‘இனச்சுத்திகரிப்பு’க்கும், “கொல்வதற்கும், கொல்லப்படுவதற்கும் தயாரக இருக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தான்.
“மியான்மரைப் போலவே, காவல்துறை, அரசியல்வாதிகள், இராணுவம் மற்றும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்துவும் ஆயுதங்களை கையில் எடுத்து இந்த சுத்திகரிப்பைச் செய்ய வேண்டும். அதைவிட வேறு வழியில்லை,” என்றும் அவன் இறுமாப்பாக கூக்குரலிட்டான்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தததிலிருந்து கடும்போக்கு இந்து தேசியவாதிகளால் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதை ஊக்குவிப்பதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வந்தாலும் அதனைக் அக்கட்சி தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிகழ்வு பற்றி பிரபல முஸ்லிம் எம்பி அசாதுதீன் ஒவைசி, வீடியோவில் உள்ள எரிச்சலூட்டும் கருத்துக்கள் “இனப்படுகொலைக்கான தூண்டுதலின் தெளிவான சான்று” என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து மோடி அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
குறிப்பு:
உலகளாவிய முஸ்லிம் தலைமைகளோ, சர்வதேச சமூகமோ முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு வர மாட்டார்கள் என்று மிகத் தெளிவாக தெரிந்து கொண்டே தமதும், தமது சந்ததிகளினதும் எதிர்காலம் பற்றிய எவ்வித பிரக்ஞையும் இன்றி பெரும்பாலான முஸ்லிம்களும், அவர்களின் தலைமைகளும் இருந்து வருகின்றனர். கத்தி கழுத்துக்கு வரும் வரை காத்திருப்பது முஸ்லிம்களின் பாரமப்பரியம் அல்ல. சிந்துச் சமவெளிக்கும், முழு இந்தியாவுக்கும் இஸ்லாத்தை சுமந்த வெற்றி வீரர்களாக முஹம்மத் பின் காசிம் என்ற இளைய தளபதியின் படை வீரர்கள் எவ்வாறு வந்து நின்றார்கள் என்ற வரலாறை இந்த இந்து வெறியர்களை விட முஸ்லிம்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய உலகில் கிலாஃபத்தின் மீள்வருகையின் தேவையை இத்தகைய நிகழ்வுகளும் எவருக்கும் உணர்த்தாதுபோனால் கோழைகளின் வாள்களுக்கு இரையாக வேண்டியதுதான்.