செய்தி:
57 இஸ்லாமிய நாடுகளின் தூதர்கள் பங்கேற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) முக்கிய அமர்வை நடத்தியதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா புதன்கிழமை நன்றி தெரிவித்தது.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், தனது ட்விட்டர் செய்தியில், ஆப்கானிஸ்தானில் முக்கிய வெளியுறவு மந்திரிகள் உச்சிமாநாட்டை நடத்துவதில் பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
“ஆப்கானிஸ்தான் மீதான இந்த OIC இன் அசாதாரண அமர்வு, தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கான எங்கள் கூட்டு உறுதிப்பாட்டுக்கும், நடவடிக்கைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த முக்கியமான கூட்டத்தை நடத்தியதற்கும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவளிக்க தொடர்ந்து ஒத்துழைக்க உலக சமூகத்தை அழைத்ததற்கும் நாங்கள் பாகிஸ்தானுக்கு நன்றி கூறுகிறோம்” என்று ஆண்டனி பிளிங்கன் ட்வீட் செய்துள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சிலின் 17வது அமர்வை பாகிஸ்தான் கடந்த டிசம்பர் 19ஆம் திகதியன்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நடத்தியது.
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு OIC ன் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சிலின் இந்த வகையான கூட்டத்தை பாகிஸ்தான் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், 1980ல் பாகிஸ்தான் இந்த கூட்டத்தொடரை நடத்தி இருந்தது.
கருத்து:
ஆப்கானிஸ்தானில் இருந்து பைடன் தலைமையிலான அமெரிக்கா அவமானகரமான முறையில் வெளியேறியதில் இருந்து, உணவு மற்றும் வேலையின்மை நெருக்கடிகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் தலிபான் அரசாங்கத்தை தோல்வியடையச் செய்ய முயற்சிக்கிறது. ஆப்கானிஸ்தான் நிலத்தால் மூடப்பட்ட ஓர் நாடு. அதனால் வர்த்தகத்திற்கு அண்டை நாடுகளின் அதற்கு ஆதரவு தேவைப்படுகிறது. பாகிஸ்தான், ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய ஆறு அண்டை நாடுகளில், பாகிஸ்தான் மட்டுமே தனது எல்லையைத் திறப்பதன் மூலம் நெருக்கடிகளை ஓரளவுக்கு முடிவுக்குக் கொண்டுவர முடியும். இருப்பினும், பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் வாஷிங்டனின் கட்டளைகளைப் பின்பற்றி காபூலில் புதிய ஆட்சியை அங்கீகரிக்க மறுத்து, அது சர்வதேச சமூகத்தின் முன் மண்டியிடும் வரை நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
OIC உச்சிமாநாட்டின் நோக்கம், முஸ்லீம் நாடுகளின் அனைத்து ஆட்சியாளர்களும் தங்கள் மேற்கத்திய எஜமானர்களுடன் உறுதியாக நிற்கிறார்கள் என்ற பைடனின் செய்தியை ஆப்கான் தலிபானுக்கு வழங்குவதாகும். தாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான உதவிகளைப் பெற, தாலிபான்கள் இஸ்லாமிய ஷரிஆவை வெறும் அடையாளமாகப் பாவிக்கலாம்; ஆனால் மற்ற எல்லாவற்றிலும் ஷரிஆவை கைவிட்டு சர்வதேச சமூகத்தை சமாதானப்படுத்த வேண்டும் என்று ஒரு செய்தியை அவர்களுக்கு வழங்குவதும் இதன் நோக்கமாகும்.
முஸ்லீம் நாடுகளின் ஆட்சியாளர்கள் ஆப்கானிஸ்தான் முஸ்லீம்களுக்கு உண்மையாக இருந்திருந்தால், அவர்கள் பைடனுக்கு சேவகம் செய்வதற்காக இஸ்லாமாபாத்தில் ஒன்று சேருவதற்குப் பதிலாக தமது உண்மையான முழு ஆதரவையும் ஆப்கானுக்கு அறிவித்திருப்பார்கள். அந்த முடிவை அமெரிக்கா உட்பட எந்த மேற்கத்திய நாடுகளும் தடுக்கும் சூழலில் தற்போது இல்லை.
“ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அதனால் அவன், அவனை ஒடுக்கவும் கூடாது, ஒடுக்குமுறையாளனிடம் கையளித்து விடவும் கூடாது” (புகாரி மற்றும் முஸ்லிம்) என்ற அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அறிவிக்கும் நபிமொழியை மீறி மேற்குலக எதிரிகளின் கால்களில் தாலிபான்களை மண்டியிட வைக்க எமது ஆட்சியாளர்கள் பாடுபடுகிறார்கள்.
எவ்வாறாயினும், தலிபான்கள் மேற்கு மற்றும் அதன் குஃப்ருக்கு அடிபணியும் வரை, எமது ஆட்சியாளர்கள் ஆப்கானிஸ்தானின் குழந்தைகளையும், பெண்களையும் பட்டினியில் வேகவும், கடும் குளிரில் உறையவும் விடுவதற்கு தயங்க மாட்டார்கள் என்பதே நிச்சயம். இத்தகைய அநியாயக்கார ஆட்சியாளர்களை அல்லாஹ்(சுபு) விரைவில் எம்மத்தியிலிருந்து முற்றாக அகற்றி அழித்து விடுவானாக!
எனவே பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளை ஒன்றிணைக்கும் வகையில் நபிவழியில் கிலாஃபா அரசை அமைப்பதே ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களின் துயரங்களுக்கு முடிவுகட்ட ஒரே தீர்வு. அல்லாஹ்(சுபு)வுக்கு மாத்திரம் பொறுப்புக் கூறக்கூடிய சுயாதீனமான இந்த கிலாஃபத் அரசு எந்த காஃபிர் நாடுகளையும் சார்ந்து இருக்காது. ஏனெனில் அது தனது சித்தாந்தத்திலும், சக்தி வளங்களிலும், கனிமங்கள் மற்றும் விவசாயம் வளங்களிலும் வளமானதாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் இருக்கும். அத்துடன் அல்லாஹ்(சுபு)க்கு மாத்திரமே அஞ்சும் இஸ்லாமிய இராணுவத்தையும், அணு ஆயுதங்களைக் கொண்ட வலுவான ஆயுதப் படைகளையும் அது கொண்டியங்கும்.
OIC conference in Pakistan to subdue Taliban to US!