வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக உக்ரைனை அணுகியுள்ளார்.
அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி: “டான்பாஸ் மற்றும் கிரிமியாவில் ரஷ்யாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் உக்ரேனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அமெரிக்காவின் உறுதியான ஆதரவை ஜனாதிபதி பிடன் உறுதிப்படுத்தினார்.”
கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய துருப்புக்களின் நடமாட்டங்கள் குறித்து நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்துள்ளதால் இது நிகழ்ந்துள்ளது. எவ்வாறாயினும், ரஷ்ய ஜனாதிபதி விளாட்மிர் புடினின் நெருங்கிய கூட்டாளியான உக்ரேனிய தன்னலக்குழுவைச் சேர்ந்த விக்டர் மெட்வெட்சுக்கை அனுமதிப்பது போன்ற, ரஷ்ய நலன்களைக் குறிவைத்து ஜெலென்ஸ்கி பல நடவடிக்கைகளை எடுத்த பின்னரே, இத்தகைய ரஷ்ய நகர்வுகள் இடம்பெற்றுள்ளன. ரஷ்ய ஊடகங்களும் உக்ரேனியர்கள்தான் துருப்புக்களை அணிதிரட்டுகின்றன என்று தெரிவிப்பதுடன், ரஷ்யாவின் நகர்வுகள் உக்ரேனிய ஆத்திரமூட்டல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மட்டுமே உள்ளன என்பதாகவும் கருத்து வெளியிட்டன. கிரிமியாவை தன்னோடு ரஷ்யா இணைத்ததன் பின்பும், டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யப் பினாமிப் படைகள் ஊடுருவிய பின்பும், உக்ரேனிய மொழி பேசும் மேற்கு உக்ரைனில் இருந்து ரஷ்ய மொழி பேசும் கிழக்கு உக்ரைனைப் பிரிக்கின்ற பிரிவினைவாதம் தூண்டி விடப்பட்டதன் காரணமாக உக்ரைன் சில காலங்களாக நெருக்கடியில் உள்ளது.
உண்மையில், உக்ரேனில் நெருக்கடியைத் தூண்டிவிடுவது அமெரிக்கா தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் அமெரிக்கா தான் ரஷ்யர்களை உக்ரைனுக்கும் கிரிமியாவிற்கும் முதன்முதலில் ஈர்த்தது என்பது எமக்கு ஞாபகமிருக்கும். ஐரோப்பாவை, குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை ரஷ்யாவுடன் மோதலுக்கு தள்ளுவது அமெரிக்காவின் நோக்கமாகும். ஜேர்மன்-ரஷ்ய நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய்வழிக்கு (German-Russian Nord Stream 2 pipeline) எதிராக எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் சமரசம் செய்வதற்கான எந்தவொரு முயற்சிகளுக்கும் அமெரிக்கா பலமுறை தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலகின் மற்ற சக்திகளுக்கு இடையில் மோதல்களை உருவாக்கி ஒருவரிலிருந்து மற்றவரை பிளவுபடுத்திச் சமநிலைப்படுத்தும் பிரிட்டனின் நீண்ட கால அதே அணுகுமுறையை அமெரிக்காவும் பின்பற்றுகிறது. இந்த சிந்தனையே நவீன உலகில் சர்வதேச மோதல்களின் தீவிர தன்மைக்கு காரணமாகும்.
இந்த மேற்கத்திய சக்திகளின் அணுகுமுறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கிலாஃபா அரசு உலகின் வல்லரசாக நிலைகொண்டதற்கு கடைப்பிடித்த அணுகு முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அது சர்வதேச விவகாரங்களில் ஸ்திரத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வந்தது, ஏற்கனவே பிரிவினையாலும், பிளவாலும் பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்த ஐரோப்பிய கண்டத்துடன் மாத்திரமே உத்மானிய கிலாஃபா அதிகார மையங்களைச் சமநிலைப்படுத்தும் யுக்தியை கையாண்டது. எனினும் மேற்கத்திய சக்திகள் அத்தகைய யுக்திகளை நகலெடுத்து பொதுமைப்படுத்தியதுடன் அவற்றை பெரும் மூலோபாய நிலைக்கு உயர்த்தி, தங்களது சொந்த பிளவுபட்ட அரசியல் மாதிரியை முழு உலகிலும் பயன்படுத்தியது.
விரைவில் அல்லாஹ்வின் அனுமதியுடன் முஸ்லீம் உம்மாஹ் இஸ்லாமிய கிலாஃபா அரசை நபி (ஸல்) அவர்களின் முறைப்படி மீண்டும் ஸ்தாபிப்பார்கள். உலக அரங்கில் அதன் வருகையிலிருந்தே பெரும் வல்லரசுகளின் அணிகளில் நுழைந்து அவற்றை எதிர்கொள்ளவும், கட்டுப்படுத்தவும், பிற உலகளாவிய சக்திகளை அமைதிப்படுத்தவும் முனைந்து உலக ஒழுங்கு முன்பு இருந்ததைப் போல பொது அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த முயற்சிக்கும்.