கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அந்தமான் கடலில் திக்குத் தெரியாமல் மீன்பிடி படகு ஒன்றில் தடுமாறிக்கொண்டிருந்த 81 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை இந்தியாவின் கடலோர காவல்படை காப்பாற்ற்றியுள்ளது. எனினும் அவர்கள் பற்றி பங்களாதேஷ்க்கு தெரிவித்தபோது, அவர்களுக்கு தஞ்சம் கொடுக்க பங்களாதேஷ் மீது “எந்தக் கடமையும் இல்லை“ என்று பங்களாதேஷ் வெளியுறவு மந்திரி ஏ.கே. அப்துல் மோமன் கூறியுள்ளார்.
இந்தியாவின் கடலோர காவல்படையால் கண்டுபிடிக்கப்பட்ட படகில் 81 பேருடன், 8 பேர் உயிரழந்த நிலையிலும் காணப்பட்டனர். இந்த 81 பேரையும் பங்களாதேஷ்ஷிற்கு அழைத்துச் செல்ல முயற்சித்ததாக இந்திய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ஆனால் வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸிடம் கருத்து தெரிவித்த மோமன், “கண்டு பிடிக்கப்பட்ட அகதிகள் பங்களாதேஷை விட இந்தியாவிற்கே மிக அருகாமையில் இருந்ததால் இந்தியா இவர்களை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்கின்றேன். மேலும் அவர்கள் பங்களாதேஷ் பிரஜைகள் அல்ல, உண்மையில் அவர்கள் மியான்மர் நாட்டவர்கள். இவர்கள் இந்திய எல்லையிலிருந்து 147 கிமீ தொலைவிலும் பங்களாதேஷ் கடல் எல்லையிலிருந்து 1,700 கிமீ தொலைவிலும் காணப்பட்டனர், எனவே அவர்களை அழைத்துச் செல்ல எங்களுக்கு எந்தக் கடமையும் இல்லை“ என்று கூறியுள்ளார்.
குறிப்பு:
“லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸ}லுள்ளாஹ்” என்று கலிமா மொழிந்த முஹம்மத்(ஸல்) அவர்களின் உம்மத்தினர் நடுக்கடலில் தத்தளிப்பதும், அவர்களை காற்பந்து போல எனதல்ல உனது என்று பொறுப்பேற்க நாடுகள் பேரம் பேசுவதும் வாடிக்கையாகி விட்டது. இந்தியா அங்கு காலாகாலமாக வாழும் முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க நினைக்கிறது. பாக்கிஸ்தான் இந்து வெறியர்களின் கைகளில் காஷ்மீர் முஸ்லிம்களை முற்றாக காவு கொடுக்க நினைக்கிறது. கசீனாவின் பங்களாதேஷோ அழுகிய தேசியவாதம் பேசி பறிதவிக்கும் ரொஹிங்யா முஸ்லிம்களை நடுக்கடலில் பாதுகாப்பற்ற ஓர் தீவில் புதைக்க நினைப்பதும், அல்லது பொறுப்பேற்க மறுப்பதும் எமது அரசியல் இழி நிலைக்கு சிறந்த சான்றுகள். எம்மைக் காக்கும் அரணான கிலாஃபா இல்லாத நிலையில் இந்த பேரளவிலான தேசிய முஸ்லிம் அரசுகள் நடுக்கடலில் தான் எம்மைத் தத்தழிக்க விடும்.