கிலாஃபத்தை அழித்த காலனித்துவ நாடுகள் மிகவும் தந்திரமான மற்றும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டே வெற்றி பெற்றன. நேரடி இராணுவத் தலையீட்டின் மூலம் கிலாஃபத்தை எதிர்கொண்ட போது கிலாஃபத்தின் வலிமையின் தன்மையை உணர்ந்த இக்காலனித்துவ நாடுகள் நேரடி இராணுவ தலையீட்டால் கிலாஃபத்தை அழிக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட பின்னர் மிகவும் தந்திரமாக மோசமான அணுகுமுறையை கடைபிடித்தனர்.
1798 இல் பிரான்ஸ் எகிப்து மீது படையெடுத்து அதை ஆக்கிரமித்து கொண்டது. பின்னர் பலஸ்தீனத்தின் மீது படையெடுத்து அதையும் ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. பிரான்ஸ் இஸ்லாமிய அரசிற்கு ஒரு மரண அடியை கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஷாம் பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்க விரும்பியது. இருப்பினும், அடுத்து வந்த யுத்தங்களில் முஸ்லிம்களிடம் தோல்வியுற்ற பிரான்ஸ், எகிப்திலிருந்தும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
காலனித்துவவாதிகள் தற்காலத்தில் நடந்து கொள்வது போலவே அக்காலத்திலும் முஸ்லிம் நிலங்களில் மேற்கொள்ளும் இராணுவத் தாக்குதல்களை நியாயப்படுத்தி வந்தனர். தங்களுக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள தங்கள் சொந்த நாடுகளுக்குள் ‘தேசியவாதம்’ மற்றும் ‘சுதந்திரம்’ போன்ற உணர்வுகளைத் தூண்டிவிட்டும் முஸ்லிம்களுக்கும், இஸ்லாமிய அரசுக்கும் எதிராக தீய எண்ணம் ஏற்படும் வகையில் பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். அப்துல்–அஸீஸ் இப்னு முஹம்மது இப்னு சவுத் மற்றும் அவரது மகன் போன்ற விசுவாசமுள்ள முகவர்களுடன் அவர்கள் கூட்டணி வைத்தனர். அறிஞர் முஹம்மது இப்னு அப்துல்–வஹ்ஹாப் அப்துல் அஸீஸுடன் இணைந்து செயலாற்றியதால் இவர்களின் இயக்கம் ‘வஹாபி’ இயக்கம் என்று அறியப்பட்டது. இஸ்லாமிய அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கும், போராடுவதற்கும் ஆங்கிலேயர்கள் இவர்களுக்கு ஆயுதங்களை வழங்கினர். வஹாபிகள் 1788 இல் குவைத் மீது படையெடுத்து, குவைத்தை கையகப்படுத்தினர், மேலும் பாக்தாத்தையும் முற்றுகையிட்டனர். 1803 ஆம் ஆண்டில் அவர்கள் மக்காவையும், 1804 இல் மதீனாவையும் ஆக்கிரமித்து டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ போன்ற பகுதிகளை நோக்கி படையெடுத்தனர். இவ்வாறு இவர்கள் இஸ்லாமிய அரசைப் பிளவுபடுத்தி, இறுதியில் அதை அழிக்கும் திட்டத்தை உருவாக்க சவூத் குடும்பம், காலனித்துவவாதிகளுடன் நேரடியாக இணைந்தனர்.
இருப்பினும், காலனித்துவவாதிகள் இஸ்லாமிய அரசுக்கு எதிரான துரோகிகளுடன் இணைந்து இத்தகைய ஈனச்செயல்களை மேற்கொண்ட போதிலும், முஸ்லீம்களின் எண்ணிக்கையினாலும் மிக முக்கியமாக, அவர்கள் இஸ்லாத்தின் மேல் வைத்திருந்த நம்பிக்கையினாலும், காலனித்துவவாதிகளாலும் அவர்களது முகவர்களாலும் உத்மானிய கிலாஃபாவை கணிசமான அளவிற்கு பலவீனப்படுத்த முடியவில்லை.
இஸ்லாமிய அரசின் உண்மையான வலிமை இஸ்லாம் என்பதை காலனித்துவவாதிகள் இறுதியில் புரிந்து கொண்டனர். முஸ்லீம் உம்மாவிற்குள் ஆழமாக வேரூன்றியிருறந்த இஸ்லாத்தை முஸ்லீம்களிடம் இருந்து பிரிக்க சதித்திட்டம் ஈட்டிய இவர்கள், ‘தேசியவாதம்’ மற்றும் ‘மதச்சார்பின்மை’ போன்ற இஸ்லாத்திற்கு அன்னியமான கருத்துக்களை பரப்புவதன் மூலம் முஸ்லிம்களின் எண்ணங்களை பலவீனப்படுத்தும் ஒரு மூலோபாயத்தைத் தொடங்கினர். இதைச் செய்வதன் மூலம், இஸ்லாத்தின் மையத்தை அடியோடு பிடுங்குவதுடன், இஸ்லாமிய அரசின் பிராந்தியங்களை பிளவுபடுத்தி உள்நாட்டு மோதல்களையும், யுத்தங்களையும் ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் நம்பினர்.
காலனித்துவவாதிகளின் ஆரம்பகால அரசியல் நகர்வுகளில் ஒன்றாக 1842 இல் பெய்ரூட்டில் ஒரு ‘அறிவியல் சங்கத்தை – (Scientific Association)’ நிறுவ ஒரு குழுவை உருவாக்கினர். அவர்களின் இத் திட்டங்கள் 1847 இல் ‘அறிவியல் மற்றும் கலைக் கழகம் – The Science and Arts Association’ உருவாக்கப்பட்டதன் மூலம் பலனளித்தன. 1875 ஆம் ஆண்டில் பெய்ரூட்டில் ‘ரகசிய சங்கம் – Secret Association’ உருவாக்கப்பட்டது. இதனூடாக அரபு தேசியவாதத்தின் கருத்துக்களை பரப்புவதிலும், இஸ்லாமிய அரசிற்குள் வாழும் அரேபியர்கள், துருக்கியர்கள் போன்ற பல்வேறு இனங்களிடையே வெறுப்பைத் தூண்டுவதிலும் வெற்றியைக் கண்டது. பெர்லின், ஸ்லானிக் மற்றும் இஸ்தான்புல்லிலும் இதே போன்ற மையங்கள் அமைக்கப்பட்டன. அவை அரேபியர்களிடம் அரபுகளே சிறந்தவர்கள் என்றும், துருக்கியர்களிடம் துருக்கியர்களே சிறந்தவர்கள் என்னும் பிரிவினை வாத எண்ணத்தை வித்திட்டன.
பாரிஸில் முஸ்லீம்களின் மனநிலையை பலவீனப்படுத்தும் சிந்தனைகளைக் கொண்ட ஒரு செய்தித்தாள் ‘தி நியூஸ் – The News’ வெளியிடப்பட்டது. ‘முஸ்லிம்களை மதச்சார்பற்றவர்களாக ஆக்குவதன் மூலம் துருக்கியை நவீனமயமாக்கலாம்’ என்ற நோக்கில் செயல்பட்டுக்கொண்டிருந்த ‘இளம் துருக்கியர்கள் – Young Turks’ குழுவினரால் இஸ்தான்புல்லுக்குள் இச்செய்தித்தாள் கடத்தப்பட்டு மக்கள் மத்தியில் ரகசியமாக பகிரப்பட்டது.
இறுதியில் காலனித்துவவாதிகளின் இந்த திட்டங்கள், மதச்சார்பற்ற அரசியல் கட்சியின் ஒரு பகுதியாக இருந்த, பிரிட்டிஷ் ஆதரவு பெற்ற தேசியவாத கொள்கையை அடிப்படையாக கொண்ட, இளம் துர்க்கியர் இயக்கத்தினூடாக எழுச்சி பெற்றன. இளம் துர்க்கியர் இயக்கத்தினர் இராணுவ வலிமையைப் பெற இராணுவத்திலும் ஊடுருவி காணப்பட்டனர். இவர்களின் ஆளுமையினால் 1908 இல் ஒர் இராணுவ சதித்திட்டத்தை மேற்கொண்டு இஸ்தான்புல்லில் உள்ள உத்மானி கிலாஃபாவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தது.
இது போன்ற நிகழ்வுகள் முஸ்லிம்களின் ஒற்றுமையை பலவீனப்படுத்தவும், மேற்கத்திய அரசியலமைப்புகளை அடிப்படையாக கொண்ட சட்டங்களை அறிமுகப்படுத்தவும் வழிவகுத்தன. ஆங்கிலேயர்களின் நேரடி ஆதரவையும், பின்புலத்தையும் பெற்று கொண்ட இவர்கள் மதச்சார்பற்ற ஐரோப்பிய சட்டங்களைப் அடிப்படையாக வைத்து சட்டங்களை அறிமுகப்படுத்தினர். உத்மானிய கிலாபாவின் இஸ்லாமிய அரசியலமைப்பிற்கு முற்றிலும் முறனான ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி, இறுதியில் 1924 மார்ச் 3ஆம் தேதி, 1300 வருடங்களுக்கு மேலாக ஒரு அரசியல் அமைப்பாக திகழ்ந்த கிலாஃபத்தை உலக அரசியலில் இருந்து முற்றாக அகற்றியது.
ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரும் தற்போது அமெரிக்கா தலைமையிலான காலனித்துவ நாடுகள், முஸ்லிம் நிலங்கள் ஒற்றுமை பட்டுவிடாமல் இருக்க இரவும் பகலும் அயராது உழைத்து வருகின்றனர். இவர்கள், முஸ்லிம் உம்மாஹ் தனது அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்க்க கூடிய நிறுவனமான இஸ்லாமிய கிலாஃபத்தை ஸ்தாபிப்பதற்கான முக்கியத்துவத்தை உணரவிடாமல் தடுக்க கூடிய வகையில், மக்களது வாழ்வாதார பிரச்சினைகளை தூண்டி விட்டும், பிரிவினை வாத உள்நாட்டு மோதல்களை தூண்டிவிட்டும் மக்களின் நேர்மையான சிந்தனைகளை சிதறடித்து திசைதிருப்பி வருகின்றனர்.
காலனித்துவ வாதிகளால் வரைந்து கொடுக்கப்பட்ட எல்லைகளை ஏற்றுக்கொண்டு பல தேசங்களாக பிரிந்து நின்று, பெருமையாக சுதந்திர தினம் கொண்டாடும் இந்நாடுகள் உண்மையில் காலனித்துவ வாதிகளிடமிருந்து விடுபட்டதற்காக சுதந்திர தினம் கொண்டாடவில்லை. மாறாக இஸ்லாமிய அரசியல் அமைப்பிலிருந்து குப்ரிய அரசியலமைப்பிற்கு மாறியதற்காகவே சுதந்திரமாக கொண்டாடுகின்றனர்.
அத்தகைய ஒரு மதிமயக்கத்திற்கு காலனித்துவம் எம்மை ஆற்படுத்தி உள்ளது. அந்நிலையை நவ காலனித்துவ உத்திகள் தொடர்ந்தும் பேணுவதற்கு முயன்று வருகின்றன. இஸ்லாத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒற்றுமைதான் எமது முறியடிக்க முடியாத பலம் என்பதை அவர்கள் அன்றும், இன்றும் மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். அவர்களின் உலக அரசங்கில் தோற்கடிப்பதாக இருந்தால் நாம் பலகீனமான தேசிய அரசுகள் என்ற நிலையிலிருந்து மாறி, குப்ரியத்தான ஆட்சியமைப்புகளிலிருந்து நீங்கி ஓர் இஸ்லாமிய ஆட்சி முறைமைக்குள் உடனடியாக திரும்ப வேண்டியுள்ளது. அதற்கு கிலாஃபத்தை நோக்கிய பயணத்தை எமது ஜீவமரணப்போராட்டமாக உம்மத் கையில் எடுக்க வேண்டும்.