இந்திய நிர்வாக காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஒரு இளவயது பையனின் உடலைத் திரும்பக் கோரி அவரது குடும்ப உறுப்பினர்கள் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக அவர்கள் மீது கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புல்வாமா பகுதியிலுள்ள பெல்லோ கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய ஏதர் முஷ்டாக், கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட மூன்று நபர்களில் ஒருவராவார். இவர்கள் ஸ்ரீநகரின் புறநகரில் சரணடைய மறுத்ததனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.
மற்ற இருவருமான 22 வயதுடைய ஐஜாஸ் கனாய் மற்றும் 25 வயதுடைய ஜுபைர் லோன் ஆகியோர் இந்திய ஆட்சியை எதிர்க்கும் “பயங்கரவாதிகளின் கூட்டாளிகள்“ என்று போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் இது ஒரு கொடூரமான “போலி என்கவுண்டர்” என்று ஏதரின் தந்தை முஷ்டாக் அகமது வாணி கூறுகிறார்.
மூன்று பேரின் உடல்களையும், அவர்களது குடும்பங்களுக்கு திருப்பி கொடுக்க மறுத்த உள்ளூர் நிர்வாகம் இவ் உடல்களை, 115 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் சோன்மார்க்கில் உள்ள ஒர் மயானத்தில் அடக்கம் செய்தது.
இந்திய நிர்வாக காஷ்மீரில், அதிகாரிகள் இந்திய எதிர்ப்பு கோபத்தை அதிகரிக்கும் வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஒரு கொள்கையின் அடிப்படையில், கொல்லப்பட்ட 100 க்கும் மேற்பட்டவர்களை கிளர்ச்சியாளர்களாக சித்தறித்து, அவர்களது குடும்பங்களுக்கு முறையான இறுதி சடங்குகளை மறுத்து, அடையாளம் குறிக்கப்படாத கல்லறைகளில் புதைத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் வாணி அவரது இரண்டு சகோதரர்கள், மூன்று உறவினர்கள் மற்றும் உள்ளூர் மசூதியின் இமாம் ஆகியோருடன் தனது மகனின் உடலைக் கோரியதற்காக, தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக தேச விரோத கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்ததாக கூறி 7 பேர் மீதும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரிகளுக்கு எதிராக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தப்படுவதாக இப்பகுதியில் உள்ள சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பு:
காஷ்மீரின் கண்ணீர்க் கதை விசித்திரமாக விரிவடைந்து கொண்டே செல்கின்றது. இந்த வாரம் பாகிஸ்தான் தனது வருடாந்திர காஷ்மீர் ஒருமைப்பாட்டுத் தினத்தை நினைவுகூர்ந்தது. அதன் அரசாங்கமும் முகவர் அரசியல் வர்க்கமும் காஷ்மீர் முஸ்லிம் சகோதரர்களின் துன்பங்களுக்கு உதட்டளவிலான சேவையை வழமைபோல் வழங்கியது.
அவர்களின் பிரச்சினைகளை உண்மையாகத் தீர்ப்பதற்கு எந்தவொரு காத்திரமான நடைமுறை நடவடிக்கையும் எடுக்காமல் புரக்கணிப்பதே பாகிஸ்தானின் வாடிக்கையாகும். ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது ‘சர்வதேச சமூகத்தையோ’ பிரச்சினையைத் தீர்ப்பதில் அதிக பங்கு வகிக்க அழைப்பு விடுப்பது வெறும் கண்துடைப்பு மாத்திரமே. காஷ்மீரில் ஏற்பட்ட நெருக்கடிக்கு அடிப்படைப் பொறுப்பாளிகள் மேற்கத்திய சக்திகளே. முதலில் பிரித்தானியா அதனை உருவாக்கி வளர்த்துவிட தற்போது அமெரிக்கா, பிராந்தியத்தில் தலையிடுவதற்கான ஒரு சாக்குப்போக்காக அதனை நீடித்து வருகின்றது. இந்த ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒரு படி மேலே சென்று காஷ்மீர் மக்களுக்கு ‘சுயாட்சி’ வழங்கும் தேர்வை வழங்குவதன் மூலம், மேற்கத்திய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு வலுச் சேர்க்க நினைக்கின்றார்.
முஸ்லீம் நிலங்களை சிற்சிறு துண்டுகளாக உடைத்து பலகீனப்படுத்துவதன் மூலம் அவற்றை இன்னும் திறம்பட கட்டுப்படுத்தல் என்ற அவர்களின் வியூகத்தை அறியாதவர் அல்ல அவர். சிரியா அல்லது சூடான் போன்ற ஒரு பெரிய நாட்டைக் காட்டிலும், குவைத் அல்லது ஜோர்டான் போன்ற ஒரு சிறிய நாட்டைக் கட்டுப்படுத்துவது மேற்கத்திய சக்திகளுக்கு மிகவும் எளிதானது என்பதில் சந்தேகமில்லை.
மேலும் இமயமலை மலைத்தொடரில் அமைந்துள்ள, உலகின் மிக உயர்ந்த வான்வழிப் பகுதியைக் கொண்டுள்ள, சீனா மற்றும் இந்தியா இரண்டையும் ஒரே நேரத்தில் நேரடியாக மேற்பார்வையிடக்கூடிய காஷ்மீர் நிலப்பரப்பு மிக முக்கிய மூலோபாய இருப்பிடமாகும். காஷ்மீருக்கு ‘சுதந்திரம்’ என்பது முழுமையான வெளிநாட்டு கட்டுப்பாட்டுக்கு சமமானதாகும். அது நிகழ்ந்தால் அதன் அசாதாரண இருப்பிடத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள உடனடி வெளிநாட்டு இராணுவ பிரசன்னம் அதனை நோக்கி வருவது உறுதி.
இங்கே நாம் புரிய வேண்டிய ஓர் அடிப்படை உண்மை உள்ளது. எகிப்து அல்லது ஜோர்டான் அல்லது சிரியாவின் அரபுப் படைகள் பாலஸ்தீனத்தை விடுவிக்கும் திறனைக் கொண்டிருப்பதைப் போலவே, பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரை விடுவிக்க முழுத் திறன் கொண்டது. அதன் பௌதீக வளங்களிலோ, இராணுவ வலிமையிலோ குறைபாடு இல்லை; மாறாக அதன் அரசியல் விருப்பத்திலேயே ஆகப்பெரிய குறையாடு உள்ளது.
எவ்வாறாயினும், அல்லாஹ்வின் அனுமதியுடன் கிலாஃபா அரசு விரைவில் மீண்டும் நிறுவப்படும் போது, அதன் படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பிரதேசங்களையும் மீட்டெடுக்கும். அப்போது, பாலஸ்தீனம், காஷ்மீர், செச்னியா, கிழக்கு துர்கெஸ்தான் போன்ற முஸ்லிம் நிலங்கள் அந்நியக் காஃபிர்களின் அடக்குமுறையிலிருந்து விடுதலை பெறும், இன்ஷா அல்லாஹ்!