இஸ்ரேல், பாலஸ்தீனிய பிராந்தியங்களில் போர்க்குற்றங்கள் அல்லது அட்டூழியங்கள் செய்தது தொடர்பாக குற்றவியல் விசாரணைக்கு இட்டுச்செல்லும் வகையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் The International Criminal Court (ICC) தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் பல இஸ்ரேலியர்களுக்கு, வெள்ளிக்கிழமை தீர்ப்பு கவலை அளிக்கிறது, ஏனெனில் அவர்கள் பாலஸ்தீன வன்முறைக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ளும் “நல்ல மனிதர்கள்” என்று கூறுகிறார்கள்.
ஐ.சி.சியின் நீதிபதிகள் தங்களது முடிவு ஹேக்கை தளமாகக் கொண்ட நீதிமன்றத்தின் ஸ்தாபக ஆவணங்களில் உள்ள விதிகளின் அடிப்படையில் அமைந்துள்ளதாகவும், இது நாட்டை அல்லது சட்ட எல்லைகளை நிர்ணயிக்கும் எந்தவொரு முயற்சியையும் குறிக்கவில்லை என்றும் கூறினர்.
2019 டிசம்பரில் “கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா பகுதி உட்பட மேற்குக் கரையில் போர்க்குற்றங்கள் நடந்துள்ளன அல்லது செய்யப்படுகின்றன என்று நம்புவதற்கு நியாயமான அடிப்படை உள்ளது” என்று நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஃபடூ பென்செளடா கூறினார்.
மேலும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் மற்றும் ஹமாஸ் போன்ற ஆயுதமேந்திய பாலஸ்தீனிய குழுக்கள் ஆகிய இரு தரப்பிலும் சாத்தியமான குற்றவாளிகள் உள்ளனர். இப் பிரச்சினை நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறதா, இல்லையா என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தவுடன் இதற்கான ஒர் விசாரணையைத் திறக்க விருப்பதாக கூறினார்.
வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட பெரும்பான்மை தீர்ப்பில், இப் பிரச்சினை நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதாக நீதிபதிகள் கூறினர்.
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை தீர்ப்பு யூத எதிர்ப்பு (Anti-Semitic) என்றும், இஸ்ரேல் “இந்த தவறான நீதியை தனது முழு பலத்தை கொண்டு எதிர்த்துப் போராடும்” என்றும் கூறினார்.
பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்தாயே இந்த தீர்ப்பு “நீதி மற்றும் மனிதநேயத்திற்கான வெற்றி“ என்று பாராட்டினார்.
பாலஸ்தீனிய பிரதேசங்களில் இஸ்ரேலிய பணியாளர்கள் மீது அதிகார வரம்பை உறுதிப்படுத்த ஐ.சி.சி மேற்கொண்ட முயற்சி குறித்து அமெரிக்கா “கடுமையான கவலை” கொண்டிருப்பதாகவும் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறினார்.
சர்வதேச வழக்கறிஞரும் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் முன்னாள் சட்ட ஆலோசகருமான டயானா புட்டு கூறுகையில், “பாலஸ்தீனியர்கள் இன்னும் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. உண்மையான நீதிக்கான பாதை மிகவும் நீண்டது; ஏனென்றால் ஐ.சி.சி சந்தேகத்திற்கு இடமின்றி இவ் வழக்கை தொடரக்கூடாது என்ற அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளும். சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலிய செயல்கள் சட்டவிரோதமானது என்று அறிவித்தது; இது முதல் தடவையல்ல, ஆனால் இவ்வுலகம் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.” என்று கூறினார்.
குறிப்பு:
இந்த வகையான சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைகளும், தீர்ப்புகளும் நிர்வாணமாய் நிற்கின்ற அநீதியான உலக ஒழுங்கிற்கு கோவணத்தை கொழுவி விடுகின்ற வேலையாகத்தான் பார்க்க முடிகிறது. இவை சிலரின் முகத்தை பாதுகாக்கின்ற, போலியான நம்பிக்கைகளை ஏற்படுத்துகின்ற ஒப்பனைகள் தவிர வேறில்லை. அமெரிக்க தலைமையிலான நவ காலனித்துவம் தொடரும் காலமெல்லாம் சியோனிச போர் இயந்திரத்தின் அராஜகமும் தடையின்றி தொடரும் என்பதே யதார்த்தம்.
இன்றைய நவகாலனித்துவ சக்திகள் தமது நலன்களுக்கு சிறிதளவு இடைஞ்சலை இதே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்படுத்தினாலும் தமது செல்வாக்கைக் கொண்டு அதனை அடிபணியச் செய்கின்ற நிலையில் இருப்பதையும் நாம் மறந்துவிடலாகாது. ஜூன் 11, 2020 இல் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஐ.சி.சி (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்) அதிகாரிகளுக்கு எதிராகவும், அவர்களின் விசாரணைகளுக்கு உதவுகின்றவர்களுக்கு எதிராகவும் சொத்து முடக்கம் மற்றும் குடும்பப்பயண தடைகளை ஏற்படுத்தும் நிறைவேற்று கட்டளையை(Executive Order) அறிவித்தது, இதற்கான சான்றுகளின் அண்மித்த சான்றாகும்.
இன்று வல்லாதிக்க சக்திகளின் கருவிகளாக அல்லது அவர்களுக்கு அடிபணிய வேண்டிய சுயாதீனமில்லாதவைகளாக இருக்கின்ற எந்ந மன்றங்களாலும் உலகிலுள்ள அநீதிகளுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் நிலை அதோகதிதான். கிழக்கிலோ, மேற்கிலோ இரண்டிலும் மிக நீண்ட காலமாக குற்றங்களால் புரையோடிய அரசுகள் முழுமையான சுதந்திரத்துடன் செயற்பட்டு வருகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கைக் கட்டுப்படுத்த நிறுவப்பட்ட சர்வதேச கட்டமைப்புகள் அத்தகைய சக்திகளின் வெறும் விரிவாக்கங்கள் மட்டுமே.
சுருங்கக்கூறின் தற்போது ஒரு புதிய உலக ஒழுங்கால் மாத்திரமே அநீதிகளை ஒழிக்கலாம். அதற்கு இஸ்லாம் தலைமை தாங்க வேண்டும். அப்போது சியோனிச ஆக்கிரமிப்பு அலகை விசாரிக்க நீதிமன்றங்கள் தேவைப்படாது. ஏனெனில் அதற்குப்பிறகு சியோனிச அலகே உலகில் இருக்காது.