• நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
Darul Aman
No Result
View All Result
தகனத்தை நிறுத்து! – இலங்கை மீது ஐ.நா நிபுணர்கள் சீற்றம்! – (முழு முறையீடும்  தமிழில்)

'ஒரே நாடு ஒரே சட்டம்' - காதி நீதிமன்றத்துக்கும் வேட்டா? - விடையைத்தேடி...

கோவிட் காலத்தில் இந்திய பில்லியனர்களின் செல்வம் 35 சதவீதமாக அதிகரிப்பு!

Home செய்திகள்

தகனத்தை நிறுத்து! – இலங்கை மீது ஐ.நா நிபுணர்கள் சீற்றம்! – (முழு முறையீடும் தமிழில்)

January 26, 2021
in செய்திகள்
Reading Time: 4 mins read
0
66
SHARES
527
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர்களான அஹ்மத் ஷாஹீத், பெர்னாண்ட் டி வரென்னெஸ், க்ளெமென்ட் நைலெட்சோசி வவுல் மற்றும் தலாலெங் மொஃபோகெங் ஆகியோர், கோவிட்-19 இனால் இறந்தவர்களை கட்டாயத் தகனம் செய்யும் இலங்கையின் நடைமுறை முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது என்று கடுமையான கண்டனங்களை தெரிவித்து இலங்கை அரசாங்கத்திடம் தமது காட்டமான கூட்டு முறையீட்டை வெளியிட்டுள்ளனர்

அவர்களது கூட்டு முறையீட்டின் தமிழ் வடிவம் கிழே…

இலங்கை: கோவிட்-19 உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது தொடர முடியாது என்று ஐ.நா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

 

ஜெனீவா (25 ஜனவரி 2021) – கோவிட்-19 இனால் இறந்தவரை கட்டாயமாக தகனம் செய்வதற்கான தனது கொள்கையை முடிவுக்கு கொண்டுவருமாறு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் இன்று இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். இது நாட்டின் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது என்றும், இது தப்பெண்ணங்கள், சகிப்புத்தன்மையின்மை மற்றும் வன்முறையை தூண்டக்கூடும் என்றும் கூறியுயுள்ளனர்.

“கோவிட்-19  உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் உடல்களைக் கையாள்வதற்கான ஒரே வழிமுறையாக தகனத்தை திணிப்பது மனித உரிமை மீறலுக்கு சமமாகும். இலங்கையிலோ அல்லது பிற நாடுகளிலோ இறந்த உடல்களை அடக்கம் செய்வது கோவிட்-19 போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயத்திற்கு வழிவகுக்கிறது என்பதற்கு நிறுவப்பட்ட மருத்துவ அல்லது அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை” என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

21 ஜனவரி 2021 நிலவரப்படி, இலங்கையில் 274 கோவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் கணிசமான எண்ணிக்கையிலான இறப்புகள் முஸ்லிம் சிறுபான்மையினருடையது. இந்த உடல்கள் அனைத்தும் 31 மார்ச் 2020 அன்று வழங்கப்பட்ட கோவிட்-19 சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் மீதான தற்காலிக மருத்துவ நடைமுறை வழிகாட்டுதலின் நான்காவது திருத்தத்தின் படி தகனம் செய்யப்பட்டன.

அடக்கம், நிலத்தடி குடிநீரை மாசுபடுத்தும் என்று கூறிய தலைமை தொற்று நோயியல் நிபுணர் உட்பட, ஏனைய நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றியதுதான் தகனம் கட்டாயமாக்குவதற்கான முடிவாகும். எவ்வாறாயினும், தகனம் நோய் பரவுவதைத் தடுக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் இலங்கையின் சமூக மருத்துவர்கள் கல்லூரி மற்றும் இலங்கை மருத்துவ சங்கம் கோவிட்-19 இறந்த உடல்கள் அடக்கம் செய்யப்படுவது ஒரு பொதுச் சுகாதார அபாய நிலையாகும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று சமீபத்தில் அறிக்கைகளை வெளியிட்டன.

“தொற்றுநோயால் ஏற்படும் கடுமையான பொது சுகாதார சவால்களுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாலும், கோவிட்-19 நடவடிக்கைகள், இறந்தவர்களின் கௌரவம், கலாச்சாரம், மத மரபுகள் அல்லது நம்பிக்கைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் முழுவதையும் மதித்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும்” என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

“பாகுபாடு, முரட்டுத்தனமான தேசியவாதம் மற்றும் நாட்டின் முஸ்லிம்களையும், பிற சிறுபான்மையினரையும் துன்புறுத்துவதற்கு ஏதுவான இன-மையவாதம் போன்றவற்றின் அடிப்படையில் இத்தகைய பொது சுகாதார முடிவுகளை அமுல்படுத்துவது குறித்து நாங்கள் விசனம் அடைகின்றோம்” என்று நிபுணர்கள் மேலும் தெரிவித்தனர். “சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய விரோதம், தற்போதுள்ள தப்பெண்ணங்கள், இனங்களுக்கு இடையிலான பதட்டங்கள் மற்றும் மதச் சகிப்புத்தன்மை இன்மையை அதிகரித்து, மென்மேலும் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டி, பயத்தையும், அவநம்பிக்கையையும் விதைக்கிறது.”

“இத்தகைய கொள்கையானது ஏழைகளும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களும் பாகுபாடு குறித்த அச்சத்தின் பேரில் பொது சுகாதார சேவையை அணுகுவதிலிருந்து தடுக்கிறது என்பது குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம்” என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர். இது தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பொது சுகாதார நடவடிக்கைகளை மேலும் எதிர்மறையாக பாதிக்கக் கூடியது.

“குடும்ப உறுப்பினர்களுக்கு நியாயமான நேரம் வழங்கப்படாமல் அல்லது முடிவுகளை குறுக்கு விசாரணை செய்வதற்கான நேரம் வழங்கப்படாமல் அல்லது இறுதி சோதனை முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்காமல், தகனம் பெரும்பாலும் சோதனை முடிவுகளை அறிவித்த உடனேயே உடனடியாக நடைபெறுகிறது” என நிபுணர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இலங்கையில் அடக்கம் செய்வதற்கான விருப்பங்களை ஆராயுமாறு ஜனாதிபதியும், பிரதமரும் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர். “எவ்வாறாயினும், முதன்மை சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் தடுப்புத் துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட வல்லுநர்கள் குழுவினால் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அகற்றுவதற்கான தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்கான பரிந்துரைகள் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டதை அறிந்து நாங்கள் கவலைப்படுகிறோம். “ என்று அவர்கள் கூறினர்.

“சுகாதார அமைச்சரால் குறிப்பிடப்பட்ட உள்நாட்டுக்குள் அடக்கம் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்த பிரதான குழுவின் அறிக்கை விரைவில் கிடைக்கும் என்றும், வெளிநாட்டில் அடக்கம் செய்வதற்கான தீர்வை அதிகாரிகள் நிறுத்துவார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

“கோவிட்-19 உடல்களை கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், தவறான தகவல், வெறுக்கத்தக்க பேச்சு, முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரை தொற்றுநோய்களின் குறியீடாக்கி களங்கப்படுத்துதல், போன்றவற்றுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், இலங்கை அரசாங்கத்தை நாங்கள் வற்புறுத்துகிறோம்; மேலும், பிழையாக மேற்கொள்ளப்பட்ட தகனங்களுக்கான நிவாரணியை வழங்கவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் வற்புறுத்துகின்றோம்.”

முற்றும்.

*THE EXPERTS: Mr. Ahmed Shaheed, Special Rapporteur on freedom of religion or belief; Mr. Fernand de Varennes, Special Rapporteur on minority issues; Mr. Clément Nyaletsossi Voule,Special Rapporteur on the rights of peaceful assembly and association; and Ms. Tlaleng Mofokeng,Special Rapporteur on the right of everyone to the enjoyment of the highest attainable standard of physical and mental health

The Special Rapporteurs are part of what is known as the Special Procedures of the Human Rights Council. Special Procedures, the largest body of independent experts in the UN Human Rights system, is the general name of the Council’s independent fact-finding and monitoring mechanisms that address either specific country situations or thematic issues in all parts of the world. Special Procedures’ experts work on a voluntary basis; they are not UN staff and do not receive a salary for their work. They are independent from any government or organization and serve in their individual capacity.

For inquiries and media requests, please contact Chian Yew Lim (+41 22 917 9938/ clim@ohchr.org)

For media enquiries regarding other UN independent experts, please contact Renato de Souza (+41 22 928 9855 / rrosariodesouza@ohchr.org)

Follow news related to the UN’s independent human rights experts on Twitter @UN_SPExperts

Concerned about the world we live in?
Then STAND UP for someone’s rights today.
#Standup4humanrights
and visit the web page at 
http://www.standup4humanrights.org

 

Related Posts

காதி நீதிமன்றத்தை ஒழித்து பின்னர் MMDA ஐயும் ஒழிப்பார்கள்!

காதி நீதிமன்றத்தை ஒழித்து பின்னர் MMDA ஐயும் ஒழிப்பார்கள்!

September 21, 2021
இறைத்தூதரை இங்கிலாந்திலும் பிரான்ஸ் பாணியில் சீண்டிப் பார்க்கிறார்களா?

இறைத்தூதரை இங்கிலாந்திலும் பிரான்ஸ் பாணியில் சீண்டிப் பார்க்கிறார்களா?

March 27, 2021

நேற்று ஹஜ்ஜுல் அக்பர், இன்று ஆஷாத் சாலி நாளை நீங்களாகக்கூட இருக்கலாம்!

March 21, 2021

மீட்கப்பட்ட ரோஹிங்கியாக்களை இந்தியாவே வைத்துக்கொள் – பங்களாதேஷ்!

February 28, 2021
Next Post
கோவிட் காலத்தில் இந்திய பில்லியனர்களின் செல்வம் 35 சதவீதமாக அதிகரிப்பு!

கோவிட் காலத்தில் இந்திய பில்லியனர்களின் செல்வம் 35 சதவீதமாக அதிகரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

சமீபத்திய கருத்துகள்

  • Face to true on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Fareed on கிலாஃபா மட்டுமே மக்கள் நல அரசு!
  • Nizamhm on இலங்கையில் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு சீனா தலைமை! தெரண களத்தில்!
  • Abdullah on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Admin on இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்படலாம்!

காப்பகம்

  • June 2022
  • April 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021
  • April 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020
  • October 2020
  • September 2020
  • August 2020
  • July 2020
  • June 2020
  • May 2020
  • April 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • October 2019
  • September 2019
  • May 2019
  • April 2019
  • February 2019
  • July 2018
  • May 2018
  • March 2018
  • January 2018
  • December 2017
  • October 2017
  • February 2017
  • January 2017
  • November 2016
  • September 2016
  • August 2016
  • July 2016
  • June 2016
  • May 2016
  • April 2016
  • March 2016
  • February 2016
  • January 2016
  • December 2015
  • November 2015
  • October 2015
  • August 2015
  • March 2015
  • September 2014
  • August 2014
  • July 2014
  • May 2014
  • April 2014
  • March 2014
  • February 2014
  • November 2013
  • October 2013
  • September 2013
  • March 2013
  • February 2013
  • July 2012
  • December 2011

பிரிவுகள்

  • Uncategorized
  • YouTube சேனல்
  • அகீதா
  • அறிக்கைகள்
  • ஆய்வு
  • உசூலுல் பிக்ஹ்
  • எண்ணக்கரு
  • ஒலி
  • ஒளி
  • கட்டுரைகள்
  • கிலாஃபா
  • சிந்தனை
  • செய்திகள்
  • செய்திப்பார்வை
  • தஃவா
  • நடப்பு விவகாரம்
  • நிகழ்வுகள்
  • பிக்ஹ்
  • பிரசுரங்கள்
  • பொருளாதாரம்
  • யதார்த்தம் எது ?
  • வரலாறு
  • வலையொலி

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

பிரிவுகள்

Uncategorized YouTube சேனல் அகீதா அறிக்கைகள் ஆய்வு உசூலுல் பிக்ஹ் எண்ணக்கரு ஒலி ஒளி கட்டுரைகள் கிலாஃபா சிந்தனை செய்திகள் செய்திப்பார்வை தஃவா நடப்பு விவகாரம் நிகழ்வுகள் பிக்ஹ் பிரசுரங்கள் பொருளாதாரம் மல்டி மீடியா யதார்த்தம் எது ? வரலாறு வலையொலி
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்

© 2020 www.darulaman.net