ஆப்கான் அரசுக்கும், தலிபானுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத் தருணத்தில், ஆப்கானிஸ்தானின் தலைநகரை உலுக்கக் கூடிய வகையில் இடம்பெறும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை காலை அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களால் இரண்டு பெண் நீதிபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றத்திற்கு வேலைக்கு செல்லும் வழியில் இப் பெண்கள் இலக்கு வைத்து கொல்லப்பட்டுள்ளனர் என்று நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இத் தாக்குதலில் வாகனத்தின் ஓட்டுனர் காயமடைந்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த வாரம் காபூலில், உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளருடன் சேர்த்து மேலும் இரண்டு பேர் சாலையோர குண்டுத் தாக்குதல் ஒன்றில் படு கொலை செய்யப்பட்டனர்.
இதேபோன்ற இலக்கு தாக்குதல்கள் நாட்டின் பிற இடங்களிலும் நிகழ்ந்துள்ளன. செவ்வாயன்று, மஜார்–இ–ஷெரீப் நகரில் வேலைக்குச் செல்லும் வழியில் மூன்று ஆப்கானிய பெண் இராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சமீபத்திய மாதங்களில் ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்துள்ளது. இது தலிபான் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதிலும், குறிப்பாக காபூலில் – உயர்மட்ட நபர்களை இலக்காகக் கொண்ட கொலைகளின் புதிய போக்கு நகரத்தில் அச்சத்தை விதைத்துள்ளது.
சமீபத்திய மாதங்களில் காபூல் மற்றும் பிற நகரங்களில் தொடர்ச்சியாக, அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள், மருத்துவர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் உட்பட பல முக்கிய ஆப்கானியர்கள் பகல்நேர தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிய அதிகாரிகள் இந்த தாக்குதல்களுக்கு தலிபான்களைக் குற்றம் சாட்டி வருகின்ற நிலையில், இக் குற்றச்சாட்டுகளை தாலிபான் மறுத்து வருகின்றது. இந்த கொலைகளில் சிலவற்றை ஐ.எஸ்.ஐ.எல் ஆயுதக் குழு பெறுப்பேற்றுள்ளது.
“நாட்டில் சமாதானம் நிலவ வேண்டும் எனில் தலிபான்களின், உரிமை கோரப்படாத தாக்குதல்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் கொலைகள், கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும்“ என்று ஆப்கானிஸ்தானின் அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கர்னல் சோனி லெகெட் ட்விட்டரில் தெரிவித்தார்.
“ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்…”