வரும் சனிக்கிழமை முதல் இந்தியா தனது 1.3 பில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு தயாராகி வருகின்றது. இந்தியாவின் உட்கட்டமைப்பு, நிலையில்லாத சீறற்ற உட்கட்டமைப்பு என்தனாலும் இத் தடுப்பூசி சிக்கலான மற்றும் ஆபத்தான பணி என்பதனால் அதன் பாதுகாப்புத் தன்மை பற்றியும் பலரின் மனதில் பெறும் சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.
இந்தியாவிலேயே மிக அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்களைக் கொண்ட மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் இயக்குநராக, இருக்கும் டாக்டர் எஸ்.பி. கலந்த்ரி சமூகத்திற்கும், அவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஒர் தடுப்பூசி அங்கீகரிக்கப்படும் நாளுக்காகக் காத்திருப்பதாக கூறுகிறார்.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய்கான தடுப்பூசி, வைரஸ் தொற்றிலிருந்து நோயைத் தடுப்பதில் எவ்வளவு செயல்திறனுடன் செயல்படுகிறது என்பதை அறிய, குறிப்பிட்ட காலம் அவதானித்து பெறப்படும் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் வருதற்கு முன்னர், இந்திய மருந்து தயாரிப்பாளரான பாரத் பயோடெக்கின் Bharat Biotech தடுப்பூசியை அங்கீகரிக்க இந்தியா, மருந்து செயல் முறை கட்டுப்பாட்டில் குறுக்குவழியை கடைபிடித்துள்ளதால், இத் தடுப்பூசியை போடுவது குறித்து சந்தேகம் கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையை நடத்தி வரும் கலந்த்ரி, “இது எவ்வாறு செயல்படுகின்றது என்று நான் காத்திருந்து பார்க்கிறேன்; அதுவே சிறந்தது” என்று கூறுகிறார்.
மேலும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தடுப்பூசியின் செயல்திறனுக்கான சான்றுகள் குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன.
பல விஞ்ஞானிகள் குறிப்பிட்ட காலம் அவதானித்து பெறப்படும் சோதனைகளின் சான்றுகள் இல்லாமல் ஒரு தடுப்பூசியை அங்கீகரிப்பது ஆபத்தானது. 1.4 பில்லியன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10.4 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் ஒப்புதல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாதது மக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கான தயக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.
இந்தியா ஜனவரி 3 ஆம் தேதி அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரித்த தடுப்பூசி, உள்நாட்டு உற்பத்திகளுக்கு ஒப்புதல் அளித்த இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றாகும்.
மற்றொன்றுக்கான ஒப்புதல், உலகின் மிகப் பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா Serum Institute of India தயாரித்த அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி AstraZeneca vaccine பிரிட்டன் மற்றும் பிரேசிலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பகுதி முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டது; இது கொரோனா வைரஸிலிருந்து நோயைத் தடுப்பதில் 70 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், இந்தியாவின் COVID–19 பணிக்குழுவின் உறுப்பினர், பாரத் பயோடெக்கின் தடுப்பூசி ஒரு “காப்புப்பிரதியாகவே” backup இருக்கும் என்று கூறினார்.
ஜனவரி 5 ஆம் தேதி சுகாதார அதிகாரிகள் கூறுகையில், “இரண்டு தடுப்பூசிகளும் பயன்படுத்தப்படும். தனி நபர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்பே அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். மேலும் அவர்களை நாங்கள் மேற்பார்வை செய்வதை உறுதிசெய்கிறோம்” என்று கூறினர்.
எந்த மாநிலங்களுக்கு எந்த தடுப்பூசி எந்த அடிப்படையில் கிடைக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.