ஜனநாயக கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் துணை ஜனாதிபதி பென்ஸிடம் ட்ரம்ப் ‘உளவியல் ரீதியாக’ நிலையாக இல்லாததால் அவர் முழுமையாக தனது பதவிக்காலத்தை பூர்த்தி செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்.
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடனை சாட்சியம் அளிப்பதற்காக உறுப்பினர்கள் கூடியிருந்த வேளையில், அமெரிக்காவின் கேபிடல் கட்டிடத்தைத் தாக்கியதற்காக தனது ஆதரவாளர்களைக் கண்டிக்கத் தவறியதால், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவில் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.
காங்கிரசின் பல ஜனநாயக உறுப்பினர்கள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸை, ட்ரம்பை ஜனாதிபதியாக இருக்க “தகுதியற்றவர்” என்று அறிவிக்கும் குற்றச்சாட்டுக்கு தலைமை தாங்குமாறு வலியுறுத்தும் நிலையில், ட்ரம்பின் அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 25 ஆவது திருத்தத்தின் 4 வது பிரிவைப் பயன்படுத்துவதற்கான முன்னோடியில்லாத நடவடிக்கை குறித்து விவாதித்து வருகின்றனர் என, இந்த நடவடிக்கை குறித்த நேரடி அறிவைக் கொண்ட பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“ஜனாதிபதி டிரம்ப் மனநலம் குன்றிய நிலையில் உள்ளார் என்றும், 2020 தேர்தலின் முடிவுகளை இன்னும் செயல்படுத்தவும், ஏற்றுக்கொள்ளவும் அவரால் முடியவில்லை” என்றும் “ஜனாதிபதி ட்ரம்ப் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், தனது அலுவலகத்தின் கடமைகளை நிறைவேற்றவும் விரும்பவில்லை என்பதை மீண்டும் மீண்டும் காட்டி வருகிறார்.” என்றும் குறிப்பிட்ட ஒரு கடிதத்தை, ஜனநாயகக்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஹவுஸ் ஜுடிசரி கமிட்டியின் சமர்ப்பித்துள்ளனர்.
வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளின் ஆசிரியர் குழுவும் ட்ரம்பை நீக்குமாறு அழைப்பு விடுத்ததுள்ளது. “அவர் ஜனாதிபதி பதவியின் பரந்த அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ளும் ஒவ்வொரு நொடியும், பொது ஒழுங்கிற்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல்” என்றும் அது அறிவித்துள்ளது.
தி மியாமி ஹெரால்டு செய்தித்தாள் அவரது ஆதரவாளர்கள் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்களை வன்மையாகச் சாடி தனது ஆசிரியர் தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
“தனது அமெரிக்க-இயல்பு அல்லாத வார்த்தைகள் மற்றும் அவரது ஜனநாயக விரோத செயல்களால், அவரே கேபிட்டலை தாக்கியதுக்கு ஒப்பாக இந்த கிளர்ச்சியை ஒவ்வொரு புள்ளியிலும் வழி நடத்தி இருக்கிறார்” என்றும் அது தெரிவித்துள்ளது.
கலவரக்காரர்களை “மிகவும் விசேடமானவர்கள்” என்று டிரம்ப் அழைக்கிறார்
ஜனவரி 20 ஆம் தேதி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலின் முடிவை உறுதிப்படுத்த பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் கூட்டப்பட்ட சமயத்தில், ட்ரம்ப்பின் ஆயுதமேந்திய ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க கேபிடல் மீதான தாக்குதல இதுவரை நான்கு பேரைக் கொன்றிருக்கிறது.
அமைதியான அதிகாரப் பரிமாற்றத்திற்கு உறுதியளிக்க மறுத்து வரும் டிரம்பிற்கு சார்பாக , வெள்ளை மாளிகைக்கு வெளியே நிகழ்ந்த பேரணியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்களை விழித்து உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், தேர்தல் அவரிடமிருந்து திருடப்பட்டது என்ற ஆதாரமற்ற கூற்றுக்களை மீண்டும் மீண்டும் கூறியதுடன், தனது ஆதரவாளர்களை வீட்டிற்குச் செல்லுமாறு வேண்டிக் கொண்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை “மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள்” என்றும் புகழ்ந்ததுடன், அவர்களிடம் தனது “அன்பையும்” வெளிப்படுத்தினார்.
ட்ரம்பின் நடவடிக்கைகள் அவரது மனநிலையைப் பற்றி உண்மையான கேள்விகளை எழுப்பியுள்ளன என்றும், இப்போது நாட்டின் ஜனநாயக நிறுவனங்களுக்கு அதிக சேதம் விளைவிப்பதைத் தடுப்பதற்காக அனைத்து தேர்வுகளும் மேசையில் இருக்க வேண்டும் என்றும் அரசியல் ஆலோசகரும் Full Circle Strategies இன் நிறுவனருமான ஜோடகா எடி கூறினார்.
“அவர் வன்முறையைத் தூண்டி வருவதுடன் அதற்கு தேவையான தளத்தையும் சூழ்நிலையையும் உருவாக்கியும் இருந்தார்.” என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.
டிரம்பை நீக்க இரண்டு வழிகள்
ஒரு ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க இரண்டு வழிகள் உள்ளன: ஒன்று நம்பிக்கையில்லா பிரேரணை மற்றையது அமெரிக்க அரசியலமைப்பின் 25 வது திருத்தம். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், ஜனவரி 20 ஆம் தேதி பைடனின் பதவியேற்பு இடம்பெறும் வரை துணை ஜனாதிபதி பென்ஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்க முடியும்.
ஆனால் ஜனவரி 20ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நிறைவேற்றுவது சிரமமான விடயம். அதனால் 25 ஆவது திருத்தத்தின் பிரயோகத்திற்கே அதிக சாத்தியம் உள்ளன..
இதற்கு முன்னதாகவும் டிரம்ப்புக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டாலும், அது வெற்றியளித்து அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க முடிந்திருக்கவில்லை.
25 வது திருத்தத்தின் நோக்கம் என்ன?
1967 ஆம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மற்றும் 1963 இல் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட 25 வது திருத்தம், ஜனாதிபதி ஒருவரை இன்னொருவர் நிரப்புவது மற்றும் ஜனாதிபதி ஒருவரின் பணி இயலாமை குறித்து விவாதிக்கிறது.
இது முன்னர் சுகாதார காரணங்களால் தற்காலிகமாக அதிகாரத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்ட ஜனாதிபதிகளால் பயன்படுத்தப்பட்டது.
குறிப்பாக 2002 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யூ புஷ் கொலோனோஸ்கோபிக்கு உட்பட்டு மயக்க மருந்தின் கீழ் இருந்த சந்தர்ப்பத்தில், தற்காலிகமாக துணை ஜனாதிபதி டிக் செனிக்கு அதிகாரத்தை மாற்றுவதற்காக இத் திருத்தத்தின் பிரிவு 3 ஐப் பயன்படுத்தினார். அதே செயற்பாட்டை புஷ் திரும்பவும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓர் மருத்துவத் தேவைக்காக தற்காலிகமாக பயன்படுத்தினார்.