அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் மதிப்பிற்குரிய ஜெனரல் காஸ்ஸெம் சுலைமாணி மற்றும் ஈராக்கின் தளபதி அபு மஹ்தி அல்–முஹந்திஸைக்கின் ஒரு வருட நினைவு நாளில், துயரம் கொண்டாடிய ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் “அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள்” வெளியேற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மத்திய பாக்தாத்தின் தஹ்ரிர் சதுக்கத்திற்கு செல்லும் வீதிகள் ஆயிரக்கணக்கான ஆர்பாட்டக்காரர்களால் நிரம்பியிருந்தன. ஈரான், சிரியா, லெபனான், யெமன் மற்றும் மத்திய கிழக்கின் பிற இடங்களிலும் இவ் இருவருக்கும் துயரம் அனுஷ்டிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலைமாணி மற்றும் அல்–முஹந்திஸின் படங்களையும், ஈராக்கிய கொடிகளையும் ஏந்திய வண்ணம் ‘படுகொலை செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்’ என்று கோஷமிட்டனர். மேலும் ‘ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும் என்கிற பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.
போராட்டக்காரர்களை நோக்கி உரையாற்றிய ஹஷ்த் அல்–ஷாபியின் தலைவர் ஃபலே அல்–ஃபயாத், குற்றம் இழைத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதாகவும், அமெரிக்க துருப்புக்கள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.
இரானின் நீதித்துறையின் தலைவர் இப்ராஹிம் ரைசி ‘‘சுலைமாணியின் மரணத்திற்கான பழிவாங்குவதலை தெஹ்ரான் இன்னும் முடிக்கவில்லை, அவர்களுக்கு எதிரான பழிவாங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும், இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் யாரும் பூமியில் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள்’’ என்று கூறினார்.
சனிக்கிழமை இரவு பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே துக்கம் அனுஷ்டிக்க ஒன்று கூடிய ஆயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்திகளை ஏற்றி, தங்கள் “தியாகிகளை” கௌரவித்ததோடு அமெரிக்காவை “பெரிய சாத்தான்“ என்று கண்டனம் செய்தனர்.
“அமெரிக்காவிற்கும், இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் நாங்கள் கூறுகிறோம், அவர்கள் நம்மீது மிகப் பெரிய இழப்புகளைச் சுமத்தினாலும் அது இரத்தக்களரியாக இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம்“ என்று ஹஷ்த் ஆதரவாளரான பத்துல் நஜ்ஜார் கூறினார்.
“ஈராக்கில் அமெரிக்கர்களுக்கு எதிராக அதிகளவிலான தாக்குதல் உரையாடல்கலை அமெரிக்கா செவிமடுப்பதாகவும், ஒரு அமெரிக்கர் கொல்லப்பட்டால் கூட, நான் ஈரானையே பொறுப்புக்கூற செய்வேன். யோசித்துப் பாருங்கள்” என்று டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான டிசம்பர் 20 ராக்கெட் தாக்குதலுக்கு, தெஹ்ரானை குற்றம் சாட்டியதை அடுத்து, ஈரானின் வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஸரீஃப் கடந்த வியாழக்கிழமை, டிரம்ப் ஒரு போரை நோக்கமாகக் கொண்டு “அதற்கு பொய்யான சாக்குப்போக்குகளை” உருவாக்குவதாக குற்றம் சாட்டினார்.
மேலும், ஈராக்கில், “இஸ்ரேலிய உளவாளிகள் அமெரிக்கர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது ட்ரம்ப் போர் தொடுப்பதற்கு நியாயப்படுத்தும் செயலுடன் பிணைக்கப்படும்“ என்று கடந்த சனிக்கிழமையன்று ஜரீஃப் கூறினார்.