அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2021 ஆம் ஆண்டிற்கான 2.3 டிரில்லியன் டாலர் செலவுச் சட்ட மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார், இதில் இலங்கைக்கான நிதியுதவியும் உள்ளடங்குகிறது என்று டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், காங்கிரஸால் அங்கீகரிக்கப்பட்ட மசோதா, சில நிதியங்களை விடுவிப்பதற்கான நிபந்தனைகளை முன்வைக்கிறது. இதில் சீன குடியரசின் செல்வாக்கிற்கு எதிராக இலங்கை தனது இறையாண்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.
செப்டம்பர் 30, 2021 உடன் முடிவடையும் நிதியாண்டிற்கான ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டைச் செய்யும் H.R. 133 சட்டம் இலங்கையின் ஜனநாயகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கும், குறிப்பாக இன மற்றும் மத மோதல்களில் இருந்து மீண்டு வரும் பகுதிகளுக்கும் நிதி ஒதுக்கப்படும் என்று குறிப்பிடுகிறது.
எவ்வாறாயினும், இலங்கையின் மத்திய அரசுக்கான நிதி, இன, மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் மக்களின் சுதந்திரங்களையும், உரிமைகளையும் மதித்து அதை நிலை நிறுத்துவதற்காக, மனித உரிமை மீறல்களை விசாரிப்பதன் மூலமும், அத்தகைய மீறல்களின் குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதன் மூலமும், இலங்கை அரசாங்கம் பயனுள்ள மற்றும் நிலையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிதி ஒதுக்கீட்டு குழுவிற்கு சான்றிதழ் அறிக்கை ஒன்றை அளித்தால் மத்திரமே, சில நிதி கிடைக்கும் என்று அமெரிக்க செயலாளர், H.R. 133 குறிப்பிடுகிறது.
இதில் சீனக் குடியரசின் செல்வாக்கிற்கு எதிராக இறையாண்மையின் உறுதி, ஆளுமையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல், இன மற்றும் மதக் குழுக்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை, குறிப்பாக இலங்கையில் கடந்த கால மோதல்களிலிள் ஈடுபட்ட குழுக்களுக்கு இடையில் ஊக்குவித்தல் போன்ற நிபந்தனைகளை உள்ளடக்கியுள்ளது.
மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவுக்கான நிவாரணங்களில், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், காணாமல் போனவர்களைக் கண்டறிந்து அடையாளம் காணுதல், சித்திரவதை மற்றும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் சார் பாதுகாப்பு மற்றும் கள விழிப்புணர்வை மேம்படுத்த, கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கான பயிற்சிக்கு, நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் இறையாண்மையை ஊக்குவிக்க, மற்றும் சர்வதேச இராணுவ கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றிற்கு இலங்கைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது.