ஒரு முக்கிய பேஸ்புக் பக்கத்தில் தோன்றிய ஒர் செய்திக்கு எதிர்வினையாற்றிய இனவெறி பதிவுகளில், இலங்கையில் இனவெறியைத் தூண்டும் விதமாக சந்தேகத்திற்கிடமான “BOT நடவடிக்கைகள்” இடம் பெற்றிருப்பதாக சமூக ஊடக ஆய்வாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
‘‘இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று மாலை கந்தலாயில் விபத்துக்குள்ளானது’’ – இது பிரபல பத்திரிகையாளர் அசாம் அமீனின் பேஸ்புக் பக்கத்தில் வெளிவந்த இடுகை.
இந்த இடுகைக்கு கணிசமான எண்ணிக்கையிலான “haha” எதிர்வினைகள் (FB Reactions/Expressions) இடப்பட்டிருந்தன. மேலும் இந்த எதிர்வினைகளில் பெரும்பாலானவை முஸ்லீம் பெயர்களைக் கொண்ட பேஸ்புக் பக்கங்களில் இருந்து வந்திருந்தது.
இந்த பேஸ்புக் பக்கங்களை ஆராய்ந்த ‘‘ஆசியன் மிரர்’’ அவற்றில் பெரும்பாலானவை போலி கணக்குகள் என்று தெரிவித்துள்ளது. மேலும் பல இலங்கையர்களுக்கு ஆழ்ந்த உணர்திறன் கொண்ட ஒர் செய்திக்கு இனவாதத்தை தூண்டும் விதமாக நன்கு திட்டமிடப்பட்ட பொருத்தமான எதிர்வினைகளை இடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
“இந்த BOt நடவடிக்கையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டியது அவசியம்; ஏனெனில் இது இலங்கையில் உள்ள பல்வேறு இன மற்றும் மத சமூகங்களிடையே அவநம்பிக்கையையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது” என்று ஒரு முக்கிய சமூக ஊடக ஆய்வாளர் கூறுகpறார்.
BOT என்பது ஒரு மென்பொருள் பயன்பாடாகும்; இது சில பணிகளைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது; BOT கள் தானியங்கி முறையில் இயங்குகின்றன; ஒர் மனித பயனர் ஒரு நடவடிக்கையை ஆரம்பித்து வைக்கமலேயே ஏற்கனவே அவற்றிற்கு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இவற்றால் செயல் பட முடியும். மீண்டும் மீண்டும் ஒரே பணிகளைச் செய்ய மனித பயனரின் பயன்பாட்டிற்கு பதிலாக BOT களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன; மேலும் மனித பயனர்களால் செய்யவதை காட்டிலும் இவற்றால் மிக வேகமாக செயல் பட முடியும்; இலங்கையில் சமூகங்களுக்கிடையில் இனரீதியான பதட்டங்களை உருவாக்க சில குழுக்கள் “BOT களை” பயன்படுத்தியுள்ளதா என்பதை விசாரிக்க வேண்டியது மிக அவசியமாக திகழ்கிறது.
விமான விபத்தில் இறந்தவர் 2019 ஜனவரியில் இலங்கை விமானப்படையில் சேர்ந்த பயிற்சி விமானி ஷாலிந்த அமரகோன் ஆவார். அவர் ஒரு தனி பயிற்சி பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளானார்.