பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ‘‘இஸ்லாம் ஒர் அரசியல் சார்பற்ற மதம்’’ என்று ஒப்புக்கொண்டு 15 நாட்களுக்குள் ஒரு சாசனத்தை உருவாக்குமாறு பிரெஞ்சு முஸ்லீம் தலைவர்களிடம் கோரி இருக்கிறார்.
கடந்த புதன்கிழமை மாலை பல இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி மக்ரோன், பிரெஞ்சு இஸ்லாமிய நம்பிக்கை சபை France’s Council of the Islamic Faith கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒரு சாசனத்தை உருவாக்க வேண்டும் என்று கோரினார்.
மேலும் இந்த சாசனத்தில் ‘‘பிரெஞ்சு விழுமியங்களை உறுதிப்படுத்துதல், பிரான்சில் இஸ்லாம் ஒரு மாத்திரமே அதுவொரு அரசியல் இயக்கம் அல்ல என்பதற்கான விவரக்குறிப்பு’’ ஆகியவை இருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டுக் குறுக்கீடுகளுக்கும் தொடர்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரினார்.
நாட்டில் புதிய முஸ்லீம் இமாம்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு பொறுப்பாக, ‘‘இமாம்களின் தேசிய சபை’’ என்று ஒன்றை உருவாக்குவது பற்றிய விவாதங்களும் இக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இஸ்லாமிய நம்பிக்கையின் பிரெஞ்சு சபையின் தலைவர் மொஹமட் மெளசவி மற்றும் பாரிஸ் மசூதியின் தலைவர் ஷம்ஸ் எல் தின் ஹபீஸ் ஆகியோருடன் பிரெஞ்சு இஸ்லாமிய நம்பிக்கை சபையின் உருவாக்கத்திற்கு தொடர்புடைய ஒன்பது கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரெஞ்சு இஸ்லாமிய நம்பிக்கை சபை என்பது தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது முஸ்லீம் மத நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் பிரெஞ்சு அரசுடன் அதிகாரப்பூர்வ பேச்சாளராக பணியாற்றி வருகிறது.
ஜனாதிபதி மக்ரோன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் “இந்த குழப்பத்திலிருந்து வெளியேறுவது” அவசியம் என்றும், அவர்களில் பலர் இந்த பிரச்சினைகளில் தெளிவற்ற நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனர் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
“எவராவது இந்த சாசனத்தில் கையெழுத்திடவில்லை என்றால், அவர்கள் தொடர்பாக நாங்கள் முடிவுகளை எடுப்போம்” என்றும் “அவர்களின் திட்டங்களை தான் கவனத்தில் கொண்டுள்ளதாகவும்” மக்ரோன் எச்சரித்தார்.
புதிதாக உருவாக்கப்பட்ட இமாம்களின் சபை இமாம்களுக்கு அனுமதி வழங்குவதோடு மட்டுமல்லாமல், “குடியரசு விழுமியங்ககளின் சாசனத்தை” மீறினால் இந்த அனுமதிகளை திரும்பப் பெறும் அதிகாரமும் இவர்களுக்கு உண்டு என்பதை சாசனத்தில் உள்ளடக்குமாறு மக்ரோன் கோரினார்.
இமாம்களின் வகிக்கும் பதவிகளைப் பொறுத்து, அவர்கள் பிரெஞ்சு மொழியில் குறிப்பிட்டளவு சரளமாக இருக்க வேண்டும் மற்றும் பல்கலைக்கழக அளவிலான கல்வித் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
தேசிய இமாம்கள் சபையை அமைப்பதினூடாக தற்போது துருக்கி, மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவிலிருந்து வந்த 300 வெளிநாட்டு இமாம்களை நான்கு ஆண்டுகளுக்குள் பணி நீக்கம் செய்ய மக்ரோன் விரும்புகிறார்.
முன்னதாக “Iஇஸ்லாமிஸம்” இற்கு எதிரான கடுமையான ஒரு புதிய பிரச்சாரத்தை மேற்கொள்ளப்போவதாக உறுதியளித்த மக்ரோன்னின் பேச்சு உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.