கடந்த சனிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் நாட்டிலுள்ள தனிமனித இஸ்லாமிய சட்டங்களில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக அறிவித்தது. இது திருமணமாகாத தம்பதியினர் ஒன்றிணைய அனுமதிப்பதோடு மதுபான கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளது. அத்துடன் வளைகுடா நாடுகளில் பின்பற்றப்பட்டு வந்த பழங்குடி வழக்கங்களில் ஒன்றான “கெளரவக் கொலைகள்” என்று அழைக்கப்படும் நடைமுறையையும் குற்றமாக்கியுள்ளது.
மேலும் மது சம்பந்தமான மாற்றங்களில் மது அருந்துதல், 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விற்பனை செய்தல் மற்றும் வைத்திருத்தல் ஆகியவற்றுக்கான அபராதங்களை அகற்றியுள்ளது. சட்ட சீர்திருத்தங்கள் அரசு நடத்தும் WAM செய்தி நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டன. மற்றும் அமீரகத்தின் செய்தித்தாளான தி நேஷனல் பத்திரிகையும் விரிவாக கூறியுள்ளது.
முன்னதாக தனிநபர்கள் மதுபானம் வாங்க, கொண்டு செல்ல அல்லது தங்கள் வீடுகளில் வைத்திருக்க மதுபான அனுமதிப்பத்திரம் தேவைப்பட்டது. புதிய விதி முஸ்லிம்களை மதுபானங்களை சுதந்திரமாக குடிக்க இனி அனுமதிக்கும்.
மற்றொரு திருத்தமானது “திருமணமாகாத தம்பதிகள் இணைந்து வாழ்வதற்கு” அனுமதிக்கிறதுஇ இது ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்டகாலமாக ஒர் குற்றமாகவும் விபச்சாரமாகவும் கருதப்பட்டது.
“கெளரவக் கொலைகள்” என்று அழைக்கப்படுபவற்றைப் பாதுகாக்கும் சட்டங்களிலிருந்து விடுபடவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஒர் பெண்ணை ஒழுக்கமின்மைக்காக “அவமானப்படுத்தல்” அல்லது மத மற்றும் கலாச்சார விதிமுறைகளை மீறிய குற்றத்திற்கான சமூகத் தண்டனைகள் போன்றன தற்போது பாரிய தாக்குதல் குற்றத்திற்கு நிகராகவே கருதப்படும். “பெண்களை எந்தவொரு விதமான தொல்லைகளுக்கும் உட்படுத்தும் ஆண்களுக்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். இது தெருக்களில் பெண்களை துன்புறுத்தல் அல்லது பின்தொடர்வதற்கு நிகராக கருதப்படுகிறது.” என்று தி நேஷனல் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் உலக வர்த்தக கண்காட்சியை பிரமாண்டமாக நடத்த ஐக்கிய அரபு அமீரகம் தயாராகி வருவதை முன்னிட்டு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஒரு வருடம் பிற்போடப்பட்ட இந் நிகழ்வின் மூலமாக வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் 25 மில்லியன் பார்வையாளர்களை நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பு:
கௌரவக் கொலைகளை இஸ்லாம் முற்றிலுமாக தடை விதிக்கிறது என்பது யாவரும் அறிந்த விடயமே. அதிலே மாற்றங்களைக் கொண்டுவருவதாக கூறிக்கொண்டு இஸ்லாத்தின் பார்வையில் மாபாதங்களாகக் கருதப்படும் பதுபானம், விபச்சாரம் போன்றவற்றை ஹலாக்குகின்ற அமீரகத்தின் முடிவு விசனத்துக்குரியது என்பதைவிட நகைப்புக்குரியது என்றே கூறத் தோன்றுகிறது. அமெரிக்க, சியோனிச கயவர்களுடன் கூட்டாக விபச்சாரம் செய்யும் அரசிடம் இருந்து வேறு எதனை நாம் எதிர்க்க முடியும்?
.