கடந்த ஆண்டு பல மாதங்களாக கிழக்குப் பிராந்தியத்தை அடித்தளமாகக் கொண்ட படைப் பிரிவுகளால் லிபியத் தலைநகர் மீது தடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிறகு லிபியாவுக்குள் இருதரப்பும் நேருக்கு நேராக பேச்சுவார்த்தைக்காக சந்தித்துள்ளனர். இதற்காக லிபியாவின் போரிடும் தரப்பிலிருந்து இராணுவ அதிகாரிகள், கடேம்ஸ் நகருக்கு வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
திங்களன்று தொடங்கிய மூன்று நாள் கூட்டம், திரிப்போலியில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கும், துரோகி இராணுவத் தளபதி கலீஃபா ஹப்தாரின் சுய பாணியிலான லிபிய தேசிய இராணுவத்திற்கும் இடையே கடந்த மாதம் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா.வின் லிபியா தூதர் ஸ்டெபானி வில்லியம்ஸும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
பாரிய எண்ணெய் உற்பத்தி நாடான லிபியா, 2011 இல் நேட்டோவின் ஆதரவுடன் இடம்பெற்ற எழுச்சியின் போது மூத்த தலைவரான முஅம்மர் கடாபியை தூக்கி எறிந்து கொலை செய்ததில் இருந்து வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது.
அப்போதிருந்து, இவ்வட ஆபிரிக்க நாடு ஆயுதக் குழுக்களின் ஆதிக்கத்திலிருந்து வருகிறது. உள்ளூர் மோதல்களை கடுமையாக எதிர்வு கொண்ட இரண்டு பிரிவுகளுக்கிடையில் நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளது. திரிப்போலியின் நிர்வாகம் ஐ.நா. பின்னணியில் நின்று தரகு செய்த தேசிய உடன்படிக்கை அரசு (Tripoli’s UN-brokered Government of National Accord (GNA) பிரதமர் ஃபயஸ் அல்-சர்ராஜ் தலைமையிலும், கிழக்கின் நிர்வாகம் எதிராளியான ஹப்தரின் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது.
போரிடும் இரு பிரிவுகளும் நாட்டை சீரலிக்கும் மோதலிலிருந்து விடுபட்டு, ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்த வழி வகுக்கும் நோக்கில் ‘நிரந்தர’ போர்நிறுத்த ஒப்பந்தத்தில் அக்டோபர் 23இல் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இந்த கூட்டு இராணுவ ஆணையத்தின் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் சமாதானத்திற்கான நீண்டகால முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று சொல்லப்படுகிறது.
ஹப்தார் எகிப்து, ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் ஏப்ரல் 2019 இல் திரிப்போலி மீது தாக்குதலைத் தொடங்கினார். ஆனால் ஜூன் மாதத்தில் துருக்கியின் இராணுவ ஆதரவுடன் GNA வால் தீவிரமான பதிலடித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. ஆதரவின் கீழ் மொராக்கோ, எகிப்து மற்றும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் போர்க் குழுக்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பின.
மேலும் நவம்பர் 9 ஆம் தேதி, அரசியல் தலைவர்கள் துனிசியாவில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் சந்திக்க உள்ளனர்.