அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நவம்பர் தேர்தலில் தோல்வியுற்றால் அமைதியான முறையில் அதிகாரத்தை பரிமாற்றுவதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.
“அச்சமயத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்” என்று வெள்ளை மாளிகையில் ஒரு செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதி டிரம்ப் கூறினார். தபால் மூலமான வாக்களிப்பிற்கு சந்தேகத்தை எழுப்பிய ட்ரம்ப், தேர்தல் முடிவு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் முடிவடையும் என்று தான் நம்புவதாக கூறினார்.
தற்போது கருத்துக் கணிப்பில், ஜனாதிபதி ட்ரம்ப் தனது சக போட்டியாளரை விட பின் தங்கியிருக்கும் நிலையில், கடந்த புதன்கிழமை மாலை ஒரு நிருபர் “நீங்கள் ஜோ பைடனுக்கு எதிராக வெற்றி, தோல்வி அல்லது சமநிலையை அடைந்தால் அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதற்கான உறுதிமொழி தர முடியுமா ? “ என்று கேட்டார்.
“வாக்களிப்பு (Ballots) குறித்து நான் மிகவும் கடுமையாக புகார் அளித்து வருகிறேன்; மேலும் வாக்களிப்பு (Ballots) ஒரு பேரழிவு (disaster)” என்று டிரம்ப் கூறினார்.
“மக்கள் கலகத்தில் உள்ளனர்” என்று பத்திரிகையாளர் பதிலளித்தபோது ட்ரம்ப் குறுக்கிட்டு வாக்களிப்பிலிருந்து விடுபடுங்கள்; அது உங்களுக்கு மிகவும் அமைதியானதாக இருக்கும் – ஒரு பரிமாற்றமும் இருக்காது… உண்மையாக…அனைத்தும் தொடர்ந்து நடக்கும்…” என்று கூறினார்.
கொரோனா வைரஸிலிருந்து அமெரிக்கர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி, அதிகமான மாநிலங்கள் தபால் மூலம் வாக்களிப்பதை ஊக்குவிக்கின்றன.
இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியுற்ற ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் தோல்வியை உடனடியாக ஒப்புக் கொண்டனர். தேர்தல் முடிவை ட்ரம்ப் ஏற்க மறுத்தால், அமெரிக்கா இதுவரை காலம் சந்திக்காத ஒரு அசாதாரண சூழலை நோக்கி கொண்டு செல்லும்; இது எவ்வாறான விளைவுகளை உண்டு பண்ணும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ட்ரம்பின் போட்டியாளரான ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பைடன்இ இப்படியான ஒர் சூழ்நிலை ஏற்படுமாயின் வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்பை வெளியேற்ற இராணுவம் முன்னிலைப் படுத்தப்படும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
கொரோனா வைரஸ் குறித்த பொது சுகாதார கவலைகள் காரணமாக இந்த முறை தபால் மூலமான வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கூட்டாட்சி தேர்தல் ஆணையத்தின் ஆணையாளர் எலன் வெயிண்ட்ராப் “தபால் மூலம் வாக்களிப்பது, மோசடிக்கு வழி வகுக்கிறது என்ற சதி கோட்பாட்டிற்கு எந்த அடிப்படையும் இல்லை” என்று கூறினார்.
அதற்கு முன்னுதாரணமாக, குடியரசு வேட்பாளருக்கான ஆலோசகர் வாக்களிப்பு ஆவணங்களை சேதப்படுத்திய பின்னர் மீண்டும் இயக்கப்பட்ட 2018 (Primary) வட கரோலினா போன்ற அஞ்சல் வாக்கு மோசடி தொடர்பான தனிமைப்படுத்தப்பட்ட வழக்குகள் மாத்திரமே உள்ளன.
அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக வாக்களிக்கும் மோசடி விகிதம் வெறும் 0.00004 % முதல் 0.0009 % வரையே உள்ளது என்று ப்ரென்னன் சென்டர் ஃபார் ஜஸ்டிஸ் (Brennan Centre for Justice) நடத்திய 2017 ஆய்வின்படி தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்த ஆண்டு நியூஜெர்சியில் இரண்டு ஜனநாயக கவுன்சிலர்கள் தபால் வாக்குப்பதிவு தொடர்பாக மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர். நூற்றுக்கணக்கான வாக்குச்சீட்டுகள் ஒரு அஞ்சல் பெட்டியில் அடைக்கப்பட்டிருந்தது கண்டெடுக்கப்பட்டது.
மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (Massachusetts Institute of Technology) யின் அரசியல் விஞ்ஞானி சார்லஸ் ஸ்டீவர்ட்டின் ஆய்வின்படி, தபால் வாக்குகள் தொலைந்து போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 2008 தேர்தலில் தபால் முறை மூலம் காணாமல் போன வாக்குகளின் எண்ணிக்கை 7.6 மில்லியனாக இருக்கலாம் அல்லது தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முயன்ற ஐந்து நபர்களில் ஒருவரது வாக்கு தொலைந்துள்ளது என்று அவர் கணக்கிட்டுள்ளார்.