செய்தியும், குறிப்பும் – 23/09/2020
1. எகிப்தில் பல பிரதேசங்களில் போராட்டங்கள் வெடித்தன
2. வங்கித் துறையின் பித்தலாட்டம்
3. ஹிஜாப்பை காரணம் காட்டி பிரெஞ்சு அமைச்சர் வெளிநடப்பு
விவரங்கள்:
1. எகிப்தில் பல பிரதேசங்களில் போராட்டங்கள் வெடித்தன
இந்த வாரம் எகிப்தில் பல பிரதேசங்களில் போராட்டங்கள் வெடித்தன. அல்–கானேட்டர் (Al-Qanater), கலியுபியா (Qalyubia) கவர்னரேட் போன்ற இடங்களில், எதிர்ப்பாளர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்படுவதைத் தவிர்த்து கொள்ளும் முகமாக குறுகிய தெருக்களினூடாக அணிவகுத்துச் சென்று தங்களுடைய எதிர்ப்பை காட்டியுள்ளனர். கிசா (Giza) கவர்னரேட்டில் உள்ள கடியா கிராமத்தில் (Kadiya Village) அரசாங்கம் கட்டிடங்களை இடித்ததினால் கோபமடைந்த எதிர்ப்பாளர்கள் ஒரு போலீஸ் டிரக் வண்டியை கவிழ்த்தனர்.
தஹ்ரிர் சதுக்கம் (Tahrir Square) மற்றும் சூயஸ் (Suez) உட்பட நாடு முழுவதும் பல பகுதிகளில் உள்ள குறுக்கு மற்றும் நெடுஞ்சாலைகளில் எகிப்திய பாதுகாப்புப் படையினரின் இராணுவ சோதனைச் சாவடிகள் நிறுத்தப்பட்டிருக்கும் சமயத்திலேயே இந்த ஆர்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
அரபு வசந்த போராட்டங்களுக்கு அடிச்சுவடுகளாக இருந்த பல காரணிகள் அப்தெல் பத்தா எல்–சிசியின் ஆட்சியின் கீழும் தொடர்ந்து, நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. அவர் தனது முன்னோடிகளை விட மிகவும் மோசமானவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். சீசி போன்ற நவீன பிர்அவ்ன்களின் நாட்கள் முஸ்லிம் உலகில் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையே இத்தகைய போராட்டங்கள் உணர்த்துகின்றன.
2. வங்கித் துறையின் பித்தலாட்டம்
சுமார் 2 டிரில்லியன் டாலர்களின் பரிவர்த்தனைகள் சம்பந்தமாக கசிந்த ஆவணங்கள், உலகின் மிகப் பெரிய வங்கிகள் சில குற்றவாளிகளின் அழுக்கு பணத்தை உலகெங்கும் நகர்த்த அனுமதித்திருப்பது தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவின் ஒலிகார்க்கள் (Russian Oligarchs) தங்கள் பணத்தை மேற்கு நாடுகளுக்குள் கொண்டு செல்வதற்கு முற்றுக் கட்டையாக இருக்கும் தடைகளைத் தவிர்ப்பதற்காக வங்கிகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதையும் இந்த ஆவணங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இரகசிய ஒப்பந்தங்கள், பணமோசடி மற்றும் நிதிக் குற்றங்களை அம்பலப்படுத்திய கசிவுகளின் வரிசையில் இந்தக் கசிவு சமீபத்தியது.
ஃபின்சென் கோப்புகள் (FinCEN Files) 2,500 க்கும் மேற்பட்ட ஆவணங்களை உள்ளடக்கியது. இவற்றில் பெரும்பாலான கோப்புகள் அமெரிக்க அதிகாரிகளுக்கு 2000 – 2017 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வங்கிகளால் அனுப்பப்பட்டவை. இந்த ஆவணங்கள் சர்வதேச வங்கி அமைப்பினால் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்ட இரகசியங்களாகும்.
மோசடி செய்பவர்களால் திருடப்பட்ட மில்லியன் கணக்கான டாலர் பணத்தை உலகெங்கிலும் நகர்த்த HSBC வங்கி அனுமதித்துள்ள செய்தியையும்F இந்த ஆவணம் வெளிப்படுத்தி உள்ளது. அமெரிக்க புலனாய்வாளர்களிடமிருந்து இந்த மோசடி நடவடிக்கை குறித்த அறிவித்தல் அவர்களுக்கு கிடைத்த நிலையிலும் அவர்கள் அதனை அனுமதித்துள்ளனர்.
ஜே.பி. மோர்கன் யார் உரிமையாளர் என்பது கூட தெரியாமல் ஒர் லண்டன் கணக்கின் மூலம் 1 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை வேறு இடங்களுக்கு நகர்த்த ஒரு நிறுவனதிற்கு அனுமதித்திருக்கிறது. பின்னர் அது FBI இனால் மிகவும் தீவிரமாக தேடப்படும் முதல் 10 மோசடிக் கும்பல்களில் ஒன்றுக்கு சொந்தமான நிறுவனமாக இருக்கலாம் என்று வங்கி கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.
முதலாளித்துவ உலகின் அச்சாணியான வட்டி அடிப்படையிலான வங்கி முறைமை எப்போதும், முதலாளித்துவ முதலைகளை பாதுகாப்பதிலும், வெள்ளைப் பணமோ, கறுப்புப் பணமோ அதனை தனது சுயலாபத்துக்காக பயன்படுத்துவதிலும், பொதுமக்களின் வியர்வையையும், இரத்தையும் உருஞ்சி அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. முதலாளித்துவ சத்தாந்தத்தின் இயலாமையையும், அழிவையும் இன்று உலகம் நேரடியாக அனுபவித்து வருகின்ற நிலையில், இஸ்லாத்தை அடிப்படை அரசியல், பொருளாதார மாற்றீடாக முன்வைப்பதே இத்தகைய அநீதிகள் தொடராது இருக்க உத்தரவாதத்தை அளிக்கும்.
3. ஹிஜாப்பை காரணம் காட்டி பிரெஞ்சு அமைச்சர் வெளிநடப்பு
ஒரு வலதுசாரி பிரெஞ்சு அமைச்சர் Covid-19 தொற்றுநோயால் பிரெஞ்சு இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த நாடாளுமன்ற விசாரணையில் இருந்து வெளிநடப்பு செய்வது ,தனது தொகுதி வாக்காளர்களின் நலனுக்கு சிறந்தது எனக் கருதி வெளியேறியுள்ளார்.
அமைச்சர் என்னி–கிறிஸ்டின் லாங் (Anne-Christine Lang), பிரான்சில் உள்ள தேசிய மாணவர் ஒன்றியத்தின் UNEF ( National Union of Students in France) பிரதிநிதியான மரியம் பூக்டூக்ஸ் (Maryam Pougetoux) ஹிஜாப் அணிந்த நிலையில் விசாரணையில் கலந்து கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று விசாரணையிலிருந்து வெளியேறினார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, லாங் தனது டுவிடரில் “எங்கள் வேலையில் பங்கேற்க தேசிய சட்டமன்றத்தில் ஒரு நபர் ஹிஜாபுடன் வருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, இது ஓர் அடிமைத்தனத்தின் அடையாளமாக எனக்கு தெரிகிறது. எனவே நான் இந்த விசாரணையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாத்துக்கு எதிரான பௌதீக மற்றும் சிந்தனா ரீதியான போராட்டங்களில் எப்போதும் முன்னணியில் நிற்கின்ற நாடு பிரான்ஸ். குறிப்பாக முதலாளித்துவ சித்தாந்ததின் அடிப்படைக் கொள்கையான மதச்சார்பின்மையை ஐரோப்பாவில் சமரசமின்றி தூக்கிபிடிப்பது யார் என்பதில் போட்டிபோடும் நாடுகளில் ஒன்று அது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்துக்கு சுதந்திரம், தாராண்மைவாதம் என்ற பெயரில் இன்று வரை அது அளித்து வருகின்ற தொந்தரவுகள் ஏராளம். அண்மையில் கூட சார்லி ஹெப்டோ பத்திரிகை இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எதிரான கேலிச் சித்திரத்தை மீள பிரசுரித்து வீண்பு பண்ணியது நாம் அறிந்ததே.