செய்தியும், குறிப்பும் – 17/09/2020
- அமெரிக்காவை நோக்கி ஈரானின் எச்சரிக்கை!
- தலிபான் – ஆப்கான் அரச பேச்சுவார்த்தை ஆரம்பம்
- Netflix, சவுதியில் ‘Porn’ ஐ ஒளிபரப்ப முடியும்; ஆனால் MBS ஐ விமர்சிக்க முடியாது!
விவரங்கள்:
1. அமெரிக்காவை நோக்கி ஈரானின் எச்சரிக்கை!
உயர்மட்ட ஜெனரல் காஷிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெஹ்ரானை அச்சுறுத்தியதை அடுத்து, “மூலோபாய தவறு” செய்யக்கூடாது என்று ஈரான் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
“அவர்கள் ஒரு புதிய மூலோபாய தவறை செய்ய மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்; எந்தவொரு மூலோபாய தவறும் ஏற்பட்டால், அவர்கள் நிச்சயமாக ஈரானின் தீர்க்கமான பதிலைக் காண்பார்கள்” என்று அலி ரபீ கூறினார்.
தென்னாப்பிரிக்காவிற்கான அமெரிக்க தூதருக்கு எதிராக, ஈரானிய அரசாங்கம் ஒரு படுகொலை முயற்சியை மேற்கொண்டு வருவதாக வெளியான அறிக்கைக்கு எதிர்வினையாக இக்கருத்துகள் வெளி வந்தன.
சிறிது காலமாக பொருளாதாரத் தடைகள், பொருளாதார சீர்கேடு மற்றும் ஊழல் காரணமாக தெஹ்ரானில் மதகுரு ஆட்சி பலத்த சவால்களுடன் போராடி வருகிறது. ஜனவரி மாதம் நிகழ்ந்த காஷிம் சுலைமானியின் படுகொலைக்கு, ஈரான் அளித்த வேடிக்கையான பதில் யாவரும் அறிந்ததே. அதாவது ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த இருப்பதாக அமெரிக்காவிற்கு ஏற்கனவே தெரிவித்து, அமெரிக்காவை உசார் படுத்திய பின், வெற்றுக் கட்டிடங்களின் மேல் அது நடத்திய தாக்குதல்கள் தான் அதுவாகும்.
தற்போதைய ஈரானின் சவால் விடுக்கும் சொல்லாட்சியும் இதே போன்ற தந்திரோபாய பின்னணியிலிருந்தே பார்க்கப்பட வேண்டும்.
2. தலிபான் – ஆப்கான் அரச பேச்சுவார்த்தை ஆரம்பம்
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும், தலிபானுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ அமைதிப் பேச்சுவார்த்தை செப்டம்பர் 12 ஆம் தேதி கட்டாரின் டோஹாவில் தொடங்கியது. இரு தரப்பு பேச்சுவார்த்தைக் குழுக்களுக்கிடையிலான தொடர்பாடல் ,முதன்மையாக, தளவாட ஏற்பாடுகள் (Logistical arrangement) மற்றும் பொதுவான பரந்த அளவிலான இலக்குகளை (broad goals) நிறுவுதல் என்பது குறித்து அமைந்திருக்கிறது.
இச்சந்திப்பு தலிபான் தூதுக்குழுக்கும், ஆப்கான் தூதுக்குழுவிற்கும் இடையிலான முதலாவது சந்திப்பாக இருந்தபோதிலும், இது ஒரு நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறையின் ஆரம்பம் மட்டுமே. இது எந்தவொரு உடனடி ஒப்பந்தங்களுக்கும் வழிவகுக்க வாய்ப்பில்லை.
2020 பிப்ரவரி 28 அன்று கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-தலிபான் ஒப்பந்தத்தில், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும், தலிபானுக்கும் இடையில் நேரடி பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்துவது, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை மீளப்பெறுவதற்கான (Withdrawal) ஒரு முக்கிய நிபந்தனையாகக் குறிப்பிடப்பட்டது.
இங்கே ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவேன்றால் அமெரிக்காவை தோற்கடித்து போர்க்களத்தில் வெற்றிபெறும் தருணத்தில் தலிபான் ஏன் பேச்சுவார்த்தைக்கு முன் வந்திருக்கிறது என்பதே?
3. Netflix, சவுதியில் ‘Porn’ ஐ ஒளிபரப்ப முடியும்; ஆனால் MBS ஐ விமர்சிக்க முடியாது!
Netflix ஸ்ட்ரீமிங் சேவையின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ரீட் ஹேஸ்டிங்ஸ், மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜமால் கஷோகியின் கொலையுடன் சவூதியின் மகுடத்துக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கு இருக்கின்ற தொடர்பை விமர்சிக்கக் கூடிய “Patriot Act” என்ற நிகழ்ச்சியின் அத்தியாயத்தை நீக்கினால், அதற்கு கைமாறாக சவூதியில் “Queer Eye”, “Sex Education” and “Orange is the New Black” போன்ற நிகழ்ச்சிகளின் அத்தியாயங்களை ஒளிபரப்புவதற்கு சவூதி அரேபிய நிர்வாகம் அனுமதி வழங்கியதை தெரியப்படுத்தி இருக்கிறார்.
தணிக்கை மற்றும் மனித உரிமைகள் பற்றி விவாதிக்கும் CNN நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், ரீட் ஹேஸ்டிங்ஸ் இந்த முடிவு ஒரு “மிகவும் கடினமான முடிவு” என்று வர்ணித்தார். சவூதியின் சட்டத்தின் படி சட்ட விரோதமானது என்ற அடிப்படையில் கஷோக்கியின் கொலை தொடர்பான சர்ச்சைக்குரிய அத்தியாயத்தை நீக்கும்படி நாம் வேண்டப்பட்டாலும், சவூதி அரேபியாவில் அந்த அத்தியாயம் இன்னும் Youtube இல் காணக் கிடைக்கிறது என்று விளக்கினார்.
இந்த உண்மை வெளிவந்திருப்பதானது, சவூதி அரேபியா இதுவரை இஸ்லாத்தை அதன் முகமூடியாக மாத்திரமே பாவித்து வந்ததை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. சவூதியின் அரச குடும்பம் அநீதிக்கு எதிரான மிகச் சிறிய விமர்சனத்தைக் கூட பொறுத்துக் கொள்ள தயார் இல்லை ஆகினும், பெருமானார்(ஸல்) வாழ்ந்த புனித பூமிக்குள் Porn ஐயும், Gay life style ஐயும் விளம்பரம் செய்ய துணிந்திருப்பது நிலைமையின் விபரீதத்தை எமக்கு உணர்த்துகிறது அல்லவா?