ஐக்கிய அரபு எமிரேட்ஸும், யூத அரசும் யெமனின் தீவான சோகோத்ராவில் (Socotra) அமைதியான முறையில் உளவு தளங்களை அமைக்கும் திட்டத்தில் செயல்பட்டு வருவதாக யூத மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் சமூகத்தின் உத்தியோகபூர்வ தளமான ஜே.போரம் (JFORUM) தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் தங்களது இராஜதந்திர உறவுகளை உத்தியோக பூர்வமாக இயல்பாக்கிக் கொண்ட இவ்விரு நாடுகளும் தெற்கு யேமனிலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில், அரேபிய கடலில் மூலோபாய பிராந்தியத்தில் அமைந்துள்ள தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கட்டுப்பாட்டிலுள்ள சோகோத்ரா தீவில் ரகசியமான தளமொன்றை நிறுவதற்கான ஆரம்பகட்ட வேலைகளை முன்னெடுத்துள்ளன.
யூதர்களினதும், எமிராட்டிகளினதும் உளவுத்துறை அதிகாரிகள் குழுவொன்று சமீபத்தில் சோகோத்ராவுக்குச் சென்று திட்டமிட்ட உளவுத்துறையை நிறுவ பல்வேறு இடங்களை ஆய்வு செய்துள்ளதாக அவ் அறிக்கை தெரிவிக்கிறது.
இத்தகைய உளவு நிலையத்தின் நோக்கம் மத்திய கிழக்கு மற்றும் ஏடன் வளைகுடாவுடன் சேர்ந்த தெற்கு யேமனிலும்இ ஆப்பிரிக்காவின் கொம்பு (Horn of Africa – places like Djibouti, Eritrea, Ethiopia and Somalia) என அழைக்கப்படும் பிராந்தியத்திற்கு இடையுள்ள மூலோபாய கடல் பாதையான பாப் எல்-மண்டேப் நீரிணை பகுதி முழுவதிலிருந்தும் உளவுத்தகவல் சேகரிப்பதாகும்.
டெல்அவிவின் கண்காணிப்பு மையங்கள் யேமனில் உள்ள ஹூதி போராளிகளின் நடவடிக்கைகள் மற்றும் பிராந்தியத்தில் ஈரானிய கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் என்றும், செங்கடலின் தெற்கு பகுதியில் கடல் மற்றும் விமான போக்குவரத்தை ஆய்வு செய்யும் என்றும் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
“ஏடன் வளைகுடாவின் பொக்கிஷம்” என்று அழைக்கப்படும் மூலோபாய பிராந்தியத்தில் அமைந்துள்ள சோகோத்ரா தீவானது அதிகாரப்பூர்வமாக யேமனின் ஒரு பகுதியாகும். இது அதே பெயரில் உள்ள நான்கு தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தின் மிகப்பெரிய தீவாகும்.
தற்போது இத்தீவானது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத்தில் இடம்பெற்றுள்ள இத் தீவில் 60,000 மக்கள் இயற்கையுடன் இணக்கமாகவும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மிகவும் குறைவான வெளி உலக தொடர்புகளுடனும் வாழ்ந்து வருகின்றனர்.
பாரசீக வளைகுடாவின் பெரும்பாலான மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சூயஸ் கால்வாய் மற்றும் சூயஸ்-மத்திய தரைக்கடல் (SUMED) குழாய் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் 3 மில்லியன் பீப்பாய்களுக்கு மேலான மசகு எண்ணெய் அரேபிய வளைகுடாவிலிருந்து இந் நீரிணை வழியாக மத்தியதரைக் கடல் வரை பயணிக்கிறது. சூயஸ் கால்வாயை நோக்கி பயணிக்கும் அனைத்து கப்பல்களும், அரேபிய கடல் வழியாக மேற்கு நோக்கி ஏடன் வளைகுடாவுக்குச் சென்று, பின்னர் வடக்கு நோக்கித் திரும்பி பாப் எல்-மண்டேபில் உள்ள குறுகிய பாதை வழியாக செங்கடலுக்குள் நுழைகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆட்சியாளர்களும், மற்றவர்களும் மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளில் யூத அரசை வலுப்படுத்த மண்டியிட்டு வருகிறார்கள். வேட்கம் கெட்ட இத்தகைய முஸ்லீம் உலக ஆட்சியாளர்களின் உடந்தையும், சிலுவையுத்த சக்திகளின் ஆதரவும் இல்லாமல் யூத அரசு நிலைத்து நிற்க முடியாது என்பதை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.