சியோனிச யூத அலகான இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தைத் தொடர்ந்து பல வளைகுடா நாடுகளும் ஏனைய அரபு நாடுகளும் தமது உறவை இயல்பாக்கம் செய்து வருகின்றன. மத்திய கிழக்கு அரசியலில் இவை குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. எனினும் முஸ்லிம் உம்மத்தின் பார்வையில் இந்த நகர்வுகள் எல்;லாம் எதனைச் சொல்கின்றன. பலஸ்தீனத்தின் எதிர்காலம் எவ்வாறு அமைய இருக்கின்றது என்பது மிகவும் சிந்திக்கத்தக்கது. இன்றைய யதார்த்தம் எது நிகழ்ச்சி இந்த முக்கிய தலைப்பையே கருப்பொருளாகத் தாங்கி வருகின்றது.