செய்தி:
2020 ஜூலை 23ஆம் திகதி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியீட்டின் படி முஸ்லிம் அல்லாத ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த மக்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) பிரகாரம் குடியுரிமை வளங்கப்படுவதால் பல ஆப்கானிஸ்தான், பர்மா முஸ்லிம்கள் குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக மதம் மாறுவதற்கு அச்சட்டம் தூண்டியுள்ளது.
உத்தியோகபூர்வ தகவல்களின்படி, டெல்லியில் 150,000-160,000 ஆப்கானிய முஸ்லிம்கள் முக்கியமாக கிழக்கு கைலாஷ், லஜ்பத் நகர், அசோக் நகர் மற்றும் அஸ்ராம் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்றனர். இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 40,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இதில் அதிகமானவர்கள் ஜம்மு-காஷ்மீரில் வாழ்கின்றனர். புலம்பெயர்ந்தோரில் ஏராளமானோர் 2012க்கு முன்னர் இருந்தே இந்தியாவில் வசித்து வருகின்றனர். இவர்கள் தற்போது தங்களை பங்களாதேஷிகள் என்று கூறிக்கொள்வதோடு கிறிஸ்தவ மதத்தை தழுவி வருகின்றனர். கனடா மற்றும் ஐரோப்பாவிற்கு புலம்பெயர்வதற்கான UNHCR இன் உதவியும் இந்த மத மாற்றங்களைத் தூண்டும் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
கருத்து:
குஃபார்களின் துன்புறுத்தல்களை தவிர்ப்பதற்காக முஸ்லிம்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகிறார்கள் என்ற செய்தி பொதுவாக முஸ்லிம்களுக்கும், குறிப்பாக முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் படைகளுக்கும் ஏற்பட்டுள்ள மாபெரிய அவமானமாகும். இவ்வாறு அவலமாகக் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் கிஃலாபத்தின் தேவையை மிக அதிகமாக உணர்த்துகிறதல்லவா? கிலாஃபா இல்லாததன் காரணத்தினால் இஸ்லாத்தின் எதிரிகள் இந்த உயரிய உம்மத்தின் வாரிசுகளை கிழக்கிலிருந்து மேற்குவரைக்கும், வடக்கிலிருந்து தெற்குவரைக்கும் துன்புறுத்தவும், சித்திரவதை செய்யவும், கொல்லவும் துணிந்து விட்டார்கள்.
அண்மைக்காலமாக இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு முஸ்லிம்களின் குடியுரிமை உரிமைகளைப் பறிக்கவும், சொத்துக்களை கொள்ளையடிக்கவும், வழிபாட்டுத் தலங்களின் புனிதத் தன்மையை கெடுக்கவும், முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்தவும், முஸ்லிம் ஆண்களை அநியாயமாக கொலை செய்யவும், சாந்தமான மற்றும் இணங்கிப்போகக் கூடிய முஸ்லிம் அல்லாத நாடுகளை கூட தைரியப்படுத்தியுள்ளது. இந்நிலை தாம் உயிர் தப்பிக் கொள்வதற்கும், இஸ்லாத்தை வெறுக்கும் பெறும்பான்மையினரின் கோபத்திலிருந்து விடுபடுவதற்கும், சில முஸ்லிம்கள் தங்கள் ஈமானை விட்டு வெளியேறி, கிறிஸ்தவம் அல்லது இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளது.
ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கும் இந்தியாவின் கவனம், பிராந்தியத்தில் இந்தியாவின் புவிசார் அரசியல் ஆர்வத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனால் கிழக்கு ஆசியாவில் இத்தகைய புவிசார் இராஜதந்திர நலன்கள் இந்தியாவிற்கு இல்லாதிருப்பதுவே, இந்தியா ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு இத்தகைய குடியுரிமை அளிப்பதற்கு விருப்பாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாகும். துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரின் குடியுரிமைக்கான UNHCR இன் உதவி ஒப்பிட்டளவில் முஸ்லீம்களாக இருப்பதை விட அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறினாலே அதிகம் கிடைப்பதாக உணரப்படுகிறது. இத்தகைய சர்வதேச நிறுவனங்கள் வாய் கிழியப் பேசுகின்ற ‘மனித உரிமைகள்’ என்ற ஒன்று உண்மையில் இருந்திருந்தால், முதலில் ரோஹிங்கியா நெருக்கடி என்று ஒன்று கூட ஏற்பட்டிருக்காது என்பதே விசனத்துக்குரியது.
பர்மா, இந்தியா, சிரியா, யேமன், ஆப்கானிஸ்தான், ஆபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் துன்புறுத்தப்படும் போது சிறந்த வலிமையுடனும், இராணுவத்துடனும் இருக்கும் முஸ்லிம் ஆட்சியாளர்களின் எதிர்வினையானது வாய் பேச்சைத் தவிர வேறொன்றும் இல்லை. இந்த குற்றவாளிகளுக்கு எதிராக போராட இவர்களிடம் இராணுவ பலம் உள்ளது; அவர்களுக்கு எதிராக எண்ணெய் விநியோகத் தடை விதிக்க பொருளாதார வலிமை உள்ளது; தங்களது மூலோபாய கடல் மற்றும் விமான வழித்தடங்களை மூடுவதற்கு இவர்களுக்கு இராஜதந்திர விதிகள் உள்ளன; துன்புறுத்தல்களை முடிவுக்குக் கொண்டுவர இத்தகைய முஸ்லிம் விரோத நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு வேறு பிற வழிகளும் உள்ளன; ஆனால் இவ் ஆட்சியாளர்கள் விசுவாசிகளினதும், நபி (ஸல்) அவர்களினதும் அல்லாஹ்(சுபு) வினதும் திருப்தியை பணயம் வைத்து, தங்களது காலனித்துவ எஜமானர்களை திருப்திப்படுத்தவே முயன்று வருகின்றனர். முஸ்லீம் ஆட்சியாளர்களின் இத்தகைய நடைமுறை ஒடுக்குமுறையாளர்களுக்கு இன்னும் கூடுதலான தந்திரோபாய ஒடுக்குமுறைகளை மேற்கொள்ள ஒரு மறைவான ஒப்புதலை வழங்கியுள்ளது.
குஃப்ரின் கீழ் முஸ்லிம்கள் இவ்வாறு அநியாயமாகத் தண்டிக்கப்படும்போது, ஷரியாவின் கீழ் வாழ விரும்பும் அனைத்து இன, மத பின்னணியிலுள்ள தனிநபருக்கும் இஸ்லாத்தில் குடியுரிமை என்பது இயல்பாகக் கிடைக்கும். உணவு, ஆடை மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் உரிமையை ஒவ்வொரு குடிமகனுக்கும் (முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாதவருக்கும்) வழங்குவது கலீஃபா மீது கடமையாகக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
لَيْسَ لاِبْنِ آدَمَ حَقٌّ فِي سِوَى هَذِهِ الْخِصَالِ بَيْتٌ يَسْكُنُهُ وَثَوْبٌ يُوَارِي عَوْرَتَهُ وَجِلْفُ الْخُبْزِ وَالْمَاءِ
“இவற்றைத் தவிர ஆதாமின் மகனுக்கு சிறந்த உரிமை எதுவுமில்லை: அவர் வசிக்க ஒரு வீடு, நிர்வாணத்தை மறைக்க ஒரு ஆடை, ஒரு துண்டு ரொட்டி மற்றும் தண்ணீர்.” (சுனன் அல் திர்மிதி)
துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சி முறையை கைவிட்டுவிட்டு மதச்சார்பின்மையில் மயக்கமடைந்துள்ளனர். இவர்கள் பூமியிலிருந்து அடக்குமுறையை அகற்றுவதற்கு பதிலாக தாங்களே அடக்குமுறைக்கு காரணமாகியுள்ளனர். நாங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், சஹாபாக்கள் ரோமானிய மற்றும் பாரசீக சாம்ராஜ்யங்களை தங்களிடம் அடிபணியச் செய்ய பின்பற்றியது ஜனநாயகமோ மதச்சார்பின்மையோ அல்ல ; மாறாக இஸ்லாமிய ஆட்சி முறை (அதாவது கிலாஃபாவை ஏற்றுக் கொண்டதன்) மூலமும் , இஸ்லாமிய வெளியுறவுக் கொள்கையை பின்பற்றியதன் மூலமுமே (அதாவது தஃவா மற்றும் ஜிஹாத்) அது சாத்தியப்பட்டது.
எனவே நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் கிலாஃபாவை நிறுவுவதன் மூலமாக இந்த துன்புறுத்தல்கள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டுவர முடியும். அதற்காக முஸ்லிம் உலகின் படைகளை நாங்கள் அழைக்கிறோம். தங்கள் பிழைப்பிற்காக இத்தகைய நெருக்கடிகளை முகம் கொடுக்கும் எங்கள் சகோதர சகோதரிகளுக்கு ஸப்ர் (பொறுமையை) கடைப்பிடிக்குமாறும், அல்லாஹ்விடம் முழு நம்பிக்கையை வைக்குமாறும் அறிவுறுத்துகிறோம். இந்த உலக வாழ்க்கை சோதனைக்களமே அன்றி வேறில்லை; நாம் அனைவரும் அவர் அவருக்குரிய வாழ்க்கை சிக்கல்களைக் கொண்டு சோதிக்கப்படுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் (சுபு) குர்ஆனில் கூறுவது போல்,
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًاஸ
“உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்…” (67: 2)
நபி (ஸல்) அவர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களும் “அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?” என்று கூறும் அளவிற்கு முந்தைய தலைமுறையினர் இதை விட அதிகமான துன்புறுத்தல்களுக்கு ஆளானார்கள் என்பதை அல்லாஹ்(சுபு) குர்ஆனில் தெரிவிக்கிறான்.
அல்லாஹ் கூறியதைத்தான் நாங்களும் சொல்கிறோம்…
أَلَا إِنَّ نَصْرَ اللَّـهِ قَرِيبٌ
“நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (2: 214)