2020 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் பல ஐயங்களையும், பீதிகளையும் தோற்றுவித்திருக்கின்றன. ஏற்கனவே சிங்கள பேரினவாதத்தினதும், பௌத்த தேசியவாதத்தினதும் பிடியிலே சிக்கித் தவிக்கும் முஸ்லிம்கள் அவற்றிற்கு அச்சாணியாக நிற்கும் தரப்பினரிடம் அதிகாரம் குவிந்து வருவதைக் கண்டு கதிகலங்கி நிற்கின்றார்கள்.
இந்நிலையில் அவர்களின் அன்றாட வாழ்வும், அரசியல் எதிர்காலமும் எவ்வாறு அமையப்போகிறது? அவர்களை நோக்கி விரிவடையக்கூடிய சவால்களின் தன்மை எவ்வாறு இருக்கப்போகிறது? என்ற வினாக்கள் ஏற்கனவே பலரிடம் உருவாகத் தொடங்கி விட்டன.
அந்த வகையில் இன்றைய யதார்த்தம் எது? நிகழ்ச்சி இனிவரும் காலங்களின் சாவால்களையும், அதனை எதிர்கொள்வதற்கான சில கருத்துக்களையும் உங்கள் முன் சமர்ப்பிக்க முனைகிறது.