லெபனான், பெய்ரூட்டில் ஓர் மாபெரிய வெடிப்பு ஏற்பட்ட பின்னரே, நகரின் துறைமுகத்தில் அமைந்துள்ள ஒரு ஹேங்கரில் (மிக விசாலமான ஸ்டோர் போன்றதொரு இடம்) சேமித்து வைக்கப்பட்டுள்ள 2,750 தொன் அம்மோனியம் நைட்ரேட் பற்றி லெபனானில் பெரும்பாலான மக்கள் அறிந்து கொண்டனர்.
குண்டுகள் மற்றும் உரங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களின் பாரிய வெடிப்பு – லெபனான் தலைநகரில் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பி இருக்கிறது. இது சுமார் நூற்றுக்கணக்கான மக்களை கொன்றுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் நகரத்தின் பெரும்பாலான கட்டடங்கள் தேசமாக்கப்பட்டுள்ளன.
வெடிப்பின் பேரழிவுக்குப் பின்னர், லெபனானியர்கள் இவ்வழிவு குறித்து மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். மேலும் இத்துயர நிகழ்வு இடம்பெருவதற்கு அனுமதித்தவர்கள் மீது மிகுந்த கோபத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்.
பொது அறிக்கைககளினதும், ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஆவணங்களினதும் பகுப்பாய்வுகள், லெபனானின் மூத்த அதிகாரிகள் ஆறு வருடங்களுக்கும் மேலாக பெய்ரூட் துறைமுகத்தின் ஹங்கர் 12 இல் அம்மோனியம் நைட்ரேட் சேமிக்கப்பட்டுள்ளதை அறிந்திருந்ததாகக் கூறுகின்றன. அவை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துக்களையும் அவர்கள் நன்கு அறிந்தே வைத்திருந்தனர் என்றும் அவை கூறுகின்றன.
இது எப்படி நடந்தது? இதுவரை நாம் கண்டறிந்தவை.
மால்டோவன் கொடி பறக்கவிட்டிருந்த ரஷ்யருக்கு சொந்தமான சரக்குக் கப்பலில் இந்த அம்மோனியம் நைட்ரேட்டின் சரக்கு 2013 செப்டம்பரில் லெபனானுக்கு வந்திருக்கிறது. ரோசஸ், கப்பல் கண்காணிப்பு தளமான ஃப்ளீட்மனின் தகவல்களின்படி, இக்கப்பல் ஜார்ஜியாவிலிருந்து மொசாம்பிக் நோக்கி சென்று கொண்டிருந்தது. கடலில் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்ட பின்னர் பெய்ரூட்டில் கப்பல்துறையில் தரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று படகின் குழுவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் லெபனான் அதிகாரிகள் கப்பல் பயணம் செய்வதைத் தடுத்ததன் விளைவாக இறுதியில், அதன் உரிமையாளர்கள் மற்றும் குழுவினரால் கப்பல் கைவிடப்பட்டிருக்கிறது – இத்தகவல் பகுதியளவில் ஃப்ளீட்மனால் உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர் கப்பலில் இருந்த ஆபத்தான சரக்குகள் பெய்ரூட் துறைமுகத்தின் ஹங்கர் 12 இல் வைக்கப்பட்டன. இவ்விடம் தலைநகரின் பிரதான நுழைவாயிலில் நாட்டின் பிரதான வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை எதிர்கொள்ளும் ஒரு பெரிய சாம்பல் நிற கட்டமைப்பாகும்.
இதனைத் தொடர்ந்து பல மாதங்கள் கழித்து, ஜூன் 27, 2014 அன்று, லெபனான் சுங்க இயக்குநராக இருந்த ஷபிக் மெர்ஹி, பெயரிடப்படாத “அவசர விஷயங்கள் தொடர்பான நீதிபதி” என்ற முகவரிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி இந்த சரக்குகளை என்ன செய்வது என்பது தொடர்பான தீர்வினை கேட்டிருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் பல கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகின்றன. எனினும் இறுதி வரை எந்தத் தீர்வும் எட்டப்படாத நிலையில், இத்தகைய ஆபத்தான சரக்குகள் அங்கேயே வைக்கப்பட்டுள்ளன என்பதே விசனத்தை ஏற்படுத்தும் தகவலாக எமக்கு கிடைத்துள்ளன.
லெபனானின் பிரதமர் ஹசன் டயப் செவ்வாயன்று துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பை “ஒரு பெரிய தேசிய பேரழிவு” என்று அறிவித்து, “இந்த பேரழிவிற்கு காரணமான அனைவரும் அதற்குரிய விலையை கொடுப்பார்கள்” என்று உறுதியளித்தார்.
லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் அம்மோனியம் நைட்ரேட்டை விவகாரத்தை சரியாக கையாளத் தவறியது “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும், பொறுப்பானவர்களுக்கு “கடுமையான தண்டனை” வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இப்போது ஒரு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது; விசாரணையின் மேலதிக கண்டுபிடிப்புகளை ஐந்து நாட்களுக்குள் நீதித்துறையில் பரிந்துரைக்க நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
வெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பல லெபனானியர்கள் மூல காரணங்கள் என்று அவர்கள் நம்புவதை சுட்டிக் காட்டி வருகின்றனர். அவற்றுள் நாட்டின் குடிமக்களை அவமதிப்புடன் நடத்தும் ஊழல் நிறைந்த அரசியல் வர்க்கமும், அவர்களால் வழி நடத்தப்படும் உடைந்த அரசின் தவறான நிர்வாகமும் என்பதே அடிப்படையானது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இத்துறைமுக வெடிப்பால் ஏற்பட்ட இழப்பும், அதிர்ச்சியும் மாத்திரமல்லாது, மக்களுக்கு சென்றடைய வேண்டிய பெருந்தொகையான அரச வளங்கள் தசாப்தங்களுக்கு மேலாக இத்துறைமுகங்களின் ஊடாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மக்கள் வரியின் ஊடாக அரசின் கருவூலத்தை சென்றடைய வேண்டிய பில்லியன் கணக்கான பணம், இறக்குமதி பொருட்களின் பெறுமதிளை முறைகேடாக குறை மதிப்பீடு செய்வதன் மூலமாகவும், முறைமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள இலஞ்ச ஊழலின் ஊடாக வரிகளை செலுத்துவதை தவிர்ந்து கொள்வதன் மூலமாகவும், ஆளும் வர்க்க ஊழல் பேர்வழிகளின் கைகளுக்கு சென்றடைந்துள்ளன.
“பெய்ரூட்டின் கதை முடிந்து விட்டது. இந்த நாட்டை கடந்த சதாப்பதங்களாக ஆண்டவர்கள் சும்மா விட்டுவிடப்படக் கூடாது” என்று லெபனான் அரசியல் ஆர்வலரும் சமூகவியலாளருமான ரிமா மஜீத் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் குற்றவாளிகள், இதுவரை அவர்கள் செய்த (பல) இது குற்றங்களில் மிகப்பெரியது.”