எம் சார்பாக ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்த கோருவது என்பது சாதாரண விடயமல்ல. அது ஒரு பாரதூரமான விடயம் என்பதே பொதுவான நியதி. எனினும் துரதிஷ்டவசமாக தேர்தல் காலங்கள் இதற்கு விதிவிலக்கானவை!
எமது வாழ்வின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஆதிக்கம் செலுத்தவல்ல ஒரு ஆட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் விடயத்தில் நாம் சர்வ சாதாரணமாக ‘ஒரு புள்ளடி இடுவது’ என்ற வரையறைக்குள் நின்று மாத்திரம் சிந்திக்கப் பழக்கப்பட்டுள்ளோம்.
எனினும் இஸ்லாம் அதனை சாதாரண விடயமாக விட்டு விடவில்லை. அது ‘பிரதிநிதித்துவத்தை வழங்கல் – ‘அல்வகாலாஹ்’ தொடர்பாக மிகவும் தெளிவாக வழி காட்டுகிறது. ஒரு முஸ்லிம் தனது வாழ்வின் அனைத்து விடயத்திலும் இஸ்லாமிய நிலைப்பாட்டை பேணி நடக்க வேண்டும் என்பதால் – இன்றைய யதார்த்தம் எது? நிகழ்ச்சி ‘அல்வகாலாஹ்’ பற்றி விரிவாக உரையாடுகின்றது.