நேற்றைய தினம் சுமார் 90 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஹாகியா சோபியாவிலே ஜும்ஆத் தொழுகை இடம்பெற்றதைத் தொடர்ந்து, இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியாவை ஒரு மசூதியாக மாற்றியமை குறித்து துருக்கியும் கிரேக்கமும் கடுமையான வார்த்தைகளை பரிமாறிக்கொண்டன.
நேட்டோ நட்பு நாடுகளான அங்காரா மற்றும் ஏதென்ஸுக்கு இடையிலான உறவுகள் சமீபத்திய மாதங்களில் உரசல் நிறைந்ததாகவே இருந்தன. ஆனால் சமீபத்தில் ஹாகியா சோபியா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலில் சக்தி கனிம வளங்கள் தொர்பான விடயங்களில் பதட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன.
“சமீப நாட்களாக கூக்குரலிட்ட நாடுகளின் இலக்குகள் ஹாகியா சோபியாவோ அல்லது கிழக்கு மத்தியதரைக் கடல் வளங்களோ அல்ல என்பதை நாங்கள் அறிவோம்” என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் சனிக்கிழமை தொலைக்காட்சி உரையில் கூறினார்.
“(அவர்களின் இலக்குகளோ) இந்த பிராந்தியத்தில் துருக்கிய தேசமும், முஸ்லிம்களும் இருப்பதுமேயாகும்…”
கிரேக்க அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விரோத அறிக்கைகளையும், கிரேக்க நகரமான தெசலோனிகியில் துருக்கியின் கொடி எரிக்கப்பட்டதையும் அவர் கண்டித்தார்.
ஹாகியா சோபியா ஒரு மசூதியாக மாற்றப்பட்டதைத் தொடாந்து நடந்த முதலாவது ஜும்ஆ தொழுகையில் எர்டோகன் ஆயிரக்கணக்கானவர்களுடன் இணைந்து பங்கேற்றார்.
இஸ்லாமிய கிலாஃபத்தை நிர்மூலமாக்கிய பின்னர் முஸ்தபா கமால் சுருக்கியை மதச்சார்றபற்ற நாடாக மற்றியதைத்தொடர்நது ஹாகியா சோபியா ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. பெரும்பாலான கிரேக்கர்கள் அதனை தங்கள் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ மதத்தின் முக்கிய மையமாகக் கருதுகின்றனர். அதனால் நேற்று வெள்ளிக்கிழமை கிரேக்கம் முழுவதும் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக தேவாலய மணிகள் ஒலிக்கப்பட்டன.
இஸ்தான்புல்லில் தற்போது நடந்து வருவது “பலத்தின் காட்சி அல்ல; பலவீனத்தின் சான்று” என்று வெள்ளிக்கிழமை இது குறித்து கருத்துத் தெரிவித்த கிரேக்க பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் கூறினார்.
அவர் துருக்கியை “பிரச்சனையின் தோற்றுவாய்” என்றும், ஹாகியா சோபியா மாற்றப்பட்டதை “21 ஆம் நூற்றாண்டின் நாகரிகத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பு” என்றும் அழைத்தார்.
சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையில், துருக்கிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இச்சர்ச்சை பற்றிய கருத்துத் தெரிவிக்கும்போது “ஹாகியா சோபியா தொழுகைக்கு திறக்கப்பட்டதை சாக்குப்போக்காகக் கொண்டு கிரீஸ் மீண்டும் இஸ்லாம் மற்றும் துருக்கி மீதான பகைமையைக் காட்டியிருக்கிறது.” கூறினார்:
இதற்கு பதலளித்த கிரேக்க வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் “21 ஆம் நூற்றாண்டின் சர்வதேச சமூகம் இன்றைய துருக்கியின் மத மற்றும் தேசியவாத வெறித்தனமான கூச்சல்களைக் கண்டு திகைத்து நிற்கிறது.” என்று பதிலளித்திருந்தது.
கிரீஸும், துருக்கியும் வான்வெளி தொடக்கம் கிழக்கு மத்தியதரைக் கடலின் கடற்பரப்பு மண்டலங்கள் வரைக்கும், இன ரீதியாகப் பிளவுபட்டுள்ள சைப்ரஸின் விவகாரம் குறித்தும் பல விடயங்களில் முரண்பட்டு வருகின்றன.