கெய்ரோவை போரில் தலையிட வலியுறுத்திய லிபிய பழங்குடியினரை எகிப்தின் ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சீசி சந்தித்ததை அடுத்து, கிழக்கு லிபியாவை தளமாகக் கொண்ட படைகளை ஆதரித்ததற்கு எகிப்தையும்¸ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) ஐயும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டுகான் கண்டித்துள்ளார். (அல் ஜெஸீரா)
லிபியா மோதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு துருக்கி இராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. மறுபுறம் எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கிழக்கை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்படாத ஒரு போட்டி நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அண்மைய வாரங்களில் திரிப்போலியை தளமாகக் கொண்ட தேசிய உடன்படிக்கை அரசாங்கம் (ஜி.என்.ஏ) வியத்தகு இராணுவ முன்னேற்றங்களைக் கண்டது. இது கடந்த ஆண்டு திரிப்போலி மீது தாக்குதலைத் தொடங்கிய கிழக்கை தளமாகக்கொண்ட கிளர்ச்சி இராணுவத் தளபதி கலீஃபா ஹப்தாரின் படைகளைத் திருப்பி அனுப்பியது.
எகிப்தை மோதலில் தலையிட கிழக்கை தளமாகக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த வாரம் அழைப்பு விடுத்தனர். அல்-சீசி வியாழக்கிழமை லிபிய பழங்குடியினரைச் சந்தித்து, எகிப்திய மற்றும் லிபிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்படும்போது, அதனைப் பார்த்துக்கொண்டு எகிப்து சும்மா இருக்காது என்று கூறினார்.
வெள்ளிக்கிழமை எகிப்திய தலையீட்டின் சாத்தியம் குறித்து கேட்கப்பட்டதற்கு பதிலளித்த எர்டுகான், இவ்விடயத்தில் துருக்கி ஜி.என்.ஏவுக்கு தனது ஆதரவைத் தொடர்ந்தும் வழங்கும் என்று தெரிவித்தார்.
இங்கே எகிப்து எடுத்துள்ள நடவடிக்கைகள், குறிப்பாக ஹஃப்தார் என்ற புட்ஸிஸ்ட்டுடன் (அரசை இராணுவ ரீதியாக வீழ்ந்த நினைப்பவருடன்) எகிப்து இணைந்திருப்பது, அவர்கள் ஒரு “சட்டவிரோத செயலில்” ஈடுபடுவதைக் காட்டுகின்றது என்றும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அணுகுமுறையை “திருட்டு” என்றும் அவர் விவரித்தார்.
தற்போது ஹஃப்தாரின் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள லிபியாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையங்களுக்கான நுழைவாயிலாகக் (gateway to Libya’s main oil export terminals) கருதப்படும் மத்திய சிர்டே-ஜுஃப்ரா முன்னரங்கில் (Sirte-Jufrah front line ), திரிப்போலி அரசாங்கமும் அதன் துருக்கிய நட்பு நாடுகளும் தாக்குதலை புதுப்பித்திருந்தால், கடந்த மாதமே எகிப்தின் இராணுவம் லிபியாவிற்குள் நுழைந்திருக்கக் கூடும் என்று அல்-சீசி கூறினார்.
அமெரிக்கா¸ கடாபி அரசு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக கடாபி ஆட்சியை முழுமையாக ஆதரித்து வந்த¸ லிபியாவின் எண்ணெய் மற்றும் அதன் புவிசார் மூலோபாய முக்கியத்துவத்திலிருந்து பெருமளவில் பயனடைந்த பிரித்தானியரிடமிருந்து லிபியாவின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்றது. ஆனால் லிபியாவின் கட்டுப்பாட்டை தன் சார்பாக உறுதிப்படுத்த அமெரிக்க முகவரினால் முடியாது போனதினால், அமெரிக்கா சிரியாவில் தான் மேற்கொண்ட அதே யுக்தியை லிபியாவிலும் பிரயோகிக்கும் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதாவது¸ மோதலில் ஈடுபடுகின்ற இரு தரப்பிலும் தனது முகவர்களை ஈடுபடுத்துவதாகும். லிபியாவின் மேற்கு பகுதியில் அமெரிக்க சார்பு துருக்கி ஆதிக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் முதல் கட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இப்போது அமெரிக்காவின் முக்கிய முகவரான எகிப்துக்கு கிழக்கில் தலையிட அழைப்பு விடுக்கப்பட்டு அதன் அடுத்த கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த கட்டமாக இரு தரப்புக்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தனது முகவர்களைக் கொண்டு அமெரிக்கா தனது நலன்களை சாத்தியப்படுத்த திட்டமிடுகிறது.
ஆனால் அல்லாஹ்(சுபு)வின் அனுமதியுடன் வெளிநாட்டு ஏகாதிபத்திய காஃபிர்களின் நலன்களை முன்னேற்றுவதற்காக முஸ்லிம்களின் நலன்களை தியாகம் செய்யும்¸ மேற்கத்திய எஜமானர்களுக்கு மட்டுமே சேவை செய்யும் இந்த முகவர்களை முஸ்லிம் உம்மாஹ் தூக்கியெறியும் காலம் வெகு தொலைவில் இல்லை.