2020 நவம்பர் தேர்தலின் பிரச்சாரத்தை முன்னிட்டு டொனால்ட் டிரம்ப் எதிர்பார்த்த வகையில் பொருளாதாரம் சிறப்பாகவும், பல வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டும், ஏறத்தாழ அனைத்து அமெரிக்க துருப்புகளும் நாடு திரும்பிய நிலையிலும், அது பல சர்வதேச உடன்படிக்கைகளிலிருந்து வெளியேரி நிலையிலும், அனைத்து காரணிகளும் அவரது வெற்றியை நோக்கி மிக சிறப்பாக அமைந்திருந்தது.
ஆனால் கோவிட்-19 இன் விளைவால் 2 மாதங்களில் 42 மில்லியன் அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளதுடன் தற்போது இரண்டாவது முறை ஆட்சி பீடம் ஏறுவதற்கு பாதக காரணிகளே அதிகமாக உள்ளன. நிலைமை சென்ற வாரம் முதல் மேலும் மோசமாகியுள்ளது. பொதுவாக டிரம்ப் தனது பேரணியிகளில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையை இருப்பதை விட அதிகப்படியாக கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தாலும், உண்மையிலும் பேரணியில் அதிக கூட்டங்கள் இருக்கும். ஆனால் சென்ற வார நிகழ்வு அவரது நாட்கள் எண்ணப்பட்டிருப்பதையே காட்டுகிறது.
ஜூன் 20, சனிக்கிழமையன்று ஓக்லஹோமாவின் துல்சாவில் நடைபெற்ற ஜனாதிபதி டிரம்ப்பின் பிரச்சார பேரணிக்கு பெரும் கூட்டம் வரும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ் எதிர்பார்ப்பு தவிடு பொடி ஆகியது. வருகை எண்ணிக்கை உயர்வாக காட்டப்பட்டமைக்கு தாங்களே பொறுப்பு என்று நூற்றுக்கணக்கான டீனேஜ் டிக்-டோக் உபயோகிகளும், கே-பாப் ரசிகர்களும் ஒப்புக்கொண்டுள்ளதோடு, தாம் இது ஜனாதிபதியை சங்கடப்படுத்தவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளனர்.
ட்ரம்ப்பின் மறுதேர்தல் பிரச்சாரத்தின் தலைவரான பிராட் பார்ஸ்கேல் திங்களன்று ட்விட்டரில் இந்த பிரச்சாரத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட் கோரிக்கைகள் இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் நிகழ்வில் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாகவே வருகை இருந்ததாக செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். கூட்டத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட சணம் நிரம்பி வழியும் என்ற எதிர்பார்பில் இந்த பிரச்சார பேரணிக்கு வெளியே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளை கூட ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 தொற்றுநோயை கையாள்வதில் ட்ரம்பின் தோல்வியும், சர்வதேசத்துடன் சண்டை பிடித்திக்கொண்டிருந்ததும் இறுதியாக யதார்த்தத்தை சந்தித்துள்ளது.