ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் சமீபத்தில் இங்கிலாந்து பெர்க்க்ஷயர் மாகாணத்திலுள்ள தனது 18 ஆம் நூற்றாண்டு மாளிகையில் உள்ள நீர் தொட்டிகளை விசேடமாக பிரான்சிலிருந்து கொண்டுவரப்பட்ட ஈவியன் மினரல் நீர் மூலமாக நிரப்பியுள்ளது தொடர்பாக நீதிமன்ற ஆவணங்கள் வெளிவந்துள்ளன.
எண்ணெய் வளம் நிறைந்த அபுதாபியின் அமீர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல்-நஹ்யான், தரம் 2 சொத்து பட்டியலிடப்பட்ட 60 மில்லியன் பவுண்ஸ் மதிப்புள்ள எஸ்கோட் மாளிகையின் பாரிய புனரமைப்பின் ஒரு பகுதியாக பிரபலமான ஈவியன் மினரல் குடிநீரை இறக்குமதி செய்துள்ளார். 71 வயதுடைய ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவராக இருக்கும் இவர் எப்போதாவது ஒரு முறை மாத்திரமே, அதுவும் ஒரு சில நாட்களுக்கே இம் மாளிகைக்கு பயணங்களை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது சொத்து மேலாண்மை நிறுவனத்தின் நிதி மோசடி தொடர்பாக லண்டன் உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் மூலமாக இவ் ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
உலகில், குறிப்பாக முஸ்லிம் உலகில் பல மில்லியன் மக்கள் ஒரு வேளை உணவின்றி பட்டினிச்சாவை அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில், முழு உம்மத்திற்கும் சொந்தமான சொத்துக்களை அநியாயமாக வீணடிக்கும் இந்த நபர் ஷேக் கலீஃபா என்று அழைக்கப்படுவது வேடிக்கையாக இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.