முன்மொழியப்பட்ட மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் (எம்.சி.சி) ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் மற்றும் எதிர்மறையான விளைவுகள் இருப்பதாகக் கூறியுள்ளது. இக் குழுவின் இறுதி அறிக்கை நேற்று 25ஆம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டது.
எம்.சி.சி.யின் முதல் இரண்டு கட்டங்கள் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்டுள்ளன என்று கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியரும் குழுத் தலைவருமான லலிதசிறி குனருவன் தெரிவித்தார். “இவ்விரண்டு நிலைகளின் கீழ் 7.4 மில்லியன் மற்றும் 2.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அதற்குறிய கணக்கு விவரங்கள் எங்கும் காணப்படவில்லை. ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்னர் அவ் ஒப்பந்தத்தை பல துறை பகுப்பாய்வு செய்வதற்கான மறுஆய்வு செய்யும் பணியை அப்போதைய அரசாங்கத்தின் பிரதானிகளால் நடாத்தப்படவில்லை. ” என்றும் அவர் கூறினார்.
பேராசிரியர் குணருவான் மேலும் கூறுகையில் இந்த திட்டத்தை நாடாளுமன்றச் சட்டமாக ஏற்றுக்கொண்ட பிறகு, அது தொடர்பான எதிர்-முன்மொழிவோ அல்லது மறு தீர்மானமொன்றை சமர்ப்பிப்பதானதோ ஒப்பந்தத்தை மீறுவதாகும். “ஒப்பந்தத்தின் எந்தவொரு நிபந்தனையையும் இரண்டு பிரதிநிதிகளால் ஒரு கடிதத்தின் மூலம் திருத்த முடியும். இத்தகைய நடவடிக்கை பாராளுமன்றத்தின் இறையாண்மையை மீறுவதாகும். இது தொடர்பாக சட்டமா அதிபர் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தவோ அல்லது நீதிமன்றங்களுக்கு செல்லவோ முடியாத சூழ்நிலையை இது உருவாக்கியுள்ளது” என்று கூறினார்.
எம்.சி.சி யை நடைமுறைப்படுத்திய நாடுகளின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதிக்கு தெரிவித்த குழு உறுப்பினர்கள் அந்த நாடுகளின் தலைவிதி மிகவும் சோகமான நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.