கிழக்குப்பகுதியை அடிப்படையாகக் கொண்ட தளபதி கலிஃபா ஹிஃப்டரின் தோல்வியை அடுத்து, லிபியாவை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, அமெரிக்கா கலிஃபா ஹிஃப்டரை கைவிட்டு விட்டு மேற்கு லிபியாவிற்கும் கிழக்கு லிபியாவிற்குமான தீர்வுத் திட்டத்தை தனக்கு சாதகமான முறையில் அமையும் வண்ணம் திட்டங்களை தீட்டுகிறது என்று வசிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.
லிபியாவின் யு.என்-ஆதரவு கொண்ட அரசாங்கத்தின் படைகள் கடந்த வெள்ளிக்கிழமை தளபதி கலீஃபா ஹிஃப்டரின் கட்டுப்பாட்டிலிருந்த மீதமுள்ள மேற்கு பகுதியையும் கைப்பற்றியது. இது நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான அவரது லட்சியங்களுக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்துள்ளது.
இராணுவத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களின் கூற்றுப்படி வெள்ளிக்கிழமை காலை ஹிஃப்டரின் படைகள் பின் வாங்கியதை அடுத்து துருக்கியின் ஆதரவு கொண்ட அரசாங்க சார்பு போராளிகள் தலைநகர் திரிப்போலிக்கு தென்கிழக்கில் சுமார் 40 மைல் தொலைவில் உள்ள தர்ஹுனாவின் மையத்தை அடைந்தனர். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் இயந்திர துப்பாக்கிகளுடன் பொருத்தப்பட்ட பிக்கப் லாரிகளில் வீரர்கள் வெற்றிக்கான குறிகளை காட்டிய வண்ணம் கைப்பற்றிய எல்லைகளுக்குள் உலாவிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
திரிப்போலி அரசாங்கத்தின் இராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது கொணவ்ணொவ் ஒரு அறிக்கையில், எங்களுடைய போராளிகள் நான்கு திசைகளிலிருந்தும் நகரத்திற்குள் நுழைந்து ஹிஃப்டரின் படைகளுக்கு “அவர்கள் மறக்க முடியாத பாடத்தை” புகட்டினர். இக் கருத்துக்கான பதிலின் கோரிக்கைக்கு ஹிஃப்டரின் இராணுவ அலுவலகம் பதிலளிக்கவில்லை.
ஹிஃப்டர் அமெரிக்க லிபிய இரட்டை குடியுரிமை உடைய முன்னாள் சிஐஏ உறுப்பினர், பல ஆண்டுகளாக அமெரிக்காவின் வடக்கு வர்ஜீனியாவில் வாழ்ந்தவர். இவர் யு.என் இன் ஆயுதத் தடையை மீறி பாரிய ஆயுதங்களையும் பிற இராணுவ உதவிகளையும் ஜக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் பிற பிராந்திய சக்திகளிடமிருந்தும் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இந்த நிகழ்வுகளின் மாற்றம் உண்மையில் துருக்கிக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டுச் சதியினால் நிர்வகிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் துருக்கிய ஆளில்லா விமானப் பாதுகாப்புத் திட்டத்தை கொண்ட பாதுகாப்பு அமைப்பின் ஆதரவுடன் ஜி.என்.ஏ – சார்பான போராளிகள், ஹிஃப்டரின் படைகளிடமிருந்து நகரத்திற்குப் பின் நகரை கைப்பற்றியதுடன் ஒரு மூலோபாய விமான தளத்தையும் கைப்பற்றியது. இந்நிகழ்வானது கிழக்கு லிபியாவிற்கு 14 போர் விமானங்களை அனுப்பவதற்கு ரஷ்யாவைத் தூண்டியது. இச்செயலானது ஹிஃப்டருக்கு வெளிப்படையாக உதவுவதற்கும் துருக்கிக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருப்பதற்குமாகும் என்று பென்டகன் கூறியது.
ஆனால் பின்னர் ரஷ்ய கூலிப்படையினர் துருக்கியுடனான ஒரு வெளிப்படையான ஒப்பந்தத்திற்கமைய திரிப்போலியில் உள்ள ஹிஃப்டரின் படைகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகக் கூடியவகையில் முன் வரிசையில் இருந்து விலகி ஹிஃப்டரின் மிகவும் பாதுகாப்பு அரணான கிழக்கை நோக்கிச் சென்றனர். இதை ஜி.என்.ஏ படைகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
சிரியாவுக்கான அமெரிக்க திட்டத்தில் கடந்த ஆண்டுகளில் துருக்கியும் ரஷ்யாவும் அமெரிக்காவுக்கு ஒத்துழைத்து வந்ததைப் போலவே, லிபியாவிற்கான அமெரிக்காவின் திட்டத்திற்கும் இவ்விரண்டு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுகின்றனர்.