ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய மேற்குக் கரையின் பெரும்பகுதியை இஸ்ரேல் திட்டமிட்டபடி இணைப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று அரபு நாடுகள் தங்களுக்கு பச்சைக் கொடி காட்டியிருப்பதாக இஸ்ரேல் ஹயோம் தெரிவித்துள்ளதாக மிட்ல்ஈஸ்ட் மொனிடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் தினசரி செய்தி அறிக்கையின் படி ஜோர்டான், எகிப்து மற்றும் சவூதி அரேபியா உட்பட குறைந்தது மூன்று அரபு நாடுகள் மேற்குக் கரையிலும் (WEST BANK), ஜோர்டான் பள்ளத்தாக்கிலும் இஸ்ரேலினுடைய இணைப்புத் திட்டத்திற்கு உள்ளுக்குள் பச்சை கொடி காட்டிக்கொண்டு போலியாக வெளியில் எதிர்த்து வருகின்றன.
நூற்றுக் கணக்கான பாலஸ்தீனியர்களுக்காக அமெரிக்காவுடனான அதன் உறவைக் குறைத்துக் கொள்வதற்கு சவுதி முட்படாது என்று ஒரு சவுதி அதிகாரி கூறியதாக இஸ்ரேலிய செய்தித்தாள் ஒன்று மேலும் தெரிவித்தது.
இளவரசர் முகமது பின் சல்மான் சவூதியின் சிம்மாசனத்திற்கு முன்மொழியப்பட்டதிலிருந்து, இந்த எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாடு, இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கியது என்றும் பாலஸ்தீனத்திற்கு எதிரான வெறுப்புணர்ச்சியை மெது மெதுவாக அதிகரித்தது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.