செய்தி:-
இந்தியாவின் வட மேற்குப் பகுதியின் பயிர் நிலங்களை தாக்கிவரும் வெட்டுக்கிளிப் பிரச்சினையால் இதுவரை சுமார் 670,000 ஹெக்டயர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு 1000கோடிக்கு மேல் இழப்பு பதிவாகியுள்ளது. இது குறிப்பாக வடமேற்கு ராஜஸ்தான் பகுதியில் தான் பரவி வருகிறது.
https://www.bbc.com/tamil/india-52824994
கருத்து:-
இந்தியாவைப் பொறுத்தளவில் பயிர் நிலங்கள் நாசமாவதற்கு வெட்டுக்கிளி தான் காரணமென மொத்தமாகக் கூறிவிட முடியாது. காரணம், விவசாயக்கடன் எனும் பெயரில் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து அதன் மூலம் அவர்களது நிலங்களை விழுங்கிக்கொள்ளும் கார்பரேட் கம்பனிகளினால் அழிக்கப்படும் விவசாய நிலங்களே அதிகம்.
ஏனெனில் வெட்டுக்கிளியை நாசினியோ அல்லது வேறு வழிகளிலோ துறத்திவிடும் தொழிநுட்பங்கள் இல்லாமலில்லை. ஆனால் அதை உபயோகிக்கவும்கூட தமக்கு நலன்கள் ஏதாவது உண்டா எனத்தான் ஜனநாயக ஆட்சியாளர்கள் யோசிப்பார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வெட்டுக்கிளியை துறத்தினால் கூட பயிர் நிலங்களை விழுங்கும் கார்பரேட் முதலாளிகளை ஜனநாயக அரசுகள் வளர்த்து விடுகின்றனவே. எனவே வெட்டுக்கிளியால் தப்பினாலும் பயிர் நிலங்கள் பாலைவனமாவதில் மாற்றமேதும் இடம்பெறப்போவதில்லை.
தமது எஜமானர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றாற்போல சட்டமியற்றும் ஜனநாயக ஆட்சியார்களால் குறிப்பாக இந்திய அரசால் விவசாயம் பாதுகாக்கப்படுமென்பது பகற்கனவே. அதற்கு மாறாக பூமியை வளப்படுத்துவதில் எல்லா விதத்திலும் செயலாற்றும் இஸ்லாமிய அரசாகிய கிலாபாவானது விவசாயத்தை ஊக்குவிக்கும். அதே நேரம் அதை பாதுகாத்து விரிவுபடுத்துவதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும் அது தனது கடமையென செய்யும். ஏனெனில் இஸ்லாமிய அரசினுடைய பணிகளில் ஒன்றான ஸகாத் வசுலிப்புக்கு அதாவது இஸ்லாத்தின் நான்காவது கடமையான ஸகாத் தானியங்களிளும் கடமையாகிறது.
எனவே ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஸகாத்தை நிறைவேற்றுவதில் விவசாயம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதனை இதிலிருந்து நாம் உணரலாம். எனவே இஸ்லாமிய அரசாகிய கிலாபா நிச்சயமாக விவசாயத்தை பெருக்குமே தவிர ஆட்சியாளரின் சுயநலன்களுக்காக விவசாயத்தையோ விவசாய நிலங்களையோ அது சூறையாடாது மேலும் விவசாயம் பின்தங்கிப்போக அது இடமும் விடாது. காரணம் முதலாளித்துவ ஜனநாயக அரசினுடைய ஆட்சியாளர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுகின்றனர். எனவே ஒரு தொகுதி மக்களின் நலனுக்காக அல்லது தன் முதலாளிமார்க்காக வேறொரு பெருந்தொகை மக்களது அடிப்படையுரிமையில்கூட அது கைவைக்கத் தயங்ஙாது.
ஆனால் இஸ்லாமிய ஆட்சியாளரோ இறைவனின் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறார். எனவே அவர் இறைவனது கட்டளைகளையே நடைமுறைப்படுத்துவார். யாரினது விருப்பு வெறுப்புக்காகவும் இறைவனது கட்டளைகளை புறந்தள்ளி நடக்க மாட்டார் அவ்வாறு நடப்பதற்கும் அவருக்கு அனுமதியில்லை.
எனவே மக்கள் நலன் பேணுதலையே தனது அரசியலின் நோக்கமெனக்கொண்டியங்கும் இஸ்லாமிய அரசு தான் நிச்சயமாக பூமியை அனைத்து விதத்திலும் வளப்படுத்தும், விவசாயத்தை ஊக்குவிப்பதைத் தனது கடமையாகவும் கருதி நடக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
“அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவன்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் – நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.” (சூறா அந் நஹ்ல் 16:11)