கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக இஸ்ரேலில் இருந்து ஒரு சரக்கு விமானம் சென்ற ஞாயிற்றுக்கிழமை இஸ்தான்புல்லில் தரையிறங்கியது.
துருக்கியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் டுவீட்டின்படி, இஸ்ரேலிய கொடியை ஏந்திய இஸ்ரேலின் எல் அல் விமான நிறுவனத்தின் விமானம் 24 மே ஞாயிற்றுக்கிழமை காலை இஸ்தான்புல்லில் தரையிறங்கியது. இவ் விமானத்தின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கு மேலும் வலுவூட்டும் என்று அட்டுவீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நாளில் புனித ரமழான் மாதத்தின் முடிவைக் கொண்டாடும் ஈத் அல் பித்ர் தொழுகையின் போது ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்துகான் பாலஸ்தீனத்தை ஆதரித்து குரல் கொடுத்ததோடு இஸ்ரேலின் நடவடிக்கைகளை மிகவும் வன்மையாக கண்டித்தார்.
“பாலஸ்தீனிய நிலங்களை வேறு யாருக்கும் வழங்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.. பாலஸ்தீனத்தின் இறையாண்மையையும் சர்வதேச சட்டத்தையும் புறக்கணிக்கும் ஒரு புதிய ஆக்கிரமிப்பு மற்றும் இணைத்தல் திட்டம் இஸ்ரேலால் செயல்படுத்தப்பட்டது என்பதை கடந்த வாரம் நாங்கள் கண்டோம்” என்று எர்டோகன் ஒரு வீடியோ செய்தியில் ஞாயிற்றுக்கிழமை கூறினார், இதை துருக்கிய அரசு செய்தி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டது.
“அல்-குத்ஸ் அல்-ஷெரீப் மூன்று மதங்களின் புனித தளமாகும் மற்றும் எங்கள் முதல் கிப்லா, உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் இது ஒரு சிவப்பு கோடு என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்… மேலும் உலக ஒழுங்கு நீண்ட காலமாக நீதி, சமாதானம், அமைதி மற்றும் ஒழுங்கு போன்றவற்றை கடைபிடிப்பதில் தோல்வி அடைந்துள்ளது ” என்றும் அவர் கூறினார்.
ஆனால் ஏப்ரல் மாதத்தில், கோரொனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட துருக்கி இஸ்ரேலுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கத் தொடங்கியது, இதை ப்ளூம்பெர்க் முன்னர் அறிக்கை செய்தது குறிப்பிடத்தக்கது.