• நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்
No Result
View All Result
Darul Aman
No Result
View All Result
ஜனாஸாக்களுக்கு மதிப்பளிக்கவும்! – ஐநா கோதாவுக்கு கண்டன மடல் – முழுக்கடிதமும் தமிழில்…

கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!

இலங்கையில் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு சீனா தலைமை! தெரண களத்தில்!

Home Uncategorized

ஜனாஸாக்களுக்கு மதிப்பளிக்கவும்! – ஐநா கோதாவுக்கு கண்டன மடல் – முழுக்கடிதமும் தமிழில்…

April 16, 2020
in Uncategorized, செய்திகள்
Reading Time: 3 mins read
0
202
SHARES
2k
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

முழுக்கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே பதிவிடப்பட்டுள்ளது…

முஸ்லீம்களின் ஜனாஸா குறித்த உரிமைகளை மதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்விடுத்துள்ள ஐநா முஸ்லீம் விரோத பேச்சுக்களை நிறுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் வழிக்காட்டுதல்களை ஏற்றுக்கொண்டு, கொரோனா நோயில் இறக்கும் முஸ்லிம்களது அடக்கம் செய்யும் உரிமையை மதிக்குமாறும், முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவிரோத பிரசாரங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும், இது இலங்கை கொண்டுள்ள சர்வதேச பொறுப்பு எனவும் கூறி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பில் அதன் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான விசேட பிரதிநிதி அஹமட் சஹீட் கடந்த 8 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 31 ஆம் திகதி இலங்கையின் சுகாதார அமைச்சு கொவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை குறிப்பிட்டு உடலை எந்த காரணத்திற்காகவும் கழுவக்கூடாது மூடப்பட்ட பையினுள் வைத்து அதனை பிரேதப்பெட்டிக்குள் வைக்கவேண்டும் மற்றும் உடல்களை எரிக்கவேண்டும் என தெரிவிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட நான்காவது திருத்தங்கள் மார்ச் 31 ஆம் திகதி 2020 நீர்கொழும்பில் முஸ்லீம் ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்டவை என்பதை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட நபரின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராகவே அவரது உடல் எரியூட்டப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள முக்கிய பரிந்துரைகளை கருத்திற்கொண்டு, இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் உள்ள விதிமுறைகளை மீள் பரிசீலனை செய்யவேண்டும் எனவும் அதற்கேற்றபடி சுற்றுநிரூபத்தினை மாற்றவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக அளவிலான தொற்றுநோயினால் தற்போது ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில் இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, இலங்கையின் பல்வேறு சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளிற்கு எதிரானதாக அமையக்கூடிய செயற்பாடுகளை இலங்கையின் அரசாங்கம் தவிர்த்துக்கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான தன்னிச்சையான முடிவுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம், தங்கள் அன்புக்குரியவர்களிற்கு உரிய இறுதிச்சடங்கினை நிறைவேற்ற முடியாது அல்லது புதைக்க முடியாது என்ற அச்சம் காரணமாக அவர்கள் கொவிட்-19 குறித்து தகவல்களை வெளியிட தயங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தொடர்புபட்ட அனைத்து இன மத சமூகத்தவர்களுடனும் மற்றும் சுகாதார நிபுணர்களுடனும் ஏனைய சம்பந்தப்பட்ட தரப்பினர் யாவரிடமும் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு புதிய விதிமுறைகளை நடைமுறைபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முஸ்லிம் சமூகம் உட்பட சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இனவிரோத கருத்துக்கள் வெளியிடப்படுவதை நிறுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு தெளிவு படுத்துமாறு கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐநாவின் விசேட பிரதிநிதி அவரது கடி்தத்தி்ல் இலங்கை ஜனாதிபதிக்கு மேலும் சில வேண்டுகோள்களையும் விடுத்துள்ளார். அக்கடிதத்தின் முழுவிபரமும் கீழே:

ஐக்கிய நாடுகள் சபை,
1211 ஜெனீவா 10,
சுவிட்சர்லாந்து.

மத மற்றும் நம்பிக்கை சுதந்திரம் குறித்த சிறப்பு பிரதிநிதியின் ஆணைகள்;

உடல் மற்றும் உள ஆரோக்கியத்தின் மிக உயர்ந்த தரத்தை அனுபவிப்பதற்கான அனைவரது உரிமைக்கான சிறப்பு பிரதிநிதி; சிறுபான்மை பிரச்சினைகள் குறித்த சிறப்பு பிரதிநிதி; மற்றும் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் குறித்த சிறப்பு பிரதிநிதி.

குறிப்பு: AL LKA 2/20208
ஏப்ரல் 2020

மாண்புக்குரியவரே,

மதம் மற்றும் நம்பிக்கைச் சுதந்திரம் குறித்த சிறப்பு பிரதிநிதி என்ற பதவியின் அடிப்படையில் உங்களை தொடர்பு கொள்வதில் கெளரவம் அடைகின்றோம். உடல் மற்றும் உள ஆரோக்கியத்தின் மிக உயர்ந்த தரத்தை அனுபவிப்பதற்கான அனைவரது உரிமைக்கான சிறப்பு பிரதிநிதி; சிறுபான்மை பிரச்சினைகள் குறித்த சிறப்பு பிரதிநிதி; மனித உரிமைகள் பேரவையின் 40/10, 42/16, 34/6 மற்றும் 40/16 ஆகிய தீர்மானங்களின்படி, பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் குறித்த சிறப்பு பிரதிநிதி;

என்ற அடிப்படையில், நாங்கள் பெற்றுக் கொண்ட, உங்கள் மாண்புமிகு அரசாங்கத்தின் இலங்கை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட பிரேதப் பரிசோதனை நடைமுறை மற்றும் கொவிட்-19 தொடர்புபட்ட இறந்த உடல்களை அகற்றுவது தொடர்பிலும் வழிகாட்டும் சுற்றறிக்கையில் காணப்படும் தகவல்களை தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி:

மார்ச் 2020 இல், சுகாதார அமைச்சகம் சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 நோயாளிகள் குறித்த MoH தற்காலிக மருத்துவப் பயிற்சி வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த சுற்றறிக்கையில் பிரேதப் பரிசோதனை நடைமுறை மற்றும் இறந்த உடல்களை அகற்றுவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

27 மார்ச் 2020 அன்று வெளியிடப்பட்ட MoH வழிகாட்டுதலின் மூன்றாவது பதிப்பின் படி: கொவிட்-19 என உறுதிப்படுத்தப்பட்ட (வகை I) அல்லது சந்தேகிக்கப்பட்ட (வகை II/ III) இறப்பு தொடர்பான உடல் 24 மணி நேரத்திற்குள் (12 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்டால் மிகவும் விரும்பத்தக்கது) கீழே பட்டியலிடப்பட்டுள்ள வழிகாட்டுதலின் படி அகற்றப்பட வேண்டும்.

• எந்தவொரு சூழ்நிலையிலும் உடலை ஒருபோதும் கழுவக்கூடாது.
• தகனம் அல்லது அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், உடலுடன் நேரடியான தொடர்பு கொள்வதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உறுதி செய்யப்படும் பட்சத்திலேயே அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்.
• உடலை காற்று புகாதவாறு சீல் செய்யப்பட்ட பையில் அடைத்து சவப்பெட்டியில் சீல் வைக்க வேண்டும்.
• கல்லறை 6 அடி ஆழம் கொண்டதாக இருக்க வேண்டும்.
• இது நிலத்தடி நீரில் மாசுபடாதவாறு இருத்தல் வேண்டும்.
• கல்லறை அடையாளம் காணக்கூடியதாகவும் கண்டுபிடிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
• அகற்றப்படக்கூடிய உடல்கள் காவல்துறை, சுகாதார அமைச்சகம் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர் கண்காணிப்பின் கீழ் நடைபெற வேண்டும்.
• காவல் துறையினதும் பிற அரசு நிறுவனங்களின் சட்ட அம்சத்தையும் அவற்றின் நடைமுறைகளையும் பின்பற்றல் வேண்டும்.

எவ்வாறாயினும், மார்ச் 31, 2020 அன்று, சுகாதார அமைச்சு வழிகாட்டுதலை மறுபடியும் நான்காவது தடவையாக திருத்தியது. இதில் கொவிட்-19 இனால் உறுதிப்படுத்தப்பட்ட (வகை I) அல்லது சந்தேகிக்கப்பட்ட (வகை II / III) இறப்பில் தொடர்புபட்ட உடல் கண்டிப்பாக 24 மணி நேரத்திற்குள் (12 மணி நேரத்திற்குள்-மிகவும் விரும்பத்தக்கது) கீழே உள்ள வழிகாட்டுதலின் படி தகனம் செய்யப்பட வேண்டும் என்று திருத்தியமைத்தது.

• எந்தவொரு சூழ்நிலையிலும் உடலை ஒருபோதும் கழுவக்கூடாது.
• பையில் சீல் வைத்த உடல் சவப்பெட்டியில் வைத்து சீல் வைக்க வேண்டும்.
• பிரத்யேக தகனம் மாத்திரம்.
• அகற்றப்படக்கூடிய உடல்கள் காவல்துறை, சுகாதார அமைச்சகம் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர் கண்காணிப்பின் கீழ் நடைபெற வேண்டும்.

MoH வழிகாட்டுதலின் இந்த நான்காவது திருத்தமானது 2020 மார்ச் 31 அன்று நீர்கொழும்பில் கொவிட்-19னால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் உடல் அவருடைய குடும்பத்தினரின் விருப்பம் மற்றும் ஆலோசனையின்றி தகனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டது. உலக சுகாதார அமைப்பு (WHO) வழங்கிய கொவிட்-19 வழிகாட்டுதலுடன் ஒப்பிடுகையில், இத்திருத்தமானது இறந்த உடலைப் பாதுகாப்பாக கையாள்வதற்கான விதிமுறைகளுடனும், தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களுடனும், எவ்விதத்திலும் இனங்கவில்லை என்று நாங்கள் கவலைப்படுகிறோம். மேலும் மேற்படி MoH வழிகாட்டல்கள் பல்லின சமூகம் பற்றிய கரிசனையின்மை, உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமை மற்றும் அவர்களின் மத, கலாச்சார நடைமுறைகள் குறித்த கவனயின்மை போன்ற பல்வேறு பலயீனங்களை கொண்டிருப்பதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுகிறோம்.

கொவிட்-19 தொற்றுநோய் தற்போது பல்வேறு சுகாதார சவால்களை பரவலாய் ஏற்படுத்தியுள்ளதுடன், இந்நோய் பரவல் இருப்பதை உறுதி செய்வதில் பல்வேறு காரணிகள் குறித்து கவனத்திற் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பதையும் நாங்கள் அறிவோம். எனினும் இத்திருத்தம் தொடர்பான சுகாதார அமைச்சின் முடிவுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட சமூகங்களின் ஆலோசனைகளையும் கருத்திற் கொண்டு முடிவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இத்தகைய திருத்தங்களுக்கான நியாயத்தன்மை சட்டபூர்வமான அடிப்படைகள், அடிப்படை உரிமைகள், விகிதாசாரத்தன்மை மற்றும் பாரபட்சமின்மை கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். உண்மையில் கலாச்சார அல்லது மத உணர்வு சம்பந்தப்பட்ட விடயங்களிள் ஒரு தீர்மானம் எடுப்பதற்கு முன்பு ​​சிவில் சமூகம் மற்றும் பல்வேறு இன அல்லது மத சமூகங்கள் உள்ளிட்ட யாவருடனும் கலந்தாலோசனை நடாத்தப்பட வேண்டும். இவ்வாறான அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய அணுகுமுறை நடைமுறை படுத்தப்படும் செயற்திட்டங்கள் பற்றிய தெளிவான தொடர்பாடல் மற்றும் பங்கேற்பு, பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்த பொதுமக்களின் அதிருப்தியைக் குறைக்கவும் உதவும்.

இது சம்பந்தமாக பின்வருவனவற்றில் குறிப்பாக கவனம் செலுத்த விரும்புகிறோம்:

1. இறந்த உடலை அகற்றும் முறை – அடக்கம் குறித்த பிரிவின் கீழ், கொவிட்-19 இனால் இறந்தவர்களை அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம் என்று WHO வழிகாட்டுதல் வழங்குகிறது. மேலும் தரமான அடக்கச் சேவைகள் இல்லாத சூழல்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள் வீடுகளில் மரணிக்கும் வழமையுள்ள சூழல்களின் போது, குடும்பங்கள் மற்றும் பாரம்பரிய இறுதிக் கிரியை நடாத்துனர்கள் யாவரும், மேற்பார்வையின் கீழ் இறந்தவர்களை அடக்கம் செய்யவது தொடர்பில் அறிவுருத்தப்பட்டு வசதி வாய்ப்புகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என வீட்டில் நிகழும் இறப்புகள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் நிகழ்தப்படும் இறுதிக்கிரியைகள் தொடர்பான பிரிவின் கீழ் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் கொவிட்-19 இனால் இறந்தவர்களை அளவுக்கதிகமான துரிதகதியில் அடக்க எத்தனிப்பதை தவிர்ந்து கொள்வது WHO வழிகாட்டுதலின் மிகப் பிரதான அறிவுருத்தல்களில் ஒன்றாகும்.

2. இறந்த உடலைக் கையாளுதல் – WHO வழிகாட்டலில் எந்தவொரு சூழ்நிலையிலும் இறந்த உடலை ஒருபோதும் கழுவக்கூடாது என்றும், பையில் சீல் வைத்த உடல் சவப்பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் உடலை கழுவுதல், சுத்தம் செய்தல் அல்லது உடை அணிதல், தலைமுடியைச் சுத்தப்படுத்துதல், நகங்களை ஒழுங்கமைத்தல் அல்லது சவரம் செய்வது போன்ற கிரியைகளை இ்றந்தவரின் குடும்ப உறுப்பினர் அல்லது மதத் தலைவர் போன்ற ஒருவர் நிறைவேற்றுவதை WHO வழிகாட்டுதல் தடுக்கவில்லை. அவ்வாறு பாரம்பரிய அல்லது மத சடங்குகளுக்கேற்ப நிறைவேற்ற முற்படும் எவரேனும் தேவையான பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை பேணிக் கொள்ளுமாறு மட்டுமே அது அறிவுறுத்திகிறது. இது துணியால் சுற்றுவதையும் அனுமதிக்கிறது.

3. உடலைப் பார்வையிடல்: குடும்பத்தினர் விரும்பின் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பேணும்படியும் உடலைத் தொடவோ அல்லது முத்தமிடவோ கூடாது எனவும் குடும்பத்திற்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்பட்சத்தில், உடலைப் பார்வையிட மட்டும் முடியும் என WHO வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அத்துடன் அடக்கம் செய்யத் தயார் செய்யப்பட்ட உடலை அடக்கத்திற்கு முன் இறுதியாக சடங்குகளுக்கேற்ப குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பார்வையிட முடியும் எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு மாறாக, WHO வழிகாட்டலானது நெருங்கிய உறவினர்கள் அதுவும் மருத்துவமனையில் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட பகுதியில் வைத்து மட்டுமே உடலைப் பார்ப்பதற்கு அனுமதிக்கிறது. மேலும் உடல் சீல் வைக்கப்பட்ட பிறகு பார்ப்பதையும் அது தடைசெய்கிறது. இந் நடைமுறையின் பின்னர் கூட, இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தகனம் நடைபெறுவதற்கு முன்பு உடலைப் பார்க்க அனுமதிக்கப்படாத சில சம்பவங்களும் கூறப்படுகிறது. இது இறந்தவரின் குடும்பத்திற்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

4. மத, பாரம்பரிய மற்றும் கிராமப்புற நடைமுறை உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் – இறந்தவரின் கெளரவம், அவர்களின் கலாச்சார மற்றும் மத மரபுகள் அவர்களது குடும்பங்கள் யாவும் இந்நடைமுறைகளின் போது மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை WHO வழிகாட்டுதல் எடுத்துக்காட்டுகிறது. இறுதிக் கிரியை மற்றும் பூதவுடல் கையாளுதல் தொடர்பில் முறையான அவதானங்களை உறுதிப்படுத்துவதுடன், மரபுகளை பேணிக் கொள்வதுடன் அவசியமான கலாச்சார உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் தொடர்பிலான விதிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துகிறது.

நாட்டில் தற்போதுள்ள கலாச்சார மற்றும் மத உணர்வுக்கு மதிப்பளித்தல் அல்லது மரபுகளுக்கு WHO வழிகாட்டலில் கவனம் செலுத்தும் படி பரிந்துரைக்கிறோம். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் படி (ஐ.சி.சி.பி.ஆர்) International Covenant on Civil and Political Rights (ICCPR) 18ஆவது பிரிவு, சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கான ஒவ்வொருவரின் உரிமையையும் பாதுகாக்கிறது. மனித உரிமைகள் குழுவின் 22ம் கருத்தின் 4ம் பந்தி, ‘மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்தும் சுதந்திரம்’ தனித்தனியாகவோ அல்லது சமூகமாகவோ மற்றவர்களுடன் இணைந்து பொது இடத்தில் அல்லது தனிப்பட்ட முறையில் பின்பற்றலாம்’ என்று அறிவுறுத்துகிறது. அது வழிபாடு, கிரிகை, பின்பற்றல் மற்றும் போதனை ஆகியவற்றில் மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்தும் சுதந்திரம் மற்றும் வணக்கம் தொடர்பான எண்ணக்கரு, நம்பிக்கையை நேரடியாக வெளிப்படுத்தும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற வழக்கங்களை உள்ளடக்கி விரிவாக விளக்குகிறது.

ஐ.சி.சி.பி.ஆரின் (ICCPR) பிரிவு 18 (3) இன் படி பொதுப் பாதுகாப்பு, ஒழுங்கு, சுகாதாரம், ஒழுக்கங்கள் மற்றும் பிறரின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாப்பதற்காக மதம் அல்லது நம்பிக்கையின் வெளிப்பாடு கட்டுப்படுத்தப்படலாம். ஆனால் இதுபோன்ற எந்தவொரு கட்டுப்பாடும், பல கட்டாய அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும். இது, நோக்கம் அல்லது விளைவில் பாகுபாடற்றதாக இருப்பதும் குறைந்த கட்டுப்பாட்டு நடவடிக்கையை உள்ளடக்கியதாகவும் இருத்தல் வேண்டும். பிரிவு 18 (3) இல் குறிப்பிடப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கான ஐந்து காரணங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் வரும் அதிகப்படியான பொதுத் தேவைக்கு முகங்கொடுக்கும் போது குறைவான கட்டுப்பாட்டு நடவடிக்கை இருந்தாலும் அதிக தலையீட்டுடன் ஒருவரின் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் உரிமை அனுமதிக்கப்படமாட்டாது. WHO வழிகாட்டல், அடக்கம் செய்வதை பின்வரும் அடிப்படையில் தடை செய்யவில்லை என்ற ரீதியிலும், உடலை இறுதிக் கிரியைகளுக்கு தயார் செய்வதில் கடுமையான நிபந்தனைகளின் கீழ் இறுதிக் கிரியை முறைகளில் இரண்டில் ஒரு முறையை பின்பற்ற முடியும் என்ற அடிப்படையிலும் அடக்கம் செய்வதை தடுப்பதை ஐ.சி.சி.பி.ஆரின் படி அனுமதிக்க முடியாது.

ஐ.சி.சி.பி.ஆரின் பிரிவு 27 கூறுகிறது, ‘இன, மத அல்லது மொழியியல் சிறுபான்மையினர் இருக்கும் நாடுகளில் அத்தகைய சிறுபான்மையினரைச் சேர்ந்த நபர்கள், தங்கள் குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து சமூகத்தில், தங்கள் சொந்த கலாச்சாரத்தை அனுபவிப்பதற்கான தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கான அல்லது தங்கள் சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்கான உரிமை மறுக்கப்படக் கூடாது’. 1992 ஆம் ஆண்டின் தேசிய அல்லது இன, மத மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கு சொந்தமான நபர்களின் உரிமைகள் பற்றிய பிரகடனம் சிறுபான்மையினரைச் சேர்ந்த நபர்களுக்கு தங்கள் சொந்த கலாச்சாரத்தை அனுபவிக்கவும், தங்கள் சொந்த மதத்தை வெளிப்படுத்தவும் பின்பற்றவும் மற்றும் தங்கள் சொந்த மொழியைப் பயன்படுத்தவும் தனிப்பட்ட மற்றும் பொதுவில், எந்தவொரு குறுக்கீடும் அல்லது எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் அனுபவிப்பதற்கு உரிமை உண்டு என்பதை வலியுறுத்துகிறது (சாசனம் 2.1). சிறுபான்மையினரைச் சேர்ந்த நபர்கள் கலாச்சார, மத, சமூக, பொருளாதார மற்றும் பொது வாழ்க்கையில் திறம்பட பங்கேற்க உரிமை உண்டு (சாசனம் 2.2). மேலும் சட்டத்தைக் கொண்டு சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள், தங்கள் மனித உரிமைகளை பாகுபாடின்றி முழு சமத்துவத்துடன் பயன்படுத்துவதை, நாடுகள் உறுதி செய்ய வேண்டும் (சாசனம் 4.1) அத்துடன் சிறுபான்மையினரைச் சேர்ந்த நபர்கள் தங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்தவும், அவர்களின் கலாச்சாரம், மொழி, மதம், மரபுகள் மற்றும் சடங்குகளை வளரச் செய்யவும் சாதகமான நிலைமைகளை உருவாக்கிக் கொடுத்தல் வேண்டும் (சாசனம் 4.2).

இறுதியாக, கொவிட்-19 இலிருந்து இறந்த மனிதர்களின் உடல்களை அகற்றுவதற்கான WHO வழிகாட்டுதலில் வழங்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்களை கருத்திற்கொண்டு, WHO வழிகாட்டுதலில் உள்ள விதிகளை மறுபரிசீலனை செய்யும்படியும் சுற்று நிரூபத்தை திருத்தியமைக்குமாறும் உங்கள் மேன்மையான அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறோம். தொற்றுநோய் தோற்றுவித்திருக்கும் சவால்மிகு இச்சூழ்நிலையில் இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய மற்றும் இலங்கை வாழ் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த நபர்களின் அடிப்படை மனித உரிமைகளுடன் முரண்படும் எந்தவொரு தேவையற்ற நடவடிக்கைகளையும் அரசாங்கம் தவிர்ப்பது முக்கி்யமானதாகும். கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பில் இவ்வாறான தன்னிச்சையான முடிவுகள், சில குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மத்தியில் தங்கள் அன்புக்குரி்யோரது இறுதிகடமையின் சிக்கலை தவிர்க்க, புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்களை அறிவிப்பதில் தயக்கத்தைத் தூண்டுவதற்கும், எதிர் விளைவைத் தோ்ற்றுவிக்க காரணமாகலாம். முறைப்படி நோக்கின், அத்தகைய விதிகள் சம்பந்தப்பட்ட அனைத்து இன, மத, சமூக, சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஏனைய சம்மந்தப்பட்ட சகல தரப்பினரோடும் கலந்தாலோசித்து திருத்தப்பட வேண்டும். சவால்மிகு இத்தருணங்களில் கூட மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் தொடர்ந்து நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் தயவாய் வலியுறுத்துகிறோம்.

நோயாளிகள் மற்றும் இறந்தவர்களின் அடையாளம் மற்றும் கௌரவத்தை பாதுகாப்பதும், அல்லது அவர்களது இனம் மற்றும் மத பின்னனியை பகிரங்கப்படுத்தாமல் பாதுகாப்பதும், தனிநபர்களாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உறுப்பினர் என்ற வகையிலோ அவர்கள் களங்கப்படுத்தப்படுவதைத் தடுக்கும். அத்துடன் இன அல்லது மத பதற்றங்கள், வன்முறைகளைத் தூண்டக்கூடிய வகையில் கொவிட்-19 தொற்றுநோய்க்கு குறிப்பிட்ட சமூகம் பொறுப்பு எனும் குற்றச்சாட்டு உட்பட அனைத்து விரோத செய்திகளையும், வெளியிடுவதையோ அல்லது பரப்புவதையோ, உங்களது மேன்மையான அரசாங்கம் பாரபட்சமின்றி உறுதியாகக் கண்டித்து, நடவடிக்கை எடுப்பதும் முக்கியமானது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலே நினைவுபடுத்தப்பட்ட மனித உரிமைகள் சம்மந்தப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் நியமங்கள் தொடர்பான முழு விபரங்களும் www.ohchr.org இல் காணப்படுகின்றன அல்லது கோரிக்கையின் பேரிலும் வழங்கப்படும்.

மனித உரிமைகள் பேரவையால் எங்களுக்கு வழங்கப்பட்ட கட்டளைகளின்படி, எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வது எங்களது கடமையாகும். அதனடிப்படையில் பின்வரும் விஷயங்களில் தங்களது கவனத்தை நாங்கள் நன்றியுடன் வேண்டுகிறோம்:

1. மேலே குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கவலைகள் குறித்து உங்களது கருத்துகளும் மேலதிக தகவல்களும் ஏதேனும் இருப்பின் எங்களுக்கு வழங்கவும்.

2. கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் மாத்திரம் செய்வது என எடுக்கப்பட்ட முடிவிற்கான காரணங்களை தயவு செய்து தெரியப்படுத்துங்கள். கொவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் பாகுபாடற்றது மற்றும் நியாயமானது என்பதையும், உரிய நோக்கத்தைப் பூரணப்படுத்தக்கூடியது என்பதையும், உறுதி செய்யக்கூடிய வகையில் முறையான சுகாதார நிபுணர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் பல்சமூக உறுப்பினர்களுடன் கலந்தாலோசானைகள் இடம்பெற்றதா?

3. கொவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் நபர்கள் பயிற்றுவிக்கப்பட்டவர்களா? கொவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் மூடப்படுவதற்கு முன்னர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உடல்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றார்களா? உடல் தகனம் செய்யப்படுவது குறித்து அவர்களிற்கு முன்கூட்டியே தகவல்கள் வழங்கப்படுகின்றதா? என்பதை தெரியப்படுத்துங்கள்.

4. WHO சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல் காரணமாக சிறுபான்மை இனத்தவர்கள் பாரபட்சத்திற்கு உள்ளாவதை தடுப்பதற்காக, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அடக்கம் செய்யும் சடங்குகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான அவர்களின் உரிமை உறுதிப்படுத்தப்பட்டு மதிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், தெரியப்படுத்துங்கள். மதச் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் இறுதி கிரியைகள் குறித்த நம்பிக்கைகள் மதிக்கப்படுகின்றதா? பின்பற்றப்படுகின்றதா? என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

5. இலங்கையில் முஸ்லீம்களிற்கும் இலங்கையின் ஏனைய  மத, இன சிறுபான்மை மக்களிற்கு எதிரான குரோதப்பேச்சு அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது? கொவிட்-19 காரணமாக உயிரிழந்த நோயாளிகளின் அடையாளங்களை பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது? என்பதை தெரியப்படுத்துங்கள்.

மேலும், இத்தொடர்பாடல் மற்றும் தொடர்புபட்ட விதிகள், சரத்துக்கள், வழிகாட்டல்கள் யாவும் மற்றும் உங்களிடமிருந்து இது தொடர்பாக வெளியாகும் உங்களின் பதில்கள் யாவும் 4 மணித்தியாலத்தில் குறிப்பிட்ட இணையதளம் மூலமாக பகிரங்கமாய் வெளியாகும் என்பதுடன் மனித உரிமை ஆணையாளருக்கான அறிக்கையிலும் அது சேர்க்கப்படும்.

மாண்புமிகு ஜனாதிபதியவர்களே! எமது தரப்பில் இதற்குரித்தான அதீத கவனம் வழங்கப்படும் என்பதை இத்தால் உறுதிப்படுத்தி நிற்கிறோம்.

அகமது ஷஹீத்

(மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி)

Related Posts

நேற்று ஹஜ்ஜுல் அக்பர், இன்று ஆஷாத் சாலி நாளை நீங்களாகக்கூட இருக்கலாம்!

நேற்று ஹஜ்ஜுல் அக்பர், இன்று ஆஷாத் சாலி நாளை நீங்களாகக்கூட இருக்கலாம்!

March 21, 2021
அமெரிக்காவில் 6 ஆசியப் பெண்கள் பலி – வெள்ளை இனவெறித் தாக்குதல்!

அமெரிக்காவில் 6 ஆசியப் பெண்கள் பலி – வெள்ளை இனவெறித் தாக்குதல்!

March 17, 2021

இலங்கைக்காக முஸ்லீம் நாடுகளிடத்தில் இம்ரான் கான் வக்காலத்தா?

February 7, 2021

எத்தியோப்பியாவின் டைக்ரேயின் நிலை மிகவும் ஆபத்தில் – ஐ.நா எச்சரிக்கை!

February 5, 2021
Next Post
இலங்கையில் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு சீனா தலைமை! தெரண களத்தில்!

இலங்கையில் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு சீனா தலைமை! தெரண களத்தில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

சமீபத்திய கருத்துகள்

  • Face to true on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Fareed on கிலாஃபா மட்டுமே மக்கள் நல அரசு!
  • Nizamhm on இலங்கையில் முஸ்லிம் விரோத பிரச்சாரத்திற்கு சீனா தலைமை! தெரண களத்தில்!
  • Abdullah on கொரோனா வைரஸ் மரணங்களுக்கு தகனத்தை கட்டாயமாக்கியது இலங்கை!
  • Admin on இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்படலாம்!

காப்பகம்

  • June 2022
  • April 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021
  • April 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020
  • October 2020
  • September 2020
  • August 2020
  • July 2020
  • June 2020
  • May 2020
  • April 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • October 2019
  • September 2019
  • May 2019
  • April 2019
  • February 2019
  • July 2018
  • May 2018
  • March 2018
  • January 2018
  • December 2017
  • October 2017
  • February 2017
  • January 2017
  • November 2016
  • September 2016
  • August 2016
  • July 2016
  • June 2016
  • May 2016
  • April 2016
  • March 2016
  • February 2016
  • January 2016
  • December 2015
  • November 2015
  • October 2015
  • August 2015
  • March 2015
  • September 2014
  • August 2014
  • July 2014
  • May 2014
  • April 2014
  • March 2014
  • February 2014
  • November 2013
  • October 2013
  • September 2013
  • March 2013
  • February 2013
  • July 2012
  • December 2011

பிரிவுகள்

  • Uncategorized
  • YouTube சேனல்
  • அகீதா
  • அறிக்கைகள்
  • ஆய்வு
  • உசூலுல் பிக்ஹ்
  • எண்ணக்கரு
  • ஒலி
  • ஒளி
  • கட்டுரைகள்
  • கிலாஃபா
  • சிந்தனை
  • செய்திகள்
  • செய்திப்பார்வை
  • தஃவா
  • நடப்பு விவகாரம்
  • நிகழ்வுகள்
  • பிக்ஹ்
  • பிரசுரங்கள்
  • பொருளாதாரம்
  • யதார்த்தம் எது ?
  • வரலாறு
  • வலையொலி

சமீபத்திய இடுகைகள்

  • உசூலுல் ஃபிக்ஹிற்கும், அல் கவாஇத் அல் ஃபிக்ஹிய்யாஹ்வுக்கும் இடையான வேறுபாடு
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி முஸ்லிம்களின் கண்களைத் திறக்குமா?
  • தீவிர இந்துத்துவா பாதையிலா திருமலை சண்முகா கல்லூரி?
  • சீனா ஈரானுடனும், பரந்த மத்திய கிழக்குடனும் தீவிர உறவு!
  • இந்திய முஸ்லிம்களின் ‘இனப்படுகொலை’ ஐ இனி எதிர்பார்க்கலாம் – Dr. Gregory Stanton!

பிரிவுகள்

Uncategorized YouTube சேனல் அகீதா அறிக்கைகள் ஆய்வு உசூலுல் பிக்ஹ் எண்ணக்கரு ஒலி ஒளி கட்டுரைகள் கிலாஃபா சிந்தனை செய்திகள் செய்திப்பார்வை தஃவா நடப்பு விவகாரம் நிகழ்வுகள் பிக்ஹ் பிரசுரங்கள் பொருளாதாரம் மல்டி மீடியா யதார்த்தம் எது ? வரலாறு வலையொலி
No Result
View All Result
  • நடப்பு விவகாரம்
    • செய்திப்பார்வை
    • ஆய்வு
  • சிந்தனை
    • எண்ணக்கரு
    • அகீதா
    • பிக்ஹ்
    • உசூலுல் பிக்ஹ்
    • வரலாறு
    • பொருளாதாரம்
  • கிலாஃபா
  • தஃவா
    • பிரசுரங்கள்
    • அறிக்கைகள்
    • நிகழ்வுகள்
  • யதார்த்தம் எது ?
  • YouTube சேனல்

© 2020 www.darulaman.net