கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறந்தவர் என்று கருதப்படுபவர்களின் உடல்களை தகனம் செய்வதை இலங்கை கட்டாயமாக்கியுள்ளது. இந்தச் சட்டம் தமது மத நப்பிக்கைக்கு முரணானது என்று கூறி வந்த நாட்டின் முஸ்லீம் மக்களின் எதிர்ப்பையும் புறக்கணித்து இந்த சட்டம் நடைமுறைக்கு வருகின்றது.
நாட்டில் தொற்று நோயால் இதுவரை இறந்த ஏழு பேரில் மூன்று முஸ்லிம்கள் உள்ளனர். உறவினர்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும் அவர்களின் உடல்கள் அதிகாரிகளால் தகனம் செய்யப்பட்டன.
“கோவிட்-19 இனால் இறந்த அல்லது இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் தகனம் செய்யப்படும்” என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்த முடிவை பல மனித உரிமைகள் குழுக்களும் விமர்சித்துள்ளன.
“இந்த கடினமான நேரத்தில், அதிகாரிகள் சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டும்; பிளவுகளை ஆழப்படுத்தக்கூடாது” என்று அம்னஸ்டி இன்டனெசனலின் தெற்காசியா இயக்குனர் பீராஜ் பட்நாயக் இந்த மாத தொடக்கத்தில் கூறியிருந்தது குறிப்படத்தக்கது.
கொரோனா வைரஸால் இறக்கும் மக்களை “அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம்” என்று உலக சுகாதார அமைப்பும் (WHO) தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் காலவரையற்ற நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
21 மில்லியனுக்கும் அதிகமான தேசிய மக்கள்தொகையில் 10 சதவிகிதத்தை உள்ளடக்கிய முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் முக்கிய அரசியல் கட்சி, மத சடங்குகளுக்கும் குடும்பங்களின் விருப்பங்களுக்கும் அரசாங்கம் “கடுமையான புறக்கணிப்பு” செய்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.
Respect Burial Rights; Stop Hate Speech Against Muslims: UN Tells Gota https://www.colombotelegraph.com/index.php/respect-burial-rights-stop-hate-speech-against-muslims-un-tells-gota/
Muslim need to handle this Corona infection in Muslim community very secretly, don’t tell bloody racist government , just isolate 14 days at home, if someone die, secretly buries them, even at your home, this is unexpected situation, ask Ulammah, if it is right to do,