சவுதியின் மூத்த இளவரசரும் ரியாத்தின் ஆளுனருமான பைசல் பின் பண்டார் பின் அப்துல் அசீஸ் அல் சவுத் கோரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அவசர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூடுதலான அரச குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் நோய் வாய்ப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. பணக்கார வர்க்கத்திற்காக இயங்கக் கூடிய வைத்தியசாலைகளில் 500கும் மேற்பட்ட படுக்கைகளை தயார் நிலையில் வைக்குமாறு அல் சவூத், குடும்ப வைத்தியர்களுக்கு அனுப்பப்பட்ட அதி உயர் எச்சரிக்கை மின்னஞ்சல் தம்மிடம் கசிந்துள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் அறிவிக்கிறது.
நாடு முழுவதுமுள்ள விஐபிகளுக்கான ஒழுங்குகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்; எத்தனை பேர் நோய் வாய்பட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை; ஆனால் எச்சரிக்கையாக இருக்கவும்; வைத்தியசாலைகளில் நீடித்த காலமாக நோயுற்றிருக்கும் நோயாளிகளை விரைவாக வெளியேற்ற வேண்டும்; அதி முக்கிய தீவிர நோயாளிகளை மாத்திரமே அனுமதிக்க வேண்டும் என்று கிங் பைசல் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை அதிகாரிகள் சிரேஷ்ட வைத்தியர்களுக்கு அதி உயர் எச்சரிக்கை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளதா கஅது மேலும் தெரிவிக்கிறது.
மேலும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான படுக்கைகளை அதிகரிப்பதற்காக நோய் வாய்ப்புக்குள்ளாகும் ஏனைய மருத்துவமனை ஊழியர்களுக்கு சாதாரண மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அரச குடும்பத்திற்கு நெருங்கிய ஒருவரின் கூற்றுப்படி 150க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது. இந்த செய்தியை நியுயோர்க் டைம்ஸை மேற்கோள் காட்டி அல் ஜஸீரா இணையத்தளமும் வெளியிட்டுள்ளது.
இஸ்லாம் அனைத்து முஸ்லிம்களையும் ஒரே தட்டில் வைத்தே பார்க்கிறது. யாரும் யாரைவிடவும் உயர்ந்தவர்கள் அல்ல; அதிக இறையச்சம் கொண்டவனே அல்லாஹ்வின் பார்வையில் உயர்ந்தவர்கள். மேற்கத்திய கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொண்டு இஸ்லாத்தை இழிவாக்கும் அனைத்து செயல்களையும் செய்து கொண்டு இஸ்லாத்திற்கும் புனித பூமிக்கும் நாங்களே பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வக்கிரம் பிடித்த ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு காட்டுவது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல. அதனை இந்த பேரிடர் காலத்திலும் அவர்கள் காண்பிப்பதே மிகுந்த விசனத்தை ஏற்படுத்துகிறது.