செய்தி:
கடந்த சில நாட்களுக்கு முன்பு YES பேங்க் (வங்கி) திவாலானது. அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அது மிகப்பெரிய இடியாக இருந்தது. வாடிக்கையாளர்கள், தமது வைப்பிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாவை மட்டும் தான் எடுத்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் பேங்க் கூறியது. பலர் தங்கள் மருத்துவச் செலவுக்கும், அன்றாட தேவைக்கும் கூட போதுமான அளவுக்கு பணம் எடுக்க முடியாத சிக்கலுக்கு ஆளானார்கள்.
கருத்து:
இந்தியாவில் தனியார் வங்கிகளின் வரிசையில் மிக பிரபலமான வங்கி தான் YES வங்கி! அது அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டது. இந்த வங்கி 1122 கிளைகளையும், 1220 ATM மையங்களையும் கொண்டது. மேலும் இந்த வங்கியின் ஆண்டு வருவாய் 25491 கோடிகளும், இந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 301390 கோடிகளும், இந்த வங்கியின் ஆண்டு லாபம் 1506.64 கோடிகளும் ஆகும்.
இந்தியாவில் உள்ள பல முக்கிய கோயில்களும் இந்த வங்கியில் ஃபிக்ஸ்ட் டெபாஸிடில் (Fixed Deposits) பணத்தை செலுத்தியுள்ளனர். மேலும் பல சாமானிய மக்கள் இந்த வங்கியில் தங்கள் பணத்தை சேமித்து உள்ளனர். YES பேங்க் திவால் ஒன்றும் இந்தியாவிற்கு புதிது அல்ல. இந்த திவால் வரிசையில் பஞ்சாப் மஹாராஷ்டிரா கார்ப்பரேஷன் வங்கி(PMC Bank) ஐடிபிஐ வங்கி (IDBI Bank) லக்ஷ்மி விலாஸ் வங்கி (Lakshmi Vilas Bank) 1989யில் தமிழ்நாடு வங்கி (Tamil Nadu Bank) தஞ்சாவூர் வங்கி (Bank of Tanjore) ராஜஸ்தான் வங்கி (Rajashthan Bank) போன்ற பல வங்கிகள் திவால் ஆகியுள்ளன.
இந்த எல்லா வங்கிகளும் சந்தித்த ஒரு பிரச்சனைதான் வாராக்கடன் (Bad Debts) !
வங்கிகள் இயங்க காரணம் வட்டி. பொதுவாக வங்கியின் வேலை மக்களிடம் இருந்து பணம் பெறுவது, அதாவது மக்கள் தங்கள் பணத்தை சேமித்து வைக்க இங்கு பணத்தைப் போட்டு வைப்பார்கள். சேமிப்பு கணக்கு, ஃபிக்ஸ்ட் டெபொசிட் கணக்கு என்னும் நிரந்திர சேமிப்பு கணக்கு (இந்த கணக்கில் உள்ள பணத்தை சில காலத்துக்கு எடுக்க முடியாது) போன்ற வங்கிக்கணக்குகளின் ஊடாக மக்களின் பெருந்தொகையான பணங்களை வங்கிகள் அறவிட்டு விடுவார்கள். இப்படி வாங்கிய பணத்தை அந்த வங்கிகள் பிறர்க்கு அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும். அந்த வட்டியில் சிறியதொரு பங்குத் தொகையை டெப்பாசிட்காரர்களுக்கு வங்கி கொடுக்கும். மீதம் உள்ள வட்டி அனைத்தும் வங்கிகளுக்கு இலாபமாகச் சென்று விடுகின்றன. கடன்களில் பல வகையான கடன்கள் உள்ளன. படிப்பு கடன், வீட்டு கடன், தொழில் கடன் இன்னும் ஏராளமான கடன்களும் அதற்கு பல வகையான வட்டி விகிதங்களும் உள்ளன.
கடன் கொடுப்பதில் வங்களின் பாரபட்சம்:
வங்கிகள் சாதாரமான ஏழை எளிய மக்களுக்கு கடன் வழங்கவேண்டும் என்றால் பல டாக்யுமென்ட்ஸ் கேட்கும், பல வரைமுறைகள் உள்ளது என கூறும். ஆனால் பெரும் நிறுவன முதலாளிகளும், பணகாரர்களும் கடன் கேட்டால், எந்தவித டாக்யுமென்ட்ஸும் கேட்காமல், எந்த நெருக்கடி வரம்புகளையும் விதிக்காமல் அல்லது பேணாமல் பல கோடிக் கடனை வழங்குவார்கள். அவர்கள் அந்த கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்து விடுவார்கள். வியாபாரத்தில் நஷ்டம் என்று கூறி வெளிநாடு சென்று விடுவார்கள். அந்த வங்கியும் அவர்களின் கடனை தள்ளுபடி செய்துவிடும்!
முதலாளிக்களுக்கான வங்கி செயல்பாடுகள்:
வங்கிகள் சரியான நியாயமான முறையில் நடப்பதில்லை! ஏழை மக்களிடம் ஒரு மாதிரியும், பெரும் பணக்கார நிறுவனங்களிடம் ஒரு மாதிரியும் கடன் வழங்குகிறது. விவசாயிகள் கடன் பெற்றாலோ, மாணவர்கள் கல்வி கடன் பெற்றாலோ, சாதாரண மக்கள் கடன் பெற்றாலோ அவர்களிடம் வாங்கிய கடனை திருப்பி வசூலிக்க மிக கடுமையான முறையில் நடந்துக்கொள்ளும்.
உதாரணமாக ஒரு நிறுவனம் 10000 கோடி ருபாய் ஒரு வங்கியிடம் கடன் பெறும். அந்த கடனை அந்நிறுவனம் திருப்பி செலுத்தாமல் இருக்கும் நிலையில், அந்த வங்கி கடனை திரும்ப பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மேலும் ஒரு மாபெரும் தவறை செய்யும்! அது பழைய வாராக்கடனை மறைக்க புதியதாக 15000 கோடி ரூபாயை அந்நிறுவனத்துக்கு மீண்டும் கடனாக வழங்கும்! அதற்கு ஃப்ரெஷ் லோன் (Fresh Loan) என்று பெயர்! இப்படி வாராக்கடனை மறைக்க மக்களின் சேமிப்பு பணத்தை புதிய கடனாக வங்கிகள் வாரி வாரி வழங்கும். அது மிகப்பெரிய கடன் சுமையாக மாறும். வங்கிகளின் இந்த முட்டாள்தனமான செயல்களால் இந்த திவால் நிலைமை உருவாகின்றது. YES பேங்கின் 2014 ஆம் ஆண்டு வாராக்கடன் அளவு 55000 ஆயிரம் கோடி! இப்போது 2020 ஆம் ஆண்டு வாராக்கடன் அளவு 2,41,000 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது!!
இஸ்லாமிய கண்ணோட்டம்:
வங்கிமுறை எப்போதும் கடனையே உருவாக்கி வருகிறது! மேலும் மோசடிகளின் மூலம் ஒரு சில முதலாளிகளின் கைகளில் மட்டும் செல்வத்தை குவிப்பதற்கான கருவியாகவும் இன்று வரை பயன்பட்டு வருகிறது.
மனிதனால் உருவாக்கபட்ட முதலாளித்துவ ஜனநாயாக அமைப்பில் ஆளும் வர்க்கத்தினர் எந்தவொரு சட்டத்தையும் கொள்கையையும் தங்களது நலனுக்காக வகுத்துக்கொள்ளகூடிய இறையாண்மையை பெறுகிறார்கள். மேலும் தமது முதலாளித்துவ நண்பர்களின் உத்தரவின் பெயரில் வங்கிகளையும், நிதி முதலீட்டு நிறுவனங்களையும் கொள்ளையடிக்கும் இயந்திரமாக அவர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் வங்கி சீர்திருத்த நடவடிக்கை அனைத்தும் தற்போது நடைபெறும் சுரண்டலை தொடர்வதற்கு இந்த கொள்ளையடிக்கும் இயந்திரத்தை வலுப்பெற செயவதோடு, ஏழைகளுக்கும் பணக்கார்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் அதிகப்படுத்தும் செயலேயன்றி வேறில்லை.
இத்தகைய சுரண்டலை அடிப்படையாகக்கொண்ட முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் பிடியிலிருந்து நம்மை விடுவித்து கொள்வதற்கான ஒரே வழி மீண்டும் இஸ்லாமிய அமைப்பை நிறுவுவது மட்டுமே. அதாவது கிலாஃபா அர்ராஷிதா எனப்படும் நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் ஆட்சி அமைப்புபற்றி சிந்திக்க வேண்டிய சரியான தருணமே இது. இந்த ஆட்சி அமைப்பு தற்போதைய மக்களை சுரண்டும் ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டும் இல்லாமல் மக்களிடையே செல்வத்தை சமமாக பங்கீடுச் செய்வதை உறுதிசெய்யும்.
இந்த குறிக்கோளை அடைய கிலாஃபா அரசு,
முதலில் ஆட்சியாளர் கொடுங்கோளனாக மாற வழிசெய்யும் பாதையை மூடும். இங்கு இறையாண்மை அல்லாஹ் (சுபு)விற்கு மட்டுமே உரியது. ஆகையால் ஆட்சியாளர் எந்த ஒரு சட்டத்தையோ அல்லது தனது பிடித்தமான வர்க்கத்தினருக்கு சாதகமான கொள்கையையோ இயற்ற முடியாது.
இரண்டாவதாக கிலாஃபா அரசு, கொள்ளையடிப்பதற்காக வழிகோலச் செய்யும் அனைத்து வாசல்களையும், முறைகளையும் இழுத்து மூடிவிடும். உதாரணமாக வட்டி அடிப்படையிலான வங்கிமுறை, நிதி நிறுவனங்கள் போன்றவை அனைத்தும் நிறுத்தப்படும். ஏனென்றால் வட்டி அடிப்படையிலான பரிவர்த்தனைகள் அனைத்தும் இஸ்லாமிய ஷரிஆ தடை செய்துள்ளது.
ஏனென்றால் இவை அல்லாஹ் (சுபு) மற்றும் அவனது தூதர்(ஸல்) அவர்களுக்கு எதிராக போர் தொடுப்பதை போன்றதாகும். அல்லாஹ் (சுபு) கூறுகிறான்
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்..” (2:278)
“இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்) – நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் (முதல்) உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்,- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்”. (2:279)
இஸ்லாமிய பொருளாதார அமைப்பு வட்டி என்ற அமைப்பில் மாட்டி சிக்கியுள்ளவர்களை மீட்க கூடியது. தற்போதைய பொருளாதார அமைப்பு புதிய தொழில் முதலீடுகளை விட வட்டி அடிப்படையிலான முதலீடுகளை பாதுகாப்பதையே முக்கியமாக கருதுகிறது. ஆகையால் தான் மக்கள் வட்டி முதலீட்டினை தேர்ந்தெடுக்கின்றனர்.
வங்கி அத்தகைய முதலீடுகளை மக்களுக்கே திரும்பவும் வட்டிக்கு கொடுக்கிறது. இவ்வாறு வங்கிகளிடம் வட்டிக்கு வாங்கும் சாமானிய மக்கள் அதிகப்படியான வட்டி பலுவால் நசுக்கபடுகின்றனர். ஆனால் மறுபுறம் முதலாளிகள் தங்களின் செல்வ மதிப்பை பெருக்கி கொள்கிறார்கள். இத்தகைய நிறுவன ரீதியிலான சுரண்டலை தடுக்க வட்டி மற்றும் வஞ்சகத்தின் மூலம் மக்களின் செல்வத்தை கொள்ளையடிக்கும் இந்த வங்கி முறையை கிலாஃபா பிடுங்கியெறியும்.
இறுதியாக இஸ்லாமிய பொருளாதார அமைப்பு அதன் அனைத்து குடிமக்களுக்கும் மதம், இனம் என்ற பாகுபாடுன்றி மகிழ்ச்சியையும், பாதுகாப்பையும் வழங்கும். கிலாஃபத்தின் கீழ் மக்களின் வாழ்க்கை மற்றும் செல்வம் பாதுகாக்கப்படும். அல்லாஹ் (சுபு) கூறுகிறான்,
“அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்”. (20:123 )
கிலாஃபா அரசு வட்டி என்ற அச்சுருத்தலில் இருந்து பொருளாதாரத்தை தூய்மைபடுத்தும். வட்டியிலான பொருளாதாரம் தனியார் வங்கியின் மேல்தட்டு மக்களிடம் மட்டுமே இருக்க கூடியாதாகவும், உண்மையான பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து செல்வத்தை முற்றிலுமாக எடுத்துக்கொள்கிறது. அல்லாஹ் (சுபு) வட்டியை முற்றிலுமாக தடைச் செய்துள்ளான். ஆகையால் இஸ்லாமானது உண்மையான பொருளாதார நடவடிக்கையை ஊக்குவிப்பதன் மூலம் பொது மக்கள் மீதான பணவீக்கச் சுமையை அகற்றுகிறது. கிலாஃபா, தனியார் வட்டி அடிப்படையிலான வங்கியின் வணிகத்தை முடிவுக்கு கொண்டுவரும். மேலும் பைத்துல்மால் எனப்படும் அரசு கருவுலத்தை நிறுவுவதன் மூலம் வட்டி இல்லாத கடன்களை வழங்கி வேளாண்மை, தொழிற் நிறுவன்ஙகளில் ஆக்கபூர்வமான மற்றும் துடிப்பான முறையில் பொருள்களை தயாரித்து ஊக்கப்படுத்தி உலகசந்தையுடன் போட்டியிடும் நிலைமைய உருவாக்கும்.
இன்ஷா அல்லாஹ்…