இலங்கை உட்பட முழு உலகமும் COVID19 இல் இருந்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்கு முயற்சிகளை செய்து கொண்டிருக்கும் தருவாயை ஜனாதிபதி கோடாபே ராஜபக்ச தனது சகாவான முன்னால் ராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்னாயகவுக்கு பொது மன்னிப்பு வழங்க பயன்படுத்தியுள்ளார். 2000ஆம் ஆண்டு 8 அப்பாவி தமிழ் பொதுமக்களை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்ட வழக்கு 13 வருடங்களாக விசாரிக்கப்பட்டு கடந்த 2015 ஆண்டில் ரத்னாயக்கவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த பொது மன்னிப்பு தேசிய மற்றும் சர்வதேச அளவில் நேர்த்தியான எண்ணம் கொண்ட அனைத்து மக்களிடமிருந்தும் நிறுவனங்களிலிருந்தும் பெருமளவிளான கண்டனத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதியின் இந்த செயலானது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களையும் சமூகத்தையும் அவமதித்திருப்பதுடன் ஜனாதிபதி நாட்டின் நீதித்துறையில் அப்பட்டமாக தலையீடு செய்து அதிமுக்கிய அந்தத் துறையையும் அவமதித்திருக்கிறார்.
கோட்டாபே ராஜபக்ச தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று தெரிந்து கொண்டு ஏன் படுகொலையில் ஈடுபட்ட ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்க முடிவு செய்தார்? இதற்கு இரண்டு சாத்தியமான காரணங்களைப் பற்றி ஊகிக்க முடிவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதில் ஒன்று அரசியல் காரணமாக இருக்கலாம், மற்றொன்று தனிப்பட்ட காரணமாக இருக்கலாம்.
அவரது அரசியல் நலனைப் பெறுத்தவரையில், தனது கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) வின் தலைமையிலான இலங்கை சுதந்திர பொது ஜன கூட்டணியின் (SLNPS) ஊடாக போட்டியிட்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டும் என்ற அவரது விருப்பம் இதில் முக்கியமானது. சர்ச்சைக்குரிய 19 ஆவது சட்ட திருத்தத்துடன் காணப்படும் தற்போதைய அரசியலமைப்பை தீவிரமாக திருத்துவதற்கு இந்த பெரும்பான்மை வெற்றியானது அவருக்கு உத்தரவாதமாக இருக்கும். 19ஆவது சட்ட திருத்தமானது இலங்கையை ‘செழிப்பும் மகிமையும்’ மிக்க நாடாக மாற்றுவதற்கான தனது திறனையும் விருப்பத்தையும் மிகவும் கட்டுப்படுத்துகிறது என்று அவர் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறார். ஜே.ஆர் ஜயவர்தனவுக்கு இருந்த நிர்வாக பலத்தை போல அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதியாக அவர் மாற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு அவர் செயற்படுகிறார். இதனால்தான் கொரோனா வைரஸின் பரவலுக்கு மத்தியில் வேட்புமனுக்களை தடையின்றி தொடர அவர் அனுமதித்தார். தேர்தல் விரைவாக நடைபெற வேண்டும், அதே சந்தர்பத்தில் எதிர்க்கட்சிக்கு எந்தவொரு ஒருங்கிணைந்த பிரச்சாரங்களையும் செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விருப்புகிறார்.
ஜனாதிபதி கோட்டபாய, தான் பெளத்த மேலாதிக்கவாதிகளின் ஆதரவோடு மட்டுமே ஜனாதிபதியானார் என்ற உண்மையை முழுமையாக அறிந்திருக்கிறார். அதை தனது பதவியேற்பு விழாவில் வெளிப்படையாகவும் சுட்டிக் காட்டினார். இந்த மேலாதிக்கவாதிகளின் பணமும் பிரச்சாரமும் தான் சிங்கள வாக்காளர்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரைத் தேர்ந்தெடுக்க தூண்டியது. இப்போது சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவை விடுவிக்க வேண்டும் என்று வெளிப்படையாக பௌத்த மேலாதிக்கவாதிகள் எந்தவித கோரிக்கைகளையும் வைக்கவில்லை என்றாலும், நீதித்துறையில் ஒருதலைப்பட்சமாக தலையிட்டு அவருக்கு பொது மன்னிப்பு வழங்கிய கோட்டபாயவின் செயற்பாடு நிச்சயமாக அவரது ஆதரவாளர்களை மிகவும் மகிழ்வித்திருக்கும் என்றே கூற வேண்டும். ரத்நாயக்கவை விடுவிக்கும் இந்த செயலால் மேலாதிக்கவாதிகளுக்கு தனது தைரியத்தையும், திறமையையும் அவர் நிரூபிக்க முயன்றுள்ளார். கோட்டபாய தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறையில் பரிதவிக்கும் இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிப்பதாக வாக்குறுதி அளித்திருந்ததை நாம் அறிந்திருப்போம். எனவே எதிர்காலத்திலும் அவரிடமிருந்து இதுபோன்ற மன்னிப்புகளை நாம் அதிகம் எதிர்பார்க்கலாம்.
அண்மைக்காலமாக சுயேற்சையாக இயங்கக்கூடிய பெளத்த துறவிகள் குழு கோட்டபாயவும் அவரது சகோதரர் மகிந்தவும் ஏற்கனவே வாக்குறுதி அளித்தது போல் ஒரு சிங்கள பெளத்த அரசியல் மற்றும் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான போதுமான செயற்பாடுகளை இன்னும் முன்னெடுக்கவில்லை என்று தங்களது அதிருப்தியை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இந்தத் துறவிகள் குழு புதியதொரு வலதுசாரி அரசியல் கட்சியான அபே ஜனபல பக்ஷய எனும் கட்சியையும் உருவாக்கியுள்ளனர். இவர்களின் வளர்சியைத் தடுக்கவும்இ சிங்கள பெளத்த வாக்கு வங்கியை இலங்கை சுதந்திர பொது ஜன கூட்டணியின் (SLNPS) கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் திட்டங்களை மேற்கொள்கிறார் கோட்டபாய. ஆகவே ரத்நாயக்கவின் பொது மன்னிப்புக்குப் பின்னால் நிச்சயமாக அரசியல் இருக்கின்றது.
இது தவிர இந்த மன்னிப்புக்கு பின்னால் தனிப்பட்ட காரணமும் இருக்கலாம். கோத்தபாயாவின் குற்ற உணர்விலிருந்து அந்தக் காரணம் தோன்றியிருக்கலாம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரத்நாயக்க உட்பட பிற இராணுவ மற்றும் காவல்துறையினர்களpன் பெரும்பாலானோர் அவர்கள் செய்த குற்றங்களை சுயமாகவே திட்டமிட்டு நிறை வேற்றவில்லை. இவர்கள் ஒரு கட்டளை சங்கிலியிலிருந்து வந்த உத்தரவுகளை நிறைவேற்றிய கருவிகளாகவே செயல்பட்டுள்ளனர். அந்த கட்டளை சங்கிலியின் பிரதான புள்ளியில் கோட்டாபாயாவே இருந்தார் என்பது எம் எல்லோருக்கும் தெரியும். இதற்கு சான்றாக ‘கோட்டாவின் போர்’ என்று சந்திரபிரேமாவால் ஒரு புத்தகமே வெளியிடப்பட்டது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தை வடிவமைத்து அதிலே பல மனித உரிமை மீறல்கள் உள்ளடங்களாக வென்று முடித்தவர் என்ற அடிப்படையில் இடம்பெற்ற குற்றங்களுக்கு அவரும் முக்கிய சூத்திரதாரியாவார். ஆகவே திட்டமிட்டு உத்தரவிட்டவர் சுதந்திரமாக நாட்டின் ஜனாதிபதியாக உலாவி வரும்போது உத்தரவுகளை நிறைவேற்றிய கருவிகள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்? இந்தக் கேள்வியே அவரின் மனசாட்சியைத் தூண்டியிருக்க வேண்டும். இதுவே இவர்கள் அனைவரையும் விடுவிப்பதற்கான அவரது முடிவையும் தீர்மானித்திருக்க வேண்டும்.
நிச்சயமாக ஜனாதிபதியின் நடவடிக்கைகளால் தமிழ்ச் சமூகம் மன உளைச்சளுக்கு உள்ளாகும். எனினும் கோட்டபாயவை பொறுத்தவரை அரசியல் ரீதியாக இது ஒரு பிரச்சினையே அல்ல. ஏனென்றால் மிக மிகக் குறைவான தமிழர்களே இலங்கை சுதந்திர பொது ஜன கூட்டணிக்கு (SLNPS) எதிர்வரும் தேர்தலி வாக்களிக்கக்கூடும்.
கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையின் ‘செழிப்பிற்கும் மகிமைக்குமான மாதிரியை ஏற்கனவே முடிவு செய்து விட்டார். இந்த மாதிரியில் அரசியல் சமூக பொருளாதார ரீதியாக சிறுபான்மையினர்கள் ஒதுக்கப்படலாம். கோட்டபாயவின் பெளத்த மேலாதிக்க ஆதரவாளர்களின் பார்வையில், தமிழர்களும் முஸ்லிம்களும் இந்த நாட்டின் உரிமையாளர்கள் அல்லவே. எனவே அவர்களை வெறும் கருவேப்பிலைகளாக மாத்திரம் கோத்தபாய பயன்படுத்தும் வரையில் அவர்களின் ஆதரவு அவருக்கு கிட்டும். அது அருக்கு போதுமானதாக இருக்கும்.