COVID19 நோயால் இலங்கையில் இன்னும் யாரும் பலியாகவில்லை. ஆனால் நாடு முழுவதும் உள்ள நீதித்துறை மருத்துவ அதிகாரிகளுக்கு (JMO) ஒரு மருத்துவமனையில் ஒரு நோயாளி கொரோனா வைரஸுக்கு பலியானால் பின்பற்றப்பட வேண்டிய நிலையான இயக்க நடை முறைகள் (SOP) அனுப்பப்பட்டுள்ளன.
SOP இன் படி இந்த நோயினால் இறந்துபோகக்கூடிய அனைவரின் உடல்களும் அவர்களின் மத நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல் 24 மணி நேரத்திற்குள் தகனம் செய்யப்படும்.
(JMO)வினால் உறுதி செய்யப்பட்ட ஒரு ஆவணம், ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அல்லது COVID19 நோய்க்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு பிரிவில் மரணிக்கும் போது பிரேத பரிசோதனை தேவையில்லை என்று கூறுகிறது. இந்த நடைமுறைகள் மிகவும் தீவிரமான தொற்றுநோயாகக் கருதப்படும் வேறு எந்த நோய்க்கும் ஒத்தவையாகும்.
உடல்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டு பையில் அடைக்கப்படும். மேலும் மருத்துவமனை வளாகத்திற்குள் மாத்திரமே மரணித்தவரின் உடலை பார்க்க நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு முகமூடிகள் வழங்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரம் வழங்கப்படும். இறந்தவரின் முகம் மட்டுமே காட்டப்படும். மேலும் உடலைத் தொடுவதற்கு அனுமதிக்கப்படாது என்று SOP கூறுகிறது.
அதன் பிறகு, சடலங்கள் இறுதி சடங்கு இயக்குநர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நோய் மேலும் பரவக்கூடும் என்பதால் பிணம் பதனிடல் (Embalming) செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இறுதிக்கிரிகை நடாத்தும் நிலையங்கள் உடனடியாக பையில் அடைத்த உடலை சவப்பெட்டியில் அடைத்து சீல் வைக்க வேண்டும்.
சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டி ஒரு வீட்டில் மதச் சடங்குகளுக்காக மாத்திரமே வைக்க முடியும்.
இறுதிச் சடங்குகளுக்கு வெகுஜன கூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. இறந்த 24 மணி நேரத்திற்குள் சடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகிறது SOP.
இதுவரை இலங்கையில் 104 COVID19 தொற்று நோயாளிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேர் நலமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
கடைசி வரைக்கும் இதற்கான மருந்து என்னா? நபி(ஸல) அவர்கள் குர்ஹன் அல்லஹ் கூறும்படி தேன், ஒட்டகம் பால், ஒட்டகம் சிறுநீர் இதில் கொரோனா வைரஸ்கான மருந்து இருக்லாம் ஏன்னா அல்லாஹ் ஒரு நோய் உலகத்தில் இருக்கிறத்திற்கு முன் இதற்கான மருந்து உருவாக்கி தான் இருப்பான் நாம தான் அதை காணமல் இருக்கிறோம்.