கோவிட் -19, வறுமை கோட்டுக்கு கீழுள்ள மற்றும் ஏற்கனேவே பதிக்கப்பட்ட மக்களை மிகவும் பாதிக்கப்படக்கூடியது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை சமாளிப்பதற்கான உதவி, கடைசியாகவே கிடைக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே மனிதாபிமான மற்றும் அகதிகள் நெருக்கடிகளைக் கையாளும் நாடுகளுக்குள் இத்தொற்று பரவும் நேரத்தில் அவர்கள் அதைக் கையாள்வதற்கான வளங்களை கண்டு பிடிப்பதற்கான போராட்டம் மிகப்பெரிதாக இருக்கும் என்று கடந்த வியாழக்கிழமை “புதிய மனிதாபிமான செய்தி நிறுவனம்” (New Humanitarian News Agency) நடத்திய ஒரு வெபினாரில் நிவுணர்கள் தெரிவித்திருந்தனர்.
சீனாவையும், ஐரோப்பாவையும் எடுத்துக்கொண்டால்கூட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பரிசோதனைகளுக்கான வளங்கள் என்பன பாரிய தட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இந்தத் தொற்றின் கடுமையான தாக்கத்துக்குள் வளர்முக மற்றும் வறுமைப்பட்ட நாடுகள் உள்ளாகுமானால் அது யாராலும் கட்டுப்படுத்த முடியாத சூழலை ஏற்படுத்தும். தற்போது இந்நாடுகளில் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் குறைவாக இருந்தாலும் இத்தொற்றின் மூன்றாவது அலையானது பலவீனமான சுகாதார ஒழுங்குகளைக் கொண்ட இந்நாடுகளை வீரியமாகத் தாக்கும்போது அது மிக மோசமான நிலைக்கே இட்டுச்செல்லும்.
மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுடன் பணிபுரிகின்ற மற்றும் உலக சுகாதரத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள், உலகளாவிய ரீதியில் முழு மனிதகுலத்தினதும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமானால் சர்வதேச சமூகம் இத்தொற்றினால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் எனக் கருதப்படும் மக்களுக்கு உதவுவதற்கு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் நெருக்கமாக பணியாற்றத் தொடங்க வேண்டும் என்று எச்சரித்தனர்.
குறைந்த அளவிலான “தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், தடுப்பூசிகள் மற்றும் குறைந்த அளவிலான சிகிச்சை முறைகள் ஆகியவற்றில் ஏற்படும் பற்றாக்குறைக்கு எதிராக போராடுவதற்கு நாங்கள் இன்னும் தயாராக இல்லை” என்று, உலகளாவிய மேம்பாட்டு மையத்தின்(வாஷிங்டன் டி.சி.) மூத்த கொள்கை உறுப்பினர் ஜெர்மி கோனின்டிக் கூறினார்.
“முதல் 100 மில்லியன் தடுப்பூசிகள் வெளிவரும் போது, யார் அதைப் பெறுகிறார்கள் என்பதில் ஒரு பெரிய போராட்டம் இருக்கும்; ஆனால் அவை, அவற்றை வாங்குவதற்கு சக்தி உள்ளவர்களுக்கு மாத்திரம் இல்லாமல் அனைவருக்கும் கிடைக்கப்பெறச் செய்வது மிகவும் முக்கியமானது.”
பல ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்றுவரை ஆப்பிரிக்காவில் சுமார் 600 பேரையே இத்தொற்று தாக்கியுள்ளது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஆபிரக்கா கண்டம் முழுவதும் கூடுதலான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறிய அவர், “ஆப்பிரிக்கா எழுந்திருக்க வேண்டும், என் கண்டம் எழுந்திருக்க வேண்டும்” என்று உணர்வு பூர்வமாக தெரிவித்தார்.
ஆனால் இங்கிலாந்து உட்பட உலகின் பெரும்பகுதிகளில் கோவிட்-19க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும் வீதம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கின்ற சூழலில் வளரும் நாடுகள் ஒரு பெரிய சவாலை எதிர்நோக்கி உள்ளன என்று ஜெனீவாவை தளமாகக் கொண்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய மனிதநேய நடவடிக்கைகளின் இயக்குனர் கார்ல் பிளான்செட் கூறினார்.
“பரிசோதனை நடக்க வேண்டும், அதுதான் முன்னுரிமையான விடயம். பிரச்சினை என்னவென்றால், சீனாவிற்கு, ஐரோப்பாவிற்கு பிறகு, குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் இத்தொற்றின் மூன்றாவது அலையை எதிர்நோக்கி இருக்கின்றன. அங்கே சோதனைகளுக்கான அணுகல் சிக்கலாக இருக்கும்” என்றார் பிளான்செட்.
தற்போது பல பணக்கார நாடுகள் தங்கள் சொந்த மக்களிலும், பொருளாதாரத்திலும் மாத்திரம் கவனம் செலுத்தி வருவதால், மனிதாபிமான சமூகம் (humanitarian society), தான் தற்போது செயல்படும் முறையை மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் குறித்த ஓரிரு விடயங்களுக்கான பிரச்சாரங்களில் கவனம் செலுத்துவதை விட உலகளாவிய பொது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதில் அவர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
“இது அகதி முகாம்களிலோ அல்லது யுத்த பிரதேசத்திலோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவைகளை வழங்குவது போன்றதல்ல. இது உண்மையில் சுகாதார அமைப்புகளின் அடிப்படை மற்றும் முழு நாட்டினதும் சுகாதாரத்தைத் தேடும், சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நடத்தை பற்றியது.” ” மனிதாபிமானத் துறை சார்ந்த நாம் எப்போதும் இவை அனைத்துக்கும் நன்கு தயார் நிலையில் உள்ளவர்கள் அல்ல.” ஆகவே நாம் உள்ளுர், சமூகங்களின் நம்பிக்கையை வென்ற உள்ளுர் அமைப்புக்களுடனும், அரசாங்கங்களுடனும் இணைந்து அதிகம் பணியாற்ற வேண்டும்” என்று கோனின்டிக் கூறினார்.