2020, மார்ச் 3ஆம் திகதிடன் கிலாஃபா நிர்மூலமாக்கப்பட்டு 96 வருடங்கள் கடந்து விட்டன. ஏறத்தாழ இந்த நூறு வருடங்களில் முஸ்லிம் உம்மத் சந்தித்த கொடுமைகள் சொல்லால் வர்ணிக்க முடியாதவை. அநீதிக்கு எதிராக உலகில் திகழ்ந்த ஒரேயொரு சக்தியான கிலாஃபத்தின் மறைவு முழு உலகையும் முழுமையான கொடுங்கோண்மைக்குள் தள்ளிவிட்டது. கொடுங்கோண்மையும், ஏற்றத்தாழ்வுகளும், வன்முறையும் நிறைந்த இன்றைய உலக ஒழுங்கின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றார்கள். மாற்றம் குறித்த பலத்த எதிர்பார்ப்புடன் இருக்கும் மக்களுக்கு இன்று இருக்கின்ற ஒரே தீர்வு அல்லாஹ்(சுபு) ஷரீஆவை அமூல்செய்யும் கிலாஃபாதான் என்ற செய்தியை முஸ்லிம்கள் உரத்து முழங்க வேண்டும். இன்றைய யதார்த்தம் எது? நிகழ்ச்சி கிலாஃபத்தின் அழிவு, அதன் மீதான மக்களின் எதிர்பார்ப்பு, அதற்கான சாதகமான நிலைகள், முஸ்லிம்களின் பொறுப்புக்கள் போன்ற தலைப்புக்களை சுருக்கமாக ஆராய்கின்றது…