குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), குடிமக்களின் தேசிய பதிவு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) போன்றவற்றை எதிர்த்து இந்தியா முழுதும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. தீவிர வலது சாரி, இந்துத் தேசிய வாத சிந்தனையின் அடிப்படையில் ஆட்சி செய்யும் பிஜேபி அரசாங்கத்தை எதிர்த்து டெல்லி தொடக்கம், தமிழ்நாடு வரை முஸ்லிம்கள் தலைமையில் ஏனைய ஏனைய சிறுபான்மை சமூகங்களும், நீதியின் பக்கம் நிற்கும் நடுநிலையாளர்களும் பல வாரங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் பெருகிவரும் தீவிர தேசியவாத அரசியல் போக்கிலிருந்தும, அதற்கு அடிபணியாது தமது அடிப்படை உரிமைக்காக எவ்வித சமரசமும் செய்யாது போராடி வரும் இந்திய முஸ்லிம்களிடமிருந்தும் இலங்கை முஸ்லிம்கள் கற்க வேண்டிய பாடங்கள் பற்றி இன்றைய யதார்த்தம் எது? நிகழ்ச்சி ஆராய்கிறது.