நாம் ஹோலோகாஸ்டின் (யூத இன அழிப்பு) அட்டூழியங்களை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் செய்த போதிலும்இ முஸ்லிம்கள் பல ஆசிய நாடுகளில் இன அழிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று அமெரிக்காவிலுள்ள லாங் ஐலேண்ட் வக்கீல்கள் (Long Island advocates) எச்சரிக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெஸ்ட்பரியிலுள்ள லாங் ஐலேண்ட் இஸ்லாமிய மையம் (ICLI), நாசாவ் கவுண்டியின் ஹோலோகாஸ்ட் மெமோரியல் மற்றும் சகிப்புத்தன்மை மையம் (Glen Cove-based Holocaust Memorial and Tolerance Center-HMTC) ஆகியன இணைந்து ‘ஒரு போதும் நடக்காது என்றது மறுபடியும் நடக்கிறது – Never Again is Happening Again’ என்ற கருப்பொருளிலான கண்காட்சியை நடத்தினார்கள். இந்தக் கண்காட்சியில் உரையாற்றிய இந்த அமைப்புக்களின் தலைவர்கள் ஆசியாவில் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை அளவுக்கதிகமாக நடக்கிறது என்று கூறி அபாய மணி எழுப்பினர்.
இதன்போது உரையாற்றிய ஸ்டீவன் மார்கோவிட்ஸ் “மேற்கு சீனா, இந்தியா, காஷ்மீர் மற்றும் மியான்மரில் என்ன நடக்கிறது? – முஸ்லீம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அரசாங்கத்தின் அனுசரணையுடன் நடாத்தப்படும் இனப்படுகொலைகள், இனத் தூய்மைச் சட்டங்கள், வதை முகாம்கள் என்பன மக்களை சமூகத்திலிருந்தும், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், பாடசாலை போன்றவற்றிலிருந்தும் விலக்கி வைக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் யூதர்கள் அனுபவித்ததை விட இவை எதுவும் வேறுபட்டதல்ல.”
“நாங்கள் மெளனமாக இருக்க மாட்டோம், மீண்டும் உலகம் மெளனமாக இருப்தை அனுமதிக்கவும் மாட்டோம்.” என்று கூறினார்.
சீனாவின் வடமேற்கு சின்ஜியாங் மாகாணத்தில், குறைந்தபட்சம் 1 மில்லியன் உய்குர் முஸ்லிம்கள் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மையங்கள் என்ற பெயரில் போலியாக இயங்கும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை கண்காணிப்பாளர்கள் உண்மையில் இது கடும் ஊழிய தொழிலாளர் முகாம்கள் என்று கூறுகின்றனர். அதே நேரத்தில் இந்திய பிரதேசமான காஷ்மீரில் குறைந்தது 100,000 முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வல்லுநர்களும், நிபுணர்களும் கூறுகின்றனர். மியான்மரில் சுமார் 1 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் 10,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதைக்கண்டு “நாங்கள் தன்னம்பிக்கை இழந்து விடக்கூடாது; மாறாக மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும் ஊக்கமளிக்க வேண்டும்“,
“நாட்டில் 90 சதவிகிதமான மக்களுக்கு இப்படி ஒரு விடயம் நடக்கிறது என்று கூட தெரியாது. இதை என்னால் உறுதியாகக் கூற முடியும் ” என்று யு.எஸ். பிரதிநிதி டாம் சுயோஸி – U.S. Rep. Tom Suozzi (D-Glen Cove) கூறினார்.
டாக்டர் மும்தாஜ் மிர் மற்றும் ஹபீப் அகமது ஆகியோரின் காஷ்மீரில் நடந்த இனப்படுகொலைகள், பர்மாவில் உள்ள வதை முகாம்களை நேரில் கண்ட சாட்சியத்தின் விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் முக்கிய பேச்சாளரான அறிஞர் டாக்டர் இமாம் மாலிக் முஜாஹித், காஷ்மீரில் நடந்த இனப்படுகொலையை ஆவணப்படுத்தும் செயற்கைக்கோள் படங்களையும் பர்மாவில் உள்ள வதை முகாம்களைப் பற்றியும் விவரித்து கூரினார்.
“ஹோலோகாஸ்டில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை எங்களால் புறக்கணிக்க முடியாது; அதை நாங்கள் புறக்கணித்தால், நாங்கள் வரலாற்றை மீண்டும் எழுதுகிறோம்“.
“அக்காலத்தில் வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்த துரதிர்ஷ்டவசமான நபர்களாக நாங்கள் இருக்க விரும்பவில்லை; அவர்கள் அலட்சியமாக இருக்க விரும்பினர். அலட்சியம் என்பது ஒரு பாவம், இதைத்தான் நாம் ஒருவருக்கொருவர் நினைவூட்ட வேண்டும்.” என்று (ICLI) தலைவர் இஸ்மா சவுத்ரி கூறினார்.