காதல் ஒரு இயற்கையான உணர்வு. இந்த உணர்வின்காரணமாகத் தான் திருமணங்கள் நடைபெறுகின்றன; சந்ததிகள் உருவாக்கப்படுகின்றன; மனித இனமே மரித்து விடாமல் நீடித்து வாழ்கின்றது. காதல் உணர்வை இறைவன் படைத்ததன் நோக்கமே இதுதான்: மனித இனத்தின் நீடித்த வாழ்வு.
காதல் உணர்வுகளைத் திருப்திப் படுத்துவதற்கான மிகச் சரியான வழிகாட்டுதல்களை இஸ்லாம் வழங்குகின்றது. அந்த உணர்வுகள் முற்றாக அடக்கப்படுவதையோ அல்லது விலங்குகளுக்குள் காணப்படுவது போல் வரையறைகள் அற்று இருப்பதையோ இஸ்லாம் விரும்பவில்லை.
இஸ்லாம் அல்லாத பிற மதங்கள் இந்தக் காதல் உணர்வை அருவருப்பானதாகப் பார்க்கின்றன. இந்த உணர்வை அடக்குவதன் மூலமாகத்தான் மனிதன் இறைவனை நெருங்கலாம் என அவை நம்புகின்றன. அதனால் தான் பிற மதங்களின் மதகுருக்கள் எவரும் திருமணங்கள் செய்து கொள்வதில்லை. இது இறைவனின் நோக்கத்திற்கு முரணானது. இயற்கையோடு முரண்படும் இந்த நிலைப்பாடு பாலியல் குற்றச் செயல்களையும் பிறழ்வான நடத்தைகளையுமே தோற்றுவிக்கும். கத்தோலிக்கத்தின் தலைமையகமான வத்திக்கானில் இடம்பெறும் சிறுவர்துஸ் பிரயோகங்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
அதேவேளை, மத ஒதுக்கல் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் மேலைத்தேயச் சமூகங்களில் காதல் உணர்வின் ஒரே நோக்கம் பாலியல் இன்பங்களை உச்சப்படுத்துவதாகவே கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக மேலைத்தேய மனிதன் மிருகமாக மாற்றமடைந்து கொண்டிருக்கின்றான். உதாரணமாக, டென்மார்க் நாட்டில் மிருகங்களை விபச்சாரத்திக்குப் பயன்படுத்துகின்றார்கள். அவர்களுடைய விடுதிகளில் பன்றிகளுக்கும் குரங்குகளுக்கும் மேக்கப் போட்டு வைத்துக்கொண்டு தம் வாடிக்கையாளர்களைக் கவருகின்றார்கள் .
மேலைத்தேயச் சமூகங்கள் திரைப்படங்கள், விளம்பரங்கள், இசை, மற்றும் பாடல்கள் மூலமாக மக்களின் காம உணர்வுகளைத் தொடர்ந்தும் தூண்டிக்கொண்டே இருக்கின்றன: 11 வயதிலேயே சிறுவர் சிறுமியர்க்கு பாலியற் கல்வி கட்டாயமாக ஊட்டப்படுகின்றது; தன்னினச் சேர்க்கை இயற்கையானது எனப் போதிக்கப்படுகின்றது; அதில் ஈடுபடும்படி சிறுவர் சிறுமியர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இவ்வாறான தூண்டல்களின் விளைவாகவே அச் சமூகங்களில் அதிக அளவான பாலியல் விரக்தியும், அதிக அளவான பாலியல் குற்றச் செயல்களும் காணப்படுகின்றன.
இங்கிலாந்தில் கருச்சிதைப்பு செய்து கொள்ளும் சிறுமிகளின் குறைந்த வயது வெறும் பன்னிரெண்டு மாத்திரமே. 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்நாட்டில் சுமார் 57 சிறுமிகள் தம் 18 வயதை அடைவதற்கும் முன் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் கருச்சிதைப்பு செய்து கொண்டார்கள், (Daily Telegraph 25-05- 2012)
இஸ்லாம் திருமண உறவுகளுக்குள் மாத்திரம் காதல் உணர்வுகள் தூண்டப்படுவதற்கு அனுமதிக்கின்றது. பொதுவாழ்வில் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலப்பதையோ, காதல் உணர்வுகள் தூண்டப்படுவதையோ அது அனுமதிப்பதில்லை. ஆணும், பெண்ணும் அடக்கமாகவும், ஒழுக்கமாகவும் ஆடை அணிவதை அது போதிக்கின்றது. காமத்தை தூண்டும் சினிமாக்கள், விளம்பரங்கள், பாடல்கள் அனைத்தையும் அது தடைசெய்கிறது; விபச்சாரத்துக்கான வசதிகளை ஏற்படுத்தும் விடுதிகள் போன்றவற்றையும் அது தடைசெய்கிறது. அதேவேளை, திருமணத்தை ஊக்குவிப்பதுடன், திருமணம் செய்வதையும் அது இலகுவாக்கிக் கொடுக்கின்றது. இவ்வாறன ஒரு சமூகக் கட்டமைப்பின் கீழ் மக்கள் வாழும் போது அவர்கள் பாலியல் விரக்திக்கு ஆளாவதில்லை. அவர்கள் மன நிம்மதியுடனே, பாவச் செயல்களைத் தவிர்ந்துகொண்டும் ஹலாலான முறையில் தமது உணர்வுகளைப் பூரணமாகத் திருப்திப் படுத்திக் கொண்டும் வாழ முடிகின்றது.
இங்கு ஊன்றிக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில், இஸ்லாமும் மேற்கத்தியமும் ஒன்றுக்கொன்று முரணான, அதேவேளையில் தனித்துவமான இரண்டு விதமான சமூகக்கட்டமைப்புகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. ஒன்று, வஹியின் அடிப்படையிலானது; மற்றது சாத்தானியத்தின் தூண்டுதலில் அமைந்தது. இஸ்லாம் வழங்கும் வாழ்வொழுங்குகள், மத ஒதுக்கல் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் மேலைத்தேயச் சமூகங்கள் முன்வைக்கும் வாழ்வொழுங்குகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை.
இஸ்லாமும், மேற்குலகும் தத்தமது கலாச்சாரமும், சமூகக் கட்டமைப்புக்களுமே மேலானது எனவும் மற்றவரின் கலாச்சாரமும், சமூகக் கட்டமைப்புகளும் பின்னடைவானது எனவும் வாதிடுகின்றன. அதே வேளை தம் சொந்தக் கலாச்சாரத்தையும், சமூகக் கட்டமைப்பையும் உலகமெல்லாம் பரவச் செய்யும் வேலையிலும் அவை ஒவ்வொன்றும் ஈடுபடுகின்றன. இதன் காரணமாக, இஸ்லாமியத்திற்கும் மேற்கத்தியத்திற்கும் இடையிலான ஒரு “கலாச்சார மோதல்” தோற்றம் பெறுகின்றது. மேற்கத்தேயத்தின் கலாச்சாரத் தாக்குதல்களுக்கு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மாத்திரம் அன்றி இலங்கை போன்ற சிறுபான்மை நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் ஆளாகி வருகின்றனர்.
மேற்குலகின் கலாச்சார ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் இஸ்லாமிய கலாச்சாரத்தை மட்டுமல்லாது அனைத்து ஆசிய, ஆபிரிக்க கலாச்சாரங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கின்றது. எனினும் மேற்குலகின் கலாச்சார ஊடுருவலை மிகுந்த அக்கறையோடு இஸ்லாம் மாத்திரமே எதிர்க்கின்றது. அதில் கணிசமான அளவு வெற்றியும் அது கண்டுள்ளது. இலங்கை வாழ் ஹிந்து, பௌத்த, முஸ்லிம் சமூகங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் ஆடைக்கலாச்சார மாறுபாடுகளை அவதானிக்கும்போது இது தெளிவாகும்.
முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமியக் கலாச்சாரத்தின் வளர்ச்சியைத் தெளிவாக அவதானிக்க முடிகின்றது. அதேவேளை, இலங்கை அரசு, இலங்கையில் காணப்படும் ஹிந்து, பௌத்த, முஸ்லிம் கலாச்சரங்கள் அனைத்திற்கும் மாற்றமான மேலைத்தேய வடிவிலான ஒரு சமூகக் கட்டமைப்பை ஏற்படுத்த முனைவதும் தெளிவாகத் தெரிகின்றது. உதாரணமாக, கல்விக்கல்லூரி மாணவ மாணவியர் திருமணம் செய்து கொள்வதற்கான தடைகளையும், சில அரச பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இலவச கருச்சிதைப்பு வசதிகளையும் குறிப்பிடலாம்.
காதலர் தினக் கொண்டாட்டங்கள், மேற்குலகின் காமக் கலாச்சாரத்தை உலகமெல்லாம் பரப்பும் ஒரு முயற்சியே ஆகும். ஹிந்து, பௌத்த சகோதர இனங்களையும் இணைத்துக்கொண்டு இந்த மேற்குலகின் கலாச்சார ஏகாதிபத்தியத்தின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களாகிய எம்மீது உள்ளது.
இறுதியாக, இன்று அமெரிக்காவின் தலைமையில் “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்” என்ற பெயரில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான ஒரு யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த யுத்தம் இராணுவ, கலாச்சார, அறிவியல் வடிவங்களையும் எடுத்துள்ளது. அந்த வகையில் காதலர் தினம் என்பது ஒரு கலாச்சார யுத்தப் பிரகடனமாகும்!