ராஜபக்ச சகாப்தத்தின் முன்னாள் சிறீ லங்கா ஏயாலைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபிலா சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரை இலங்கை-ஏர்பஸ் ஒப்பந்தத்தில் ஊழல் செய்த குற்றச்சாட்டில் பிப்ரவரி 19 வரை கைது செய்ய, கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 6 ஆம் திகதி உத்தரவிட்டது. இந்த ஊழலானது தேசிய போக்குவருத்துக்கான செலவை 17 பில்லியன் ரூபாய்க்கு மேல் (116 மில்லியன் அமெரிக்க டாலர்) அதிகரிக்கும்.
சிறீ லங்கா ஏயாலைன்ஸ்க்கான விமான கொள்முதல் தொடர்பாக இடம்பெற்ற ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளமைக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும், மேலும் இவ் இரு நபர்களும் வேறு சில நபர்களுடனும், நிறுவனங்களுடனும் சேர்ந்து சதி செய்திருப்பதாகவும் அதற்குறிய விசாரணைகள் தொடர்வதாகவும் சி.ஐ.டி நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இலங்கை நீதி அமைச்சின் கோரிக்கைக்கு இணங்க, சிங்கப்பூரின் மத்திய ஆணையம் (Attorney General’s Chambers) 2002இன் 25ஆம் இலக்க ஏற்பாட்டின் படி, குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவி செய்தல் என்பதன் கீழால், பிஸ் சொல்யூஷன்ஸின் (Biz Solutions) நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் ( Standard Chartered Bank) பராமரிக்கப்படும் மூன்று கணக்குகளின் தகவல்கள் பற்றிய பல ஆவணங்களை 06/11/2019 இல் வழங்கியது என சி.ஐ.டி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
சிங்கப்பூரின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் ( Standard Chartered Bank) பராமரிக்கப்படும் (கணக்கு இல: 0107130602) பிஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் ஒரு கணக்கை வைத்திருந்த பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சமாக ஈஏடிஎஸ் தலைமையகம் (EADS HQ), எஸ்எஸ்சி பிரான்ஸ்( SSC France) ஊடாக பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இந்நிறுவனமானது ( European Aeronautic Defence and Space Company N.V.) ஏர்பஸ் எஸ்ஏஎஸ் (Airbus SAS) இன் தலைமை நிறுவனமாகும்.
அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் வங்கியிளிருக்கும் கணவர் கபிலா சந்திரசேனாவின் (கணக்கு இல: 06323610119179) கணக்கிற்கு பணத்தை அனுப்பியதன் மூலம் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க பணமோசடி குற்றத்தைச் செய்திருக்கிறார்.
இது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு CIABOC (லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம்) இன் இயக்குநர் ஜெனரலுக்கு CID அறிவித்துள்ளது.