ஒரு சேவல் தினமும் அதிகாலையில் அதான் சொல்லிக் கொண்டிருந்தது.
ஒரு நாள் சேவலின் உரிமையாளர் வந்து “மீண்டும் ஒருபோதும் அதான் சொல்லக்கூடாது. மீறிச் சொன்னால் உனது இறகுகளை பிடிங்கி விடுவேன்” என்று பயமுறுத்தினார்.
சேவல் பயந்துபோய் நிர்ப்பந்த நிலையில் தடைசெய்யப்பட்டவை அனுமதிக்கப்படும்”
“ஷரியா அரசியலில் படி என்னைப் பாதுகாத்துக் கொள்ள என் கொள்கைகளில் நான் சமரசம் செய்யலாம்” என்று தனக்குள் கூறிக்கொண்டு சேவல் அதான் சொல்வதை நிறுத்தி விட்டது.
ஒரு வாரம் கழித்து சேவலின் உரிமையாளர் மீண்டும் வந்து “நீ இனிமேல் கோழிகளைப் போல கொக்கரிக்கவில்லையானால் நான் உனது இறகுகளை பிடுங்கி விடுவேன்” என்று எச்சரித்தார்.
மீண்டும் சேவல் ஒரு சமரசம் செய்து கோழிகளைப் போல கொக்கரிக்க ஆரம்பித்தது
பின்னர் ஒரு மாதம் கழித்து வந்த உரிமையாளர்,
“இப்போதே நீ அந்தக் கோழிகளைப் போல முட்டையிடாவிட்டால் நாளை உன்னை அறுத்து விடுவேன்” என்று சேவலிடம் சொன்னார்.
அந்த நேரத்தில் சேவல்,
“நான் அதான் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே இறந்திருக்கக் கூடாதா…” என்று அங்கலாய்ந்து அதன் இறகுகள் ஈரமாகும் வரை அழுதது.
உங்கள் கொள்கைகளில் நீங்கள் செய்யும் சமரசங்களின் சங்கிலியும் இப்படியானதுதான்…
சூழ்நிலைகள், காரணங்கள், சிபாரிசுகள் எதுவாக இருந்தாலும் உங்கள் கொள்கைகளில் சமரசம் செய்து விடாதீர்கள்…
உங்கள் கொள்கையில் நீங்கள் செய்யும் முதலாவது சமரசம் உங்கள் விருப்பப்படி செய்யப்படுகிறது. ஆனால் அடுத்தடுத்த சமரசங்கள் கட்டாயப்படுத்தி செய்விக்க படுகின்றவை என்பதை உறுதியாக தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய மார்க்த்தில் சமரசங்களைச் செய்கின்ற சரிவிலே நீங்கள் வழுகிச் சென்று கொண்டிருக்கும்போது மார்க்கத்தில் உறுதிப்பாட்டுடன் இருப்பவர்களை பார்த்து தீவிரவாதிகள் என்று அழைக்காதீர்கள். மாறாக உங்களுடைய கால்களை குணிந்து பார்த்து, அவை சகதிக்குள் எந்தளவு தூரத்திற்கு மூழ்கி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
“ஹராம் தொடர்ந்து ஹராமாகத்தான் இருக்கும், எல்லோரும் சேர்ந்து அதனைச் செய்தாலும் கூட…”
எனவே நீங்கள் பிறரைப் பற்றி அலட்டிக்கொள்ளாதீர்கள்…ஏனெனில் நீங்கள் தனியாக விசாரிக்கப்படுவீர்கள்.
ஆகவே எப்போதும் சரியான போக்கிலேயே இருங்கள்…உங்களுக்கு ஆணை இடப்பட்டிருப்பதன் படி… உங்கள் விரும்பு வெறுப்பின்படி அல்ல.
ஒரு ஆப்பிரிக்க பழமொழி உண்டு
“சிங்கம் பசித்தாலும் புல் திண்ணாது” என்று
உங்கள் வயிறு காலியாக இருக்கிறது என்பதற்காக உங்கள் கொள்கைகளை மாற்றி விடாதீர்கள்…
இறுதியாக, உங்கள் உள் மனதில் இது ஹலால், இது ஹராம் என்று ஒலிக்கின்ற அந்த சப்தம் குறித்து அவதானமாக இருங்கள்…அதனை நீங்கள் என்றாவது இழந்து விடக்கூடும்…
சேவலாக இருந்து இறந்து விடுங்கள்…இல்லையெனில் நீங்கள் முட்டையிட வேண்டி வரும்…